எதிர்காலத்துல இதான் ஊரெல்லாம் ஓட போகுது! டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஃபிளக்ஸ் ஃப்யூயல் கார் அறிமுகம்!

டொயோட்டா நிறுவனம் தனது கரொல்லா ஆல்டிஸ் ஃபிளக்ஸ ஃப்யூயல காரை ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் இ20 முதல் இ85 முதல் அனைத்து ரக ஃபிளக்ஸி ஃப்யூயலிலும் இயங்கும் திறன் கொண்டது. இது குறித்து விரைவாகக் காணலாம்.

மத்திய அரசு பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் முடிவை எடுத்த பின்பு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் இன்ஜின்களை ஃபிளக்ஸி ஃப்யூயல் இன்ஜின்களாக ட்யூன் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது டொயோட்டா நிறுவனம் தனது கரொல்லா ஆல்டிஸ் காரின் ஃப்ளக்ஸி ஃப்யூயல் இன்ஜினை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்துல இதான் ஊரெல்லாம் ஓட போகுது! டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஃபிளக்ஸ் ஃப்யூயல் கார் அறிமுகம்!

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரை பொருத்தவரை பிரேசிலில் இந்நிறுவனம் விற்பனை செய்யும் ஹைபிரிட் ஃபிளக்ஸ் ஃப்யூயல் காரை தான் இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த டொயோட்டா கரொல்லா காரின் ஃபிளக்ஸி ஃப்யூயல் லைன் மற்றும் இன்ஜின் உள்ளிட்ட அம்சங்கள் துருப் பிடிக்காத படி கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனால் அதிகமாகத் துருப் பிடிக்கும் தன்மை கொண்டது என்பதால் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.

எதிர்காலத்துல இதான் ஊரெல்லாம் ஓட போகுது! டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஃபிளக்ஸ் ஃப்யூயல் கார் அறிமுகம்!

இந்த டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரை பொருத்தவரை ஹைபிரிட் செடான் காராக இருக்கிறது. பிரேசிலில் விற்பனையாகும் தான் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் 1.8 லிட்டர் ஃபிளக்ஸ்-ப்யூயல் இன்ஜின் உடன் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஃபிளக்ஸ் ஃப்யூயல் இன்ஜின் இ20 முதல் இ85 வரை உள்ள எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டது.

இந்த கார் 138 பிஎச்பி பவர் மற்றும் 177 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், இந்த கார் முன்பக்க வீல் டிரைவாக இருக்கிறது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 50 லிட்டர் ஃப்யூயல் டேங்கை கொண்டது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபிளக்ஸ்-ஃப்யூயல் கார்களில் இந்த டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரும் ஒன்று இது போக மாருதி சுஸூகி வேகன் ஆர் ஃபிளக்ஸ் ஃப்யூயல் காரும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

எதிர்காலத்துல இதான் ஊரெல்லாம் ஓட போகுது! டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஃபிளக்ஸ் ஃப்யூயல் கார் அறிமுகம்!

ஃபிளக்ஸி ஃப்யூயலை பொருத்தவரை சுற்றுச் சூழலுக்குக் குறைவான மாசுவை வெளியிடும் ஒரு எரிபொருளாகும். இதனால் அரசு இந்த ஃபிளக்ஸி ஃப்யூயல் காருக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறது. இது மட்டுமல்ல ஃபிளக்ஸி ஃப்யூயல்பயன்படுத்துவால் வெளிநாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க முடியும். எரிபொருளுக்காக நாம் அண்டை நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Toyota showcased the corolla Altis flex fuel sedan car at auto expo 2023
Story first published: Saturday, January 14, 2023, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X