10 லட்ச ரூபாயில் புதிய ரெனால்ட் எஸ்யூவி கார் உறுதி! மார்ச் 10இல் தரமான சம்பவம் வெயிட்டிங்!

ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிகையில் விற்பனை செய்யப்பட்ட கார்களுள் டஸ்டர் (Duster) ஒன்றாகும். ரெனால்ட்டின் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலான டஸ்டர் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய தோற்றத்தில் மிக சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புதிய டஸ்டரை போன்றதான மற்றொரு காரை இந்திய சந்தைக்காகவே ரெனால்ட் உருவாக்கி வருகிறது.

டஸ்டரை விட அளவில் பெரியதாக, 7 பேர் அமரக்கூடியதாக இருக்கும் என கூறப்படும் இந்த புதிய 7-சீட்டர் ரெனால்ட் எஸ்யூவி காரின் பெயர் 'பிக்ஸ்டர்' (Bigster) என நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால், இந்த அளவில் பெரியதான ரெனால்ட் மிட்-சைஸ் (Mid-size) எஸ்யூவி கார் சோதனை ஓட்டங்களில் கூட சமீபத்தில் உட்படுத்தப்பட்டு இருந்தது.

renault bridger suv concept

இதனால், பிக்ஸ்டர் எஸ்யூவி காரின் வருகை இன்னும் சில மாதங்களில் இருக்கலாம் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், எதிரே பார்க்காத ஒரு அளவில் சிறியதான சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் களமிறக்க ரெனால்ட் தயாராகி வருகிறது. புதிய டஸ்டரின் மினி வெர்னாக இருக்கலாம் என கூறப்படும் இந்த புதிய ரெனால்ட் கார் 'பிரிட்ஜர்' (Bridger) என்கிற பெயரில் கொண்டுவரப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் புதிய டீசர் (Teaser) ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதலாவதாக இந்த புதிய கார் கான்செப்ட் (Concept) வடிவில் வெளியீடு செய்யப்பட உள்ளதாக டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்ஜர் கான்செப்ட் மாதிரியை வருகிற மார்ச் 10ஆம் தேதி பொது பார்வைக்கு காண்பிக்க உள்ளதாகவும் ரெனால்ட் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

renault bridger suv concept

புதிய டஸ்டர் மற்றும் பிக்ஸ்டர் எஸ்யூவி கார்களை போன்று முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களையும், இந்திய சாலை சூழல்களையும் கருத்தில் கொண்டு பிரிட்ஜர் எஸ்யூவி கார் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, முழுவதும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளது. புதிய பிரிட்ஜர் கார் எப்படி இருக்கும் என்பதை தற்போதைக்கு ரெனால்ட் தெரிவிக்கவில்லை என்றாலும், தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் மூலமாக காரை பற்றிய ஒரு முக்கிய விபரம் தெரிய வந்துள்ளது.

டீசரில், பெட்டகம் வடிவத்தில் பிரிட்ஜர் கான்செப்ட்டின் வடிவம் காட்டப்பட்டுள்ளது. அதாவது, மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார்களை போன்று பெட்டகம் வடிவில் பிரிட்ஜர் உருவாக்கப்பட உள்ளது. ஆனால், நிச்சயமாக ஸ்கார்பியோ அளவிற்கான விலையில் இந்த காரை ரெனால்ட் கொண்டுவராது என்பதை உறுதியாக சொல்லலாம். மேலும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில், காரின் பின்பக்கத்தில் ஸ்பேர் சக்கரம் பொருத்தப்பட்டு இருப்பதையும் காணலாம்.

மார்ச் 10ஆம் தேதி ரெனால்ட்டின் ஃபியூச்சரெடி (FutuReady) நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள பிரிட்ஜர் கார் கான்செப்ட் ஆனது மோனோகோக் (Monocoque) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் பிரிட்ஜர் கார் 5 கதவுகளை கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு மார்ச் 10 வரையில் காத்திருக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரிட்ஜர் கான்செப்ட் தான் அப்படியே ரெனால்ட் பிரிட்ஜர் காராக உருவாக்கப்படும் என உறுதியாக கூற முடியாது. ஏனெனில், அதன்பின் கான்செப்ட்டில் இருந்து கொண்டுவரப்படும் காரில் ரெனால்ட் சில மாற்றங்களை செய்யலாம். ரெனால்ட் நிறுவனம் உலக சந்தைகளில் தனது கார்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்தும் அதேநேரத்தில் இந்தியாவில் தனது மார்க்கெட் நிலைப்பாட்டையும் ரெனால்ட் விரிவுப்படுத்தி வருகிறது.

அதற்கு, பிரிட்ஜர் போன்ற அளவில் சிறியதான கார் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது உறுதி. மஹிந்திரா ஸ்கார்பியோவை போன்று பெட்டகம் வடிவில் தோற்றத்தை கொண்டிருப்பினும், ரெனால்ட் பிரிட்ஜர் காருக்கு விற்பனையில் மஹிந்திரா தார் (Thar), மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) போன்ற ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களே விற்பனையில் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2026, 20:49 [IST]
English summary
Renault bridge suv car concept unveil on march 10 check all details here
மேலும்... #renault #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+