காரை பாதியாக வெட்டி அதைக் கண்காட்சியில் வைத்த டொயோட்டா நிறுவனம்... காரணத்தை கேட்டா மிரண்டு போயிடுவீங்க!

டொயோட்டா நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் தனது இன்னோவா ஹைகிராஸ் காரை பாதியாக வெட்டப்பட்ட வடிவில் உள்ள கட்அவுட் வெர்ஷனை காட்சிப்படுத்தியுள்ளது. இதற்கான காரணத்தை விரிவாக காணலாம் வாருங்கள்

டில்லியை அடுத்த நொய்டாவில் தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2023 களை கட்டி வருகிறது. பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். புதிதாகப் பல கார்கள் பைக்குகள் எனப் பல வாகனங்களும், கான்செப்ட்களும், ஆட்டொமொபைல் தொழிற்நுட்பங்களும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மக்கள் பார்வைக்காக இந்த கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காரை பாதியாக வெட்டி அதைக் கண்காட்சியில் வைத்த டொயோட்டா நிறுவனம்... காரணத்தை கேட்டா மிரண்டு போயிடுவீங்க!

ஆட்டோ எக்ஸ்போ 2023

இங்கு வந்து மக்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் மற்ற பல விஷயங்களைப் பார்த்து ரசித்து அனுபவித்துச் செல்ல முடியும். இந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான மாருதி சுஸூகி, ஹூண்டாய், எம்ஜி எனப் பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. இதில் முக்கியமாக டொயோட்டா நிறுவனமும் பங்கேற்றுள்ளது.

டொயொட்டா நிறுவனம் இந்த கண்காட்சியில் தனது தயாரிப்புகள் பலவற்றை காட்சிப்படுத்தியுள்ளது. இதில் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் படி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் உள்ள இன்னோவா ஹைகிராஸ் கட் அவுட் வெர்ஷன் கார் தான். அதாவது காரை சரியாக நடுவில் கோடு போட்டு வெட்டியதை போல ஒரு காரை இந்நிறுவனம் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. பலருக்கு டொயோட்டா நிறுவனம் ஏன் இப்படி காரை வித்தியாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளது என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம்!

இந்த இன்னோவா ஹைகிராஸ் காரின் கட்அவுட் வெர்ஷனை பொருத்தவரை மக்களுக்கு காரின் உள்ள பாகங்கள் எங்கேங்கு இருக்கிறது. காரின் கட்டமைப்பு எப்படிச் செய்யப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு எளிதாகப் புரிய வைக்கத் தான் இதைச் செய்துள்ளது. முழு காராக இருக்கும் போது காருக்குள் உள்ள பாகங்கள் எல்லாம் வெளியே தெரியாது. இப்படியாகக் காரை பாதியாக வெட்டினால் காரின் பாகங்கள் எல்லாம் வெளியே தெரியும். இதனால் மக்கள் எளிதாக இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இதற்காக இந்த கட் அவுட் வெர்ஷனில் உதிரிப் பாகங்கள் அருகே அது என்ன பாகம் என்ற பெயர் பலகையையும் டொயோட்டா நிறுவனம் வைத்துள்ளது. முக்கியமாக ரேடார் சென்சார் போர்டு முன்பக்கம் இருப்பது, கேமரா, இ-டிரைவ், ஏர்பேக், பேட்டரி, ஃபிளாட் ஃப்ளோர், ஆகிய பாகங்கள் எல்லாம் முழு காராக இருக்கும் போது தெரியாது. ஆனால் இந்த கட் அவுட் வெர்ஷனில் அது தெளிவாகத் தெரிகிறது. வாடிக்கையாளர்களுக்கு இதைப் புரிய வைக்கவே டொயோட்டா நிறுவனம் இப்படியாக முயற்சியைக் கையாண்டுள்ளது. பொதுவாக இதற்காக வரைபடம் மூலம் மட்டுமே விளக்கம் கொடுக்கப்பட்டு வந்தது.

கட்அவுட் வெர்ஷன்

ஆனால் ஆட்டோ எக்ஸ்போவில் அதிகமாக மக்கள் வருவதால் இப்படியாக ஒரு காரை வடிமவைத்து வைத்தால் பெரும்பாலான மக்களுக்கு இதன் டிசைன் புரியும் என்பதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்து அதை செயல்படுத்தியுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டாவின் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் பலரின் கவனத்தையும் இந்த இன்னோவா ஹைகிராஸ் கட்அவுட் வெர்ஷன் கார் செய்கிறது.

இன்னோவா ஹைகிராஸ் காரை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் ரூ18.30 லட்சம் முதல் ரூ28.97 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் 7 சீட்டர், 8 சீட்டர் லேஅவுட்களில் விற்பனைக்கு வருகிறது. இன்னோவா ஹைகிராஸ் காரின் இன்ஜினை பொருத்தவரை 2 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இல்லாத இன்ஜின் ஆகிய ஆப்ஷன் இருக்கிறது. இந்த காரின் உள்ளே 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, வென்டிலேட்டட் முன்பக்க சீட்கள், பானரோமிக் சன் ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங், 360 டிகிரி கேமரா மற்றும் கனெக்டெட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

Most Read Articles
English summary
Toyota showcased Innova hycross cut out version in auto expo 2023
Story first published: Monday, January 16, 2023, 14:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X