மைலேஜில் மாருதியையே தூக்கி சாப்பிடும் காரை களமிறக்கிய டொயோட்டா! இந்த விலைக்கு இப்படி ஒரு காரை எதிர்பாக்கல!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹைப்ரிட் (Hybrid) கார் ஆகும். அத்துடன் இந்த கார் இந்திய சந்தைக்கு புதுவரவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி (CNG) மாடல் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை (Price) 13.23 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி மாடல் S மற்றும் G என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். இதில், S வேரியண்ட்டின் விலைதான் 13.23 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் G வேரியண்ட்டின் விலை 15.29 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மைலேஜில் மாருதியையே தூக்கி சாப்பிடும் காரை களமிறக்கிய டொயோட்டா! இந்த விலைக்கு இப்படி ஒரு காரை எதிர்பாக்கல!

இவ்ளோ மைலேஜ் குடுக்குமா!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி காரில் பொருத்தப்பட்டிருப்பது, 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர், K சீரிஸ் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 102 பிஹெச்பி பவரையும், 137 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.6 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வசதிகளையும் வாரி வழங்கியிருக்காங்க!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி காரில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, டொயோட்டா ஐ-கனெக்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் என ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு இது மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும்.

மைலேஜில் மாருதியையே தூக்கி சாப்பிடும் காரை களமிறக்கிய டொயோட்டா! இந்த விலைக்கு இப்படி ஒரு காரை எதிர்பாக்கல!

மாருதியுடன் நேருக்கு நேர் போட்டி!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி (Maruti Suzuki Grand Vitara CNG) காருக்கு, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி கார் நேரடி போட்டியாக இருக்கும். மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி காரும் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கூடுதல் பலம்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரானது ஏற்கனவே, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் சிஎன்ஜி மாடலின் வருகை, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

டெலிவரி தொடங்கியது!

டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள அதே நேரத்தில், இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளையும் தொடங்கியுள்ளது. இதனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்காக ஆவலுடன் காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரும் இந்திய சந்தைக்கு புதுவரவுதான்.

எலெக்ட்ரிக் காரும் வருதா!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரும் சிறப்பான மைலேஜை வழங்க கூடிய ஹைப்ரிட் கார்தான். இதன் மூலம் சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் ஆகிய புதிய தொழில்நுட்பங்களில் டொயோட்டா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியிருப்பதை வாடிக்கையாளர்கள் உணர்ந்து கொள்ள முடியும். இந்த வரிசையில் டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது எப்போது நடக்கும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota urban cruiser hyryder cng launched in india all you need to know
Story first published: Monday, January 30, 2023, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X