டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் அதன் குறிப்பிட்ட கார் மாடலில் டீசல் மோட்டார் தேர்வை மட்டும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பெட்ரோல் மோட்டார் தேர்விற்கு எதிர்பார்ப்பு இருக்கின்றபோதிலும், அதை நிறுவனம் களமிறக்க முன்வராத சூழல் நிலவுகின்றது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ்-ம் ஒன்று. இந்திய வாகன உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் பன்முக கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் மிக முக்கியமான கார் மாடல்களில் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவையும் அடங்கும். இரண்டிற்கும் அதிக சொகுசான பயண அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டாடா

இதுதான் மிகப்பெரிய குறையே

ஆனால், இந்த இரு கார் மாடல்களிலும் நிறுவனம் டீசல் மோட்டார் தேர்வை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு வேரியண்டில்கூட பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனை அது வழங்கவில்லை. இது ஒரு மிகப் பெரிய குறையாகப் பார்க்கப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன என்பதே தற்போது வெளியாகி உள்ளது. அதாவது டாடா மோட்டார்ஸ் அதன் இரு பெரும் கார் மாடல்களான ஹாரியர் மற்றும் சஃபாரியில் டீசல் எஞ்ஜினை தவிர்ப்பதற்கான காரணம் என்ன என்றே தெரிய வந்திருக்கின்றது. வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

டீசலுக்கு தான் வரவேற்பு அதிகம்

ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களை தேடி வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டீசல் எஞ்ஜினையே விரும்புகின்றனர். இதுவே நிறுவனம் இந்த இரு கார் மாடல்களையும் டீசல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்க காரணமாக இருக்கின்றது. அதேவேளையில், இந்த கார் மாடலில் பெட்ரோல் மோட்டாரை எதிர்பார்ப்போரின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பதை நிறுவனம் ஒப்புக் கொள்கின்றது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது பல மடங்கு கடினமானதாக நிறுவனம் கருதுகின்றது.

டாடா

கையாள்வது ரொம்ப சிக்கல்

இதன் விளைவாகவே வாடிக்கையாளர்கள் சிலர் பெட்ரோல் மோட்டார் தேர்வுக் கொண்ட ஹாரியர் மற்றும் சஃபாரியை வாங்கத் தயாராக இருக்கின்ற நேரத்திலும் டாடா மோட்டார்ஸால் அதை செய்ய முடியாத நிலை தென்படுகின்றது. இதுமட்டும் இல்லைங்க பெட்ரோல் தேர்வை விற்பனைக்கு விற்பனைக்குக் கொண்டு வரும்பட்சத்தில் அது பெரும் போர்ட்ஃபோலியோவாக மாறிவிடும். அதை நிர்வகிப்பதை தங்களுடைய டீலர் பார்ட்னர்கள் யாரும் விரும்புவதில்லை, அது அவர்களுக்கு மிகப் பெரிய சிக்கலாக இருக்கும் என மேலும் ஓர் காரணத்தையும் டாடா மோட்டார்ஸ் முன் வைக்கின்றது.

கஷ்டப்படுறது வீணா போயிட கூடாது

ஒரு புதிய போர்ட்ஃபோலியோவை உருவாக்க ஓர் வாகன உற்பத்தியாளர் அதிகப்படியான வேலையைச் செய்ய வேண்டி இருக்கும். குறிப்பாக, பன்முக ஆய்வுகளை அதற்காக மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு செய்யப்பட்டும் மிகக் குறைவான வரவேற்பே அதற்குக் கிடைக்குமானால், அனைத்து பணிகளும் வீணாகிவிடும் என டாடா மோட்டார்ஸ் கருதுகின்றது. இதன் விளைவாகவே நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் டீசல் மோட்டார் தேர்வை மட்டுமே ஹாரியரிலும், சஃபாரியிலும் டாடா வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டாடா

Source: HT Auto

சீக்கிரமே மின்சார வெர்ஷனில் எதிர்பார்க்கலாம்

அதேவேளையில் நிறுவனம் வெகு விரைவில் இந்த கார் மாடல்களில் மின்சார வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஹாரியர் எஸ்யூவி-யின் மின்சார வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்தது. நிறுவனம் இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியைப் பயன்படுத்தி பலதரப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களை வெளியீடு செய்தது. அவற்றில் ஒன்றே ஹாரியர் எஸ்யூவி இவி.

நிறைய மின்சார காரை காட்சிப்படுத்தி இருக்காங்க

இந்த காரை வெகு விரைவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா மோட்டார்ஸே இந்திய மின்சார வாகன உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக நிறுவனம் தற்போது அதிகளவில் மின்சார கார்களை விற்பனைக்குக் களமிறக்க திட்டம் போட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அண்மையில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அவின்யா, சைரா, கர்வ், அல்ட்ராஸ் இவி பிளிட்ஸ் மற்றும் ஹாரியர் இவி எஸ்யூவி கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

சந்தையில் போட்டி அதிகம்

தற்போது நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றில் டியாகோ இவியே நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகும். இதுவே இந்தியாவின் விலை குறைவான பயணிகள் கார் மாடலும் ஆகும். நிறுவனத்தின் நெக்ஸான் இவி கார் மாடல்களுக்கு போட்டியாக வெகு விரைவில் மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் மாடலையும், சிட்ரோன் நிறுவனம் டாடாவின் டியாகோ இவிக்கு போட்டியாக இசி3 எலெக்ட்ரிக் கார் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

எதிர்காலத்தில் நிறுவனத்திற்கு போட்டி இன்னும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் என யூகிக்கப்படுகின்றது. இந்த போட்டியைச் சமாளிக்கும் விதமாகவே நிறுவனம் இப்போதே அடுத்தடுத்து புதுமுக மின்சார கார்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணயில் களமிறங்கி இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் அடுத்ததாக இந்திய சந்தையில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் அடிப்படையிலான எலெக்ட்ரிக் காரையும் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Why tata harrier safari not offered petrol option
Story first published: Thursday, January 26, 2023, 6:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X