மாருதியை தொடர்ச்சியாக காப்பியடிக்கும் டொயோட்டா... அவங்க எத பண்ணாலும் அத அப்படியே செய்யுறாங்களே!

டொயோட்டா நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இன்று நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் பங்குபெற்ற மாருதி சுஸுகி நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX)-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வு அரங்கேறிய சில மணி நேரங்களிலேயே டொயோட்டா நிறுவனமும் அதன் சார்பில் ஓர் எலெக்ட்ரிக் காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. டொயோட்டாவின் இந்த செயல் மாருதியை காப்பி அடித்து அப்படியே செய்வதைபோல் காட்சியளிக்கின்றது.

டொயோட்டா

ரீ-பேட்ஜ் மாடல்கள்

இரு நிறுவனங்களுக்கும் இதுவே முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் குறிப்பிட்ட சில கார் மாடல்களை ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மாருதியின் பலினோ கார் மாடலை, கிளான்ஸா எனும் பெயரிலிலும், கிராண்ட் விட்டாரா கார் மாடலை அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எனும் பெயரிலும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்

இந்த நிலையிலேயே மாருதியை ஃபாலோ செய்து தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான பிஇசட்4எக்ஸ் (Toyota bZ4X) எலெக்ட்ரிக் கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. டொயோட்டா பிஇசட்4எக்ஸ் ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இது ஆஃப்-ரோடு வாகனமாகவும் நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த காரை டொயோட்டா நிறுவனம் காட்சிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

டொயோட்டா

மாருதியை பின்தொடர்தல்

மாருதியை பின் தொடரும் வகையில் இந்த காரை நிறுவனம் அறிமுகம் செய்திருந்தாலும், இந்த எலெக்ட்ரிக் காரை அது எந்த நிறுவனத்தின் காப்பி வெர்ஷனாகவும் விற்பனைக்குக் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தனது புதிய இ-டிஎன்ஜிஏ பிளாட்பாரத்தை தழுவியே இந்த எலெக்ட்ரிக் காரை டொயோட்டா உருவாக்கி இருக்கின்றது. இந்த தளத்தை சில மாதங்களுக்கு முன்னரே நிறுவனம் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையிலேயே இந்த புதிய தளத்தில் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடலை டொயோட்டா நிறுவனம் இன்று இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகக் காட்சிப்படுத்தி இருக்கினறது. இந்த காரை இரு விதமான தேர்வுகளில் டொயோட்டா விற்பனைக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன் பக்க வீல் இயக்கம் கொண்ட தேர்வு மற்றும் அனைத்து வீலும் இயங்கும் தேர்வு என இரு விதமான ஆப்ஷனில் இந்த காரை டொயோட்டா உருவாக்கி இருக்கின்றது.

டொயோட்டா

மோட்டார் விபரம்

இவை இரண்டிலும் வெவ்வேறு விதமான திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இரு வீல் இயக்கம் கொண்ட தேர்வில் 150 கிலோவாட் திறனை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரும், ஆல் வீல் டிரைவ் தேர்வில் 218 எச்பி மற்றும் 337 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர எக்ஸ்-மோட் எனும் அம்சமும் ஆல் வீல் டிரைவ் தேர்வில் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ் விபரம்

இது எஞ்ஜின் திறனை ஸ்டேபிளாக வைத்திருக்க உதவும். மணல் பரப்பு மற்றும் பனி படர்ந்த சாலை என எதுவாக இருந்தாலும் இது சமாளித்துவிடும். இத்தகைய சூப்பரான மற்றும் தனித்துவமான எலெக்ட்ரிக் காரையே உலக புகழ்பெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா காட்சிப்படுத்தி இருக்கின்றது. பிஇசட்4எக்ஸ் எலெக்ட்ரிக் காரில் 71.4 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி பேக்கில் 96 வாட்டல் கூல்டு செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பேட்டரிகளை கண்கானிக்கும் சிஸ்டமும் காரில் வழங்கப்பட்டுள்ளது. சிக்கலைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க இது உதவியாக இருக்கும். இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். ஆல் வீல் டிரைவ் தேர்வின் ரேஞ்ஜ் விபரம் ஆகும்.

இதுவே முன் வீல் மட்டுமே இயங்கும் திறன் கொண்ட வெர்ஷன் ஓர் முழு சார்ஜில் 516க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை தருமாம். சாதாரணமான கால நிலை மற்றும் உயர் அழுத்த சார்ஜிங் கருவி கை வசம் இருக்கும் எனில் இந்த எலெக்ட்ரிக் காரை வெறும் அரை மணி நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Toyota unveiled bz4x electric suv 2023 auto expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X