ரூ3 செலவில் 1 கிமீ பயணிக்கும் வாகனம், ரூ1.2 கோடி விலையுள்ள கார்! இந்த வாரம் நீங்க தவற விட்ட செய்திகள் இதான்!

ஒவ்வொரு நாளும் ஆட்டோமொபைல் உலகில் பல்வேறு முக்கியமான செய்திகள் வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் ஆட்டோமொபைல் உலகில் வெளியான செய்திகள் நீங்கள் கட்டாயம் தவறவிட கூடாத சில செய்திகள் என டாப் 10 செய்திகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். வாருங்கள் ஒவ்வொரு செய்தியாக காணலாம்.

டாடா நிறுவனம் டிராவல்ஸ் பயன்பாட்டிற்காக மட்டுமே விற்பனை செய்ய தயாரிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்-டி இவி (XPRES-T EV) காரை முதன்முறையாக வெர்டிலோ (Vertelo) என்ற நிறுவனம் 2000 கார்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த காருக்கு ஆர்டர் வந்துள்ளது அந்நிறுவனத்தின் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

Top 10 Automobile News

தற்போது மக்கள் மத்தியில் குடும்பத்துடன் பயணிக்கும் காருக்கு நல்ல மவுசு இருந்து வரும் நிலையில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த காரின் காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது. இந்த காருக்கு 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. வேரியன்ட் வாரியான விபரங்களை காண இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

ஓலா நிறுவனம் மிக குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரும் ஓலா எஸ்1 எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரியை இந்த மாத இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்ற விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

Top 10 Automobile News

பியாஜியோ நிறுவனத்தின் 140 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெஸ்பா ஸ்கூட்டரின் ஸ்பெஷல் லிமிடெட் எடிசன் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. வெறும் 140 ஸ்கூட்டர்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இந்த ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து காணலாம் வாருங்கள்.

பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்குளை தயாரித்து சோதனை செய்து வரும் நிலையில் அந்நிறுவனம் அடுத்ததாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் டூவீலரை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. இது புது விதமான தயாரிப்பாகும். இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

Top 10 Automobile News

டாடா நிறுவனம் கமர்ஷியல் வாகன விற்பனையில் சிறந்து விளங்கும் நிலையில் இந்நிறுவனம் ஒரே நேரத்தில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோலில் இயங்கும் டாடா மேஜிக் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தில் ஒரு கி.மீ பயணம் செய்ய வெறும் ரூ3.3 தான் செலவாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை இயங்கே கிளிக் செய்து படியுங்கள்.

2024 ஜீப் வ்ராங்லர் ஃபேஸ்லிஃப்ட் (Jeep Wrangler Facelift) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.67.65 லட்சம் என்ற விலையில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் உள்ள அம்சங்கள் என்னென்ன? இவ்வளவு அதிக விலையில் விற்பனையாவதற்கு காரணம் என்ன? என்ற விபரங்களை காணாலாம் வாருங்கள்.

ரூ1.2 கோடி விலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐ5 எம்60 என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் என்னென்ன அம்சங்கள் என்ன என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயாரிக்க தனது குஜராத் மாநிலத்தில் உள்ள தயாரிப்பு ஆலையில் தனி தயாரிப்பு லைனை உருவாக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து காணலாம்.

டிவிஎஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜைவ் என்ற கிளட்ச் இல்லாத பைக்கை அறிமுகப்படுத்தி விற்பனை செய்தது. ஆனால் போதுமான வரவேற்பு இல்லாமல் அதன் தயாரிப்பை நிறுத்தியது. அந்த தொழிற்நுட்பத்தை வேறு வாகனங்களில் புகுத்த வில்லை. இன்று அந்த தொழிற்நுட்பத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து காணுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2024, 19:20 [IST]
English summary
Tata order ola s1x delivery top10 news of the week
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X