ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கும் ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக புதிய எலெக்ட்ரிக் பைக்கை ஒகினவா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கும் ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்

குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் பைக் சந்தையிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒகி100 என்ற முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கும் ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்

கடந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஒகி100 எலெக்ட்ரிக் பைக்கின் புரோட்டோடைப் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சந்தைக்கு கொண்டு வருவதற்கான உகந்த அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கும் ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்

புதிய ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் மாடலானது 125 சிசி பெட்ரோல் பைக்குளுக்கு இணையான திறனை பெற்றிருக்கும். ஏற்கனவே சந்தையில் இருக்கும் ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு எதிராக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கும் ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்

வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடக்க இருக்கும் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இந்த புதிய ஒகி100 எலெக்ட்ரிக் பைக்கின் தயாரிப்பு நிலை மாடல் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கும் ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்

புதிய ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பக் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கும் ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்

இந்த புதிய ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்கிற்கான பெரும்பான்மையான பாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்தே பெறப்பட்டு உற்பத்தி செய்யப்படும். பேட்டரி உள்ளிட்ட சில பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட இருக்கிறது.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கும் ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்

புதிய ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. ரிவோல்ட் ஆர்வி300 பைக் மாடலைவிட விலை குறைவாக நிர்ணயித்து சந்தையை பிடிக்கும் திட்டத்தை ஒகினவா கையில் வைத்துள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கும் ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக்

நாடுமுழுவதும் 300 விற்பனை மையங்களை வைத்திருப்பதாகவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இதனை 500 என்ற அளவில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக ஒகினவா தெரிவித்துள்ளது. ரிவோல்ட் நிறுவனத்தை விட அதிக டீலர்ஷிப்புகளை வைத்திருப்பது இந்த நிறுவனத்திற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

Source: NDTV Auto

Most Read Articles

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Gurugram based EV maker Okinawa has revealed that the company will bring the Oki100 electric motorcycle in the first quarter of 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X