புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய 2 கார்களும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இவை இரண்டுமே இந்திய சந்தைக்கு புதுவரவுகள் ஆகும்.

இதில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில், 1.5 லிட்டர் கே15சி மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!

முன்பதிவு நிறுத்தம்

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல்களுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளதால்தான், முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக டொயோட்டா டீலர்ஷிப்களில் விசாரித்தபோது நமக்கு தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த 2 கார்களையும் முன்பதிவு செய்தால், டெலிவரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

எனவே பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவே டொயோட்டா நிறுவனம் இந்த 2 கார்களின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல்களுக்கு முன்பதிவுகளை ஏற்பதை தற்போது நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. எனினும் இந்த முடிவு தற்காலிகமானதுதான் என கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவிலேயே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல்களுக்கும் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!

பரிமாறப்படும் கார்கள்!

இதில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. டொயோட்டா நிறுவனமும், சுஸுகி நிறுவனமும் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டிருப்பதால், 2 நிறுவனங்களுக்கும் இடையே கார்கள் பரிமாறி கொள்ளப்படுகின்றன. இதன்படி டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை, மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிராண்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷன் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் டொயோட்டா நிறுவனமானது, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) எம்பிவி ரக காரை வெகு விரைவில் தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஏற்கனவே...

முன்னதாக மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரை டொயோட்டா நிறுவனம் க்ளான்சா (Toyota Glanza) என்ற பெயரில் தனது பிராண்டில் விற்பனை செய்து கொண்டுள்ளது. இவை இரண்டும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார்கள் ஆகும். இதுதவிர மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) காரை, டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser) என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது.

இவை இரண்டும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள் ஆகும். ஆனால் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் வருகை இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரே பெயரில் 2 கார்களை விற்பனை செய்ய வேண்டாம் என கருதி டொயோட்டா நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross urban cruiser hyryder strong hybrid variants bookings stopped
Story first published: Saturday, January 28, 2023, 19:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X