அரசியல்வாதிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த டொயோட்டா கார் அறிமுகம்! கொத்து கொத்தா அள்ளிட்டு போக போறாங்க..

இந்தியர்களின் பெரிதும் எதிர்பார்ப்பான எல்சி 300 காரை ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக டொயோட்டா நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய அரசியல்வாதிகளுக்கு பிடித்தமான தோற்றம் மற்றும் ஸ்டைல் கொண்ட காரை டொயோட்டா நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. நேற்றைய (ஜனவரி 11) தினம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே அந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. எல்சி 300 காரையே அது காட்சிப்படுத்தியது. நேற்றைய தினத்தில் நிறுவனம் சற்றும் எதிர்பார்த்திராத பிஇசட்4இ எலெக்ட்ரிக் காரைக் காட்சிப்படுத்தி இருந்தது. இதன் உடன் சேர்த்து இன்னும் சில கார் மாடல்களையும் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.

எல்சி 300

புக்கிங் தொடங்கப் போறாங்க

அதில் ஒன்றே எல்சி300 ஆகும். இந்த காருக்கு இந்திய சந்தையில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, இந்த காரை உலக அரங்கில் 2021 ஆம் ஆண்டில் டொயோட்டா அறிமுகம் செய்ததில் இருந்தே இந்த காருக்கு எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய வாகனத்தையே நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. மேலும், வெகு விரைவில் இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் கேஎன் நேரு இந்த கார வச்சிருக்காரு

இந்த பணிகள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இந்த காரை ஏற்கனவே இந்தியாவில் ஒரு சில அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், அமைச்சர் கேஎன் நேரு இந்த காரையே பயன்படுத்தி வருகின்றார். இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு முன்னதாகவே பிரத்யேக இறக்குமதி செய்து அவர் டொயோட்டா எல்சி 300 சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்சி 300

நிற தேர்வு

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. கூடிய விரைவிலேயே இது பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஒயிட் பியர்ல், சூப்பர் வெள்ளை, டார்க் ரெட், மைகா மெட்டாலிக், ஆட்டிட்யூட் பிளாக் மற்றும் டார்க் ப்ளூ மைகா ஆகிய நிற தேர்வுகளிலேயே அது எதிர்பார்க்கப்படுகின்றது.

மோட்டார் விபரம்

தற்போது சர்வதேச சந்தையில் இந்த கார் இரு விதமான மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 3.5 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி6 பெட்ரோல் மற்றும் 3.3 லிட்டர் வி6 டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்தியாவில் 3.3 லிட்டர் ட்வின் டர்போ வி6 டீசல் மோட்டார் தேர்வில மட்டுமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 309 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

எல்சி 300

வாரண்டி விபரம்

இத்துடன் 4X4 டிரைவ் சிஸ்டமும் இந்தியா ஸ்பெக் எல்சி300 கார் மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக 3 ஆண்டுகள் / 1 லட்சம் கிமீ வாரண்டியையும் டொயேட்டா வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முற்றிலும் அட்டகாசமான மற்றும் கவர்ச்சியான வசதிகள் கொண்ட பிரமாண்ட காராக டொயோட்டா எல்சி 300 கார் காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்த கார் இந்தியர்களின், குறிப்பாக, இந்திய அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.

சிறப்பம்சம்

எல்சி300 காரில் சிறப்பு அம்சங்களாக 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட், மல்டிபிள் டிரைவ் மோட்கள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும். இதுமட்டுமில்லைங்க அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் மிகவும் சொகுசான ரைடை வழங்கக் கூடிய அம்சங்களையும் இந்த காரில் டொயோட்டா வாரி வழங்கி இருக்கும்.

மிகவும் மிருதுவான இருக்கை அமைப்பு மற்றும் நீண்ட தூரம் பயணித்தாலும் அசதியை ஏற்படுத்தாத பயண அனுபவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தக் கூடிய அம்சங்கள் பலவற்றை இந்த காரில் டொயோட்ட வாரி வழங்கி இருக்கின்றது. இந்த காரை டொயோட்டா நிறுவனம் அதன் புகழ்பெற்ற டிஎன்ஜிஏ-எஃப் பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. கூடிய விரைவில் இந்த காரை டொயோட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தகவலுக்காக கேஎன் நேரு போன்ற அரசியல்வாதிகள் பலர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Toyota lc300 unveiled at 2023 auto expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X