டொயோட்டா கார் ஓனர்களின் தலையில் குண்டை தூக்கி போட்டுட்டாங்க! இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல!

இந்திய சந்தையில் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய 2 கார்களும், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த சூழலில், இந்த 2 கார்களுக்கும் டொயோட்டா நிறுவனம் தற்போது ரீகால் (Recall) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 1,390 கார்கள் ரீகால் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியில் இருந்து நடப்பு 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இந்த காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 1,390 டொயோட்டா க்ளான்சா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களின் ஏர்பேக் கண்ட்ரோலர் யூனிட்டில் (Airbag Controller Unit) பிரச்னை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

டொயோட்டா கார் ஓனர்களின் தலையில் குண்டை தூக்கி போட்டுட்டாங்க! இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல!

இந்த கார்களில் என்ன பிரச்னை?

இந்த பிரச்னையால், ஏர்பேக் விரிவடையாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிர்ஷ்டவசமாக இன்றைய தேதி வரை, இந்த பிரச்னையால் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. எனவே எவ்விதமான அசம்பாவிதங்களும் நிகழ்வதற்கு முன், ஏர்பேக் கண்ட்ரோலர் யூனிட்டை பரிசோதித்து, பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதனை மாற்றி தருவதற்காகவே டொயோட்டா நிறுவனம் தற்போது ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரச்னை சரி செய்யப்படும் வரை கவனமா இருங்க!

உங்கள் காரில் இந்த பிரச்னை இருந்தால், டொயோட்டா நிறுவனம் அதனை இலவசமாகவே சரி செய்து தந்து விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதற்காக டொயோட்டா டீலர்ஷிப்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும். அதன்பின் பிரச்னை சரி செய்து தரப்படும். எனினும் பிரச்னை சரி செய்யப்படும் வரை அந்த கார்களை பயன்படுத்துவதை குறைத்து கொள்வது நல்லது.

டொயோட்டா கார் ஓனர்களின் தலையில் குண்டை தூக்கி போட்டுட்டாங்க! இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல!

மாருதி கார்களிலும் பிரச்னை!

முன்னதாக மாருதி சுஸுகி நிறுவனமும் தற்போது 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களுக்கு ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த கார்களிலும் இதே பிரச்னைதான் இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ரீகால் செய்யும் கார்களில், பலேனோ (Baleno) மற்றும் க்ராண்ட் விட்டாரா (Grand Vitara) ஆகிய கார்கள் அடங்குகின்றன. எனவே டொயோட்டா க்ளான்சா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களிலும் பிரச்னை இருக்கலாம்.

எல்லாமே ஒரே கார்தான்!

ஏனெனில் இவை இந்த 2 நிறுவனங்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் கார்கள் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ கார்தான், டொயோட்டா பிராண்டில் க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களும் ஒன்றுதான். டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டணியின் மூலம் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்னும் நிறைய கார்களை ஷேர் பண்ணிக்க போறாங்க!

எதிர்காலத்தில் இந்த 2 நிறுவனங்களும் இன்னும் நிறைய கார்களை பரிமாறி கொள்ளவுள்ளன. இதில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிராண்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா, இங்கு ஏற்கனவே மிகவும் பிரபலமான கார் ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எர்டிகா திகழ்கிறது. இந்த காரை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட, மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், மாருதி சுஸுகி எர்டிகா காரின் டொயோட்டா வெர்ஷன் ஆவலை தூண்டியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota recall glanza urban cruiser hyryder
Story first published: Wednesday, January 18, 2023, 23:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X