டெலிவரி தொடங்கியாச்சு.. இனி ஃபார்ச்சூனருக்கு பதிலா இந்த காருலதான் எல்லா அரசியல்வாதிகளும் வலம் வர போறாங்க!

டொயோட்டா நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லேண்ட் க்ரூஸர் 300 காரின் புக்கிங் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன. இது தொடங்கப்பட்டு சில தினங்களே ஆகின்ற நிலையில் இப்போது அந்த காரின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் பதிவெண் பிளேட்டைத் தாங்கிய லேண்ட் க்ரூஸர் 300 சொகுசு காரின் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் லேண்ட் க்ரூஸர் 300 கார் மாடலின் டீசல் எஞ்ஜின் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மோட்டாருடன் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது. வேறு டிரான்ஸ்மிஷன் தேர்வு இந்த கார் மாடலில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மிகவும் பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருப்பது சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300

அரசியல்வாதிகளின் ஃபேவரிட் கார்

குறிப்பாக லேண்ட் க்ரூஸர் 300 இந்திய அரசியல்வாதிகளின் ஃபேவரிட் கார் மாடலாக இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை இந்திய அரசியல்வாதிகளையே அதிக மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என வாகன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இந்த கார் மாடல் இல்லாத காரணத்தினாலேயே தற்போது அரசியல் பிரமுகர்களின் முக்கிய வாகனமாக ஃபார்ச்சூனர் மாறியிருக்கின்றது. கூடிய விரைவில் இந்த காரின் இடத்தை லேண்ட் க்ரூஸர் தட்டி பறிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை ரொம்ப ரொம்ப அதிகம்

இந்த காரில் பயணிக்கும்போது அதிக சொகுசான பயண அனுபவம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தை டொயோட்டா நிறுவனம் அதன் பிரபல மாடுலர் டிஎன்ஜிஏ-எஃப் பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கி இருக்கின்றது. இந்த பிளாட்பாரமே எல்சி 300 காரை சொகுசு அம்சங்கள் நிரம்பிய வாகனமாக உருவாகக் காரணமாக இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக 2.17 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Image Courtesy: Pratik Jadhav

மஹாராஷ்டிராவில் டெலிவரி

மேலே பார்த்தது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றார். கோலாபூரைச் சேர்ந்த பிரதிக் ஜாதவ் எனும் நபருக்கே டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 டெலிவரி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் 200 கிலோ எடைக் குறைவாக புதிய லேண்ட் க்ரூஸர் 300 உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

தொழில்நுட்ப வசதிகள் தாராளம்

எடை குறைந்திருக்கின்ற காரணத்தினால் காரின் சஸ்பென்ஷன் மிக சிறப்பானதாக மாறியிருக்கின்றது. குறிப்பாக, ஆஃப் ரோடில் பயணிக்கும்போது பெரியளவில் குலுங்கல்கள் தெரியாது என கூறப்படுகின்றது. இதுதவிர, ஹேண்ட்லிங் அம்சம் பலமடங்கு மேம்படுத்தப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், அதீத சொகுசான பயணத்தை இந்த கார் வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதேபோல், தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா எல்சி300

அந்தவகையில், எல்இடி ஹெட்லேம்ப், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் லேண்ட் க்ரூஸர் 300 காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் லேண்ட் க்ரூஸர் 300 காரை டொயோட்டா விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

வண்ண தேர்விலும் தாராளம்

ஒயிட் பியர்ல், சூப்பர் ஒயிட், டார்க் ரெட் மைக்கா மெட்டாலிக், ஆட்டிட்யூட் பிளாக் மற்றும் டார்க் ப்ளூ மைகா ஆகிய நிற தேர்வுகளிலேயே அக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். மோட்டாரை பொருத்த வரை ஏற்கனவே கூறியதைப் போல் டீசல் மோட்டார் தேர்வில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கும். 3.3 லிட்டர் ட்வின் டர்போ வி6 டீசல் மோட்டார் தேர்வில் மட்டுமே எல்சி300 விற்பனைக்குக் கிடைக்கும்.

சூப்பர் பவரை வெளியேற்றும் மோட்டார்

இந்த மோட்டார் அதிகபட்சமாக 309 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. அதேவேளையில், சர்வதேச சந்தையில் இந்த மோட்டாருடன் சேர்த்து 3.5 லிட்டர் ட்வின் டர்போ வி6 பெட்ரோல் தேர்வும் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 415 பிஎஸ் பவரையும், 650 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் பக்கம் இந்தியர்களை ஈர்க்கும் விதமாக 3 ஆண்டுகள் / 1 லட்சம் கிமீ வாரண்டியை டொயேட்டா அறிவித்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota lc300 delivery begin
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X