மலைக்க வைக்கும் மல்லையாவின் விண்டேஜ் கார் கலெக்ஷன்!

ஆடம்பரத்தின் உச்சம் எங்கெல்லாம் விஜய் மல்லையாவிற்கு ஓர் இடம் உண்டு. மதுபான தொழிலிருந்து வரும் வருவாயை ஆடம்பரத்திற்கு செலவிட்டதுபோக கார் பந்தயம், கிரிக்கெட், பார்முலா-1, படகு பந்தயம் மற்றும் குதிரை பந்தயங்கள் என அடித்து விட்டு வருகிறார். அதில், அவரது விண்டேஜ் கார் சேகரிப்பும் அடங்கும்.

நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இவரது விண்டேஜ் கார் பாதுகாப்பு மையங்கள் இருக்கின்றன. துபாயில் 400 வாகனங்களுக்கு மேல் வைத்திருக்கும் ஷேக் பற்றி எழுதியிருந்தோம். ஆனால், விஜய் மல்லையாவின் உலகம் முழுவதும் உள்ள கார் பராமரிப்பு மையங்களை கணக்கில் கொண்டால் 260க்கும் மேற்பட்ட விண்டேஜ் ரேஸிங் கார்கள் மற்றும் பைக்குகள் இருக்கின்றன. விண்டேஜ் கார்கள் என்றாலே ஒவ்வொரு காருக்கும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கும். அதிலும், விண்டேஜ் ரேஸ் கார்கள் என்றால், ஆம், சுவாரஸ்யமான தகவல்களுடன் விஜய் மல்லையாவின் விண்டேஜ் ரேஸ் கார்களின் தொகுப்பை காணலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் கோஸ்ட்

ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் கோஸ்ட்

1906ம் ஆண்டு முதல் 1926 வரை ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்த மாடல். மல்லையாவிடம் இருப்பது 1913ம் ஆண்டு மாடல். 6 சிலிண்டர்கள் கொண்ட 7.4 லிட்டர் டூவல் இக்னிஷன் எஞ்சின் கொண்ட இந்த கார் 65 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 4 ஸ்பீட் டிரான்மிஷன் பொருத்தப்பட்டது. லண்டன் டூ எடின்பர்க் பாடி ஸ்டைல் கொண்டது. முன்பு காரை வேக சோதனைகள் இந்த நகரங்களுக்கு இடையிலான சாலையில் நடத்தப்பட்டதால் அதன் பெயரிலேயே இந்த பாடி ஸ்டைல் அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை டாக்டர் ஜான்சன் என்பவர்தான் இந்த காரின் முதல் உரிமையாளர்.

சன்பீம் டைகர்

சன்பீம் டைகர்

டைகர் என்ற பெயரிடப்பட்ட 1925ம் ஆண்டு மாடலான இந்த கார் உலகின் அதிவேக கார் என்ற சாதனையை படைத்தது. 4.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டது. 1926ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி உலகின் அதிவேக கார் சாதனையை படைத்தது. மால்க்கம் கேம்பல் என்பவர் மணிக்கு 245 கிமீ வேகத்தில் பறந்து இந்த சாதனையை படைத்தார்.

மெர்சிடிஸ் கே டைப்

மெர்சிடிஸ் கே டைப்

1926ம் ஆண்டு மாடல் கார் இது. 6 சிலிண்டர்கள் கொண்ட 6240 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மலைப்பாங்கான சாலைகளில் நடத்தப்படும் கார் பந்தயத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாடல் இது. ஆனால், இந்த கார் பந்தயத்தின்போது விபத்துக்களில் சிக்கியதால் வெற்றி பெர முடியவில்லை.

ஃபோர்டு மாடல் ஏ

ஃபோர்டு மாடல் ஏ

1928 முதல் 1931 வரை பல்வேறு பாடி ஸ்டைல்களில் தயாரிக்கப்பட்ட மாடல். 40 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. டர்ட் டிராக் ரேஸிங்கில் அதிகம் பயன்படுத்தப்பட்ட கார் மாடல். 1929ம் ஆண்டு கார் மாடலான இதனை 1991ம் ஆண்டு விஜய் மல்லையாவின் விண்டேஜ் கார் அமைப்பு வாங்கியது.

இண்டி ரேஸ் கார்

இண்டி ரேஸ் கார்

1949ம் ஆண்டு ஒற்றை இருக்கை கொண்ட இண்டி ரேஸ் கார் இது. இந்த கார் 200 கிமீ வேகம் வரை பந்தயங்களில் பறந்திருக்கிறது என்பதுதான் வியப்பான செய்தி.

ஆல்ஃபா ரோமியோ

ஆல்ஃபா ரோமியோ

1944ம் ஆண்டு மாடல் இது. 2.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 240கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த காரை 1998ல் விஜய் மல்லையா வாங்கினார்.

ஜாகுவார் டி டைப்

ஜாகுவார் டி டைப்

3.8 லிட்டர் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரில் 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது. அலாய் பாடி என்பது இதன் சிறப்பு. 1998ல் இந்த ரேஸ் காரை விஜய் மல்லையாவின் விண்டேஜ் கார் அமைப்பு வாங்கியது.

 போர்ஷே 550 ஸ்பைடர்

போர்ஷே 550 ஸ்பைடர்

1955ம் ஆண்டு மாடல். 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அலாய் பாடி கொண்ட இந்த காரில் டிரம் பிரேக்குகள் கொண்டது. முறையான ரேஸ் காராக வர்ணிக்கப்படும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ரேஸிலேயே வெற்றி பெற்றது. 1999ல் மல்லையா விண்டேஜ் கார் அமைப்பு மூலம் வாங்கப்பட்டது.

அல்லார்டு ஜேஆர்

அல்லார்டு ஜேஆர்

ஃபோர்டு வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார் 1955ம் ஆண்டு மாடலாகும். இந்த காரில் 3 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை கொண்டுள்ளது. கால் கிமீ தூரத்தை 14.2 வினாடிகளில் கடக்கும் இந்த கார் ரேஸ்களில் பிரபலமாக திகழ்ந்துள்ளது.

 பென்ஸ் 300 எஸ்எல்

பென்ஸ் 300 எஸ்எல்

1955ம் ஆண்டு மாடல் கார் இது. 240 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. கல் விங்குகள் பொருத்தப்பட்ட இந்த கார் மணிக்கு 212 கிமீ வேகம் வரை செல்லும்.

செவர்லே கார்வெட்

செவர்லே கார்வெட்

1957ம் ஆண்டு கன்வெர்ட்டிபிள் மாடல்

ஃபோர்டு தண்டர்பேர்டு

ஃபோர்டு தண்டர்பேர்டு

1957ம் ஆண்டு ஹார்டு டாப் கொண்ட கன்வெர்ட்டிபிள் மாடல்

1958 எட்சல் கன்வெர்ட்டிபிள்

1958 எட்சல் கன்வெர்ட்டிபிள்

345 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட கார் இது. எலக்ட்ரிக் விண்டோ, சீட் அட்ஜெஸ்டபில் கொண்ட கார்.

1959 ஆஸ்கா டிப்போ எஸ் லீமேன்ஸ்

1959 ஆஸ்கா டிப்போ எஸ் லீமேன்ஸ்

750 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார் முழுவதும் அலாய் பாடி கொண்டது. மஸராட்டி நிறுவனத்தை வாங்கிய மஸராட்டி சகோதரர்களால் உருவாக்கப்பட்ட ஆஸ்கா பிராண்டில் தயாரிக்கப்பட்ட சிங்கிள் சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் மாடல். 2000ல் மல்லையா விண்டேஜ் அமைப்பு வாங்கியது.

1960 பென்ஸ் எஸ்எல் ரோட்ஸ்டெர்

1960 பென்ஸ் எஸ்எல் ரோட்ஸ்டெர்

1965 ஷெல்பி அமெரிக்கா கோப்ரா 427

1965 ஷெல்பி அமெரிக்கா கோப்ரா 427

1966- ஃபெராரி 365 கலிஃபோர்னியா ஸ்பைடர்

1966- ஃபெராரி 365 கலிஃபோர்னியா ஸ்பைடர்

1967 ஃபெராரி 275 ஜிடிபி

1967 ஃபெராரி 275 ஜிடிபி

1969 மெக்லேரன் எம்10 எப் 5000

1969 மெக்லேரன் எம்10 எப் 5000

1972 ஃபெராரி 246 டினோ

1972 ஃபெராரி 246 டினோ

1973 மார்ச் 73ஏ எஃப் 5000

1973 மார்ச் 73ஏ எஃப் 5000

1974 ஜாகுவார் இ டைப் 3 சீரிஸ் கன்வெர்ட்டிபிள்

1974 ஜாகுவார் இ டைப் 3 சீரிஸ் கன்வெர்ட்டிபிள்

1974 ஆல் அமெரிக்கன் ரேஸிங் எஃப் 5000

1974 ஆல் அமெரிக்கன் ரேஸிங் எஃப் 5000

1977 என்சைன் ஃபார்முலா 1

1977 என்சைன் ஃபார்முலா 1

1980 பிஎம்டபிள்யூ எம்1

1980 பிஎம்டபிள்யூ எம்1

1990 ஜாகுவார் எக்ஸ்ஜேஆர் 15

1990 ஜாகுவார் எக்ஸ்ஜேஆர் 15

1994 ஜாகுவார் எக்ஸ்ஜேஆர் 220

1994 ஜாகுவார் எக்ஸ்ஜேஆர் 220

மேபேக்

மேபேக்

Most Read Articles
English summary
Vijay Mallya has a huge car collection with more than 260 classic, vintage and sports car. Here are some important cars from Vijay Mallya Car Collection. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X