இன்னோவாவை தூக்கி சாப்பிட போகுது! மைலேஜை வாரி வழங்கும் 7 சீட்டர் காரை குறைவான விலையில் களமிறக்கும் டொயோட்டா!

டொயோட்டா (Toyota) மற்றும் சுஸுகி (Suzuki) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் இந்திய சந்தையில் டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) ஆகிய 2 நிறுவனங்களும் ஒரு சில கார்களை பரிமாறி கொள்கின்றன. அதாவது மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனமும், டொயோட்டா கார்களை மாருதி சுஸுகி நிறுவனமும் விற்பனை செய்து வருகின்றன.

இந்த சூழலில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரக கார் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரை, டொயோட்டா நிறுவனம் ரூமியான் (Toyota Rumion) என்ற பெயரில் ஏற்கனவே தென் ஆப்ரிக்க சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ரூமியான் என்ற பெயரை இந்திய சந்தையிலும், டொயோட்டா நிறுவனம் பதிவு செய்து வைத்துள்ளது. எனவே இந்தியாவிலும் ரூமியான் என்ற பெயரிலேயே இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இன்னோவாவை தூக்கி சாப்பிட போகுது! மைலேஜை வாரி வழங்கும் 7 சீட்டர் காரை குறைவான விலையில் களமிறக்கும் டொயோட்டா!

இவ்ளோ சீக்கிரம் வரப்போகுதா!

அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் மைய பகுதியில், அதாவது மே, ஜூன் மாதங்களில் டொயோட்டா ரூமியான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசைனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவேதான், டொயோட்டா ரூமியான் காரும் இருக்கும். எனினும் க்ரில், டொயோட்டா பேட்ஜ் என ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும். பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பகுதி, அலாய் வீல்கள், பாடி பேனல்கள் மற்றும் இதர டிசைன் அம்சங்களில் இந்த 2 கார்களும் ஒன்று போலவே இருக்கும்.

அனுமார் வாலை போல் நீளும் வசதிகள்!

அதேபோல் டொயோட்டா ரூமியான் காரின் உட்புறமும், மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவேதான் இருக்கும். வசதிகளை பொறுத்தவரையில், லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், க்ரூஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுனர் இருக்கை, புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் ஏசி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய அம்சங்கள், டொயோட்டா ரூமியான் காரில் வழங்கப்படலாம்.

இன்னோவாவை தூக்கி சாப்பிட போகுது! மைலேஜை வாரி வழங்கும் 7 சீட்டர் காரை குறைவான விலையில் களமிறக்கும் டொயோட்டா!

சூப்பரான இன்ஜின்!

செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி எர்டிகா காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர், K15C ட்யூயல்ஜெட் இன்ஜின்தான் டொயோட்டா ரூமியான் காரிலும் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் வசதியுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படவுள்ளன.

மைலைஜை வாரி வழங்கும்!

டொயோட்டா ரூமியான் காரின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலானது, ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்க கூடிய மைலேஜாக இருக்கலாம். எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய மற்றும் சிறப்பான மைலேஜை வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கா!

இதுதவிர சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனுடனும், டொயோட்டா ரூமியான் கார் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி மாடல், ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக மைலேஜ் வழங்குவதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரை விட மிகவும் குறைவான விலையில் டொயோட்டா ரூமியான் விற்பனைக்கு வரும் என கூறப்படுவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

என்ன விலையில் எதிர்பாக்கலாம்?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலை 18.09 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) ஆகும். ஆனால் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை வெறும் 8 அல்லது 9 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிகவும் குறைவான விலையில், சிறப்பான மைலேஜை வழங்க கூடிய, அதே சமயம் அதிகம் பேர் பயணம் செய்யும் வகையில் தாராளமான இடவசதியையும் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா ரூமியான் வரப்பிரசாதமாக அமையலாம். இதுபோன்ற காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா ரூமியான் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota rumion mpv new details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X