டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

ஹூண்டாய் ஐ20 கார் இந்திய சந்தையில் கடந்த 2008ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக உருவெடுத்தது. இடைப்பட்ட ஆண்டுகளில், ஹூண்டாய் ஐ20 கார் பலமுறை ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய தலைமுறை அப்டேட்களை பெற்றுள்ளது.

இந்த வரிசையில் மூன்றாவது தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார், இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை 6.80 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டாப்-எண்ட் டர்போ ஜிடிஐ வேரியண்ட்டின் விலை 11.18 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் எங்கள் கைகளுக்கு கிடைத்தது. ஒரு நாள் முழுவதும் வைத்து, இந்த புதிய மாடலை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

டிசைன் & ஸ்டைல்

முதலில் இந்த காரின் முன் பகுதி டிசைனில் இருந்து தொடங்கலாம். சிறப்பான ஏரோடைனமிக்ஸ்க்காக, இந்த காரின் ஹூட் நன்கு கீழ் நோக்கி சாய்ந்த வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேர்த்தியான தோற்றம் கொண்ட ஹெட்லைட்களை இந்த கார் பெற்றுள்ளது. ஹை மற்றும் லோ பீம் ஆகியவற்றுக்காக ப்ரொஜெக்டர் எல்இடி செட் அப்பை இது கொண்டுள்ளது. அத்துடன் கார்னரிங் லைட்களையும் இது பெற்றுள்ளது. ஆனால் ஹாலோஜன் பல்புகள்தான் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த காரின் டிஆர்எல்கள் மிகவும் பிரகாசமாக ஒளிர்கின்றன. அத்துடன் அவை காரை ஸ்போர்ட்டியாக காட்டுகின்றன.

அப்படியே கீழாக, ப்ரொஜெக்டர் பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கேயும் ஹாலோஜன் விளக்குகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. முழு லைட்டிங் செட் அப்பும் எல்இடி-யாக இருந்திருந்தால், நாங்கள் விரும்பியிருப்போம்.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

அதே நேரத்தில் முன் பக்க பம்பர், பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. முன்பை விட தற்போது ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கிறது. மேலும் ஸ்போர்ட்டினெஸ்ஸை மேம்படுத்துவதற்காக, முன் பகுதியில் லிப் ஸ்பிளிட்டரையும் இந்த கார் பெற்றுள்ளது. ஆனால் லோகோ மற்றும் ஹெட்லைட் அறைக்கு உள்ளே சில பாகங்கள் ஆகிய பகுதிகளை தவிர முன் பகுதியில் வேறு எங்கும் க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்படவில்லை.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இனி பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். இங்கே வழங்கப்பட்டுள்ள ட்யூயல்-டோன் 5-ஸ்போக் 16 இன்ச் அலாய் வீல்கள் காரின் ஒட்டுமொத்த அளவுடன் கச்சிதமாக பொருந்துகின்றன. அதே சமயம் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கருப்பு நிற ஓஆர்விஎம்களை பெற்றுள்ளது. இதிலேயே எல்இடி இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பக்க ஃபெண்டரில், ‘DCT' பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

ஆனால் பக்கவாட்டில் டோர் ஹேண்டில்கள் மற்றும் விண்டோக்களை சுற்றிலும் சற்று க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ட்யூயல்-டோன் வண்ண தேர்விலும் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் கிடைக்கும். இங்கே கூரை கருப்பு வண்ணத்தில் வழங்கப்பட்டிருக்கும். அத்துடன் தற்போது சன்ரூஃப்பையும் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் பெற்றுள்ளது.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

ஹூண்டாய் ஐ20 காரின் பின் பகுதியை பொறுத்தவரை நேர்த்தியான தோற்றம் டெயில்லைட் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. Z வடிவ எல்இடி விளக்குகளை இது பெற்றுள்ளது. இந்த இரண்டு யூனிட்களும், சிகப்பு நிற பிரதிபலிப்பு பட்டை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பிரதிபலிப்பு பட்டை, பூட் லிட் முழுமைக்கும் நீண்டுள்ளது. இதற்கு இணையாக க்ரோம் பட்டை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. வாஷர் உடன் பின் பக்க வைப்பரையும் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் பெற்றுள்ளது.

பின்பகுதியில் i20, ASTA பேட்ஜ்கள் மற்றும் ஹூண்டாய் லோகோ ஆகியவை க்ரோம் பூச்சுடன் வழங்கப்பட்டுள்ளன. சுறா துடுப்பு ஆன்டெனாவும், காரை ஸ்போர்ட்டியாக காட்டுகிறது. இவற்றுடன் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்களையும் இந்த கார் பெற்றுள்ளது. போதிய இட வசதி இல்லாத நெருக்கமான இடங்களில் காரை எளிமையாக பார்க்கிங் செய்வதற்கு இவை உதவி செய்யும்.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இன்டீரியர் & வசதிகள்

இனி காரின் உள்ளே செல்லலாம். இங்கே கேபின் விசாலமாகவும், காற்றோட்டமாகவும் உள்ளது. இதற்கு சன்ரூஃப்பிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். இந்த காரின் இன்டீரியர் முழுக்க முழுக்க கருப்பு வண்ணத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இருக்கை, ஸ்டியரிங் வீல் மற்றும் ஏசி வெண்ட்களில், சிகப்பு நிற ஹைலைட்களை பார்க்க முடிகிறது.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இந்த காரின் டேஷ்போர்டு கடினமாக இருந்தாலும், நல்ல தரமான பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியை 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக்கிரமித்துள்ளது. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இது சப்போர்ட் செய்யும்.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

அதே சமயம் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், பிடிப்பதற்கு சௌகரியமாக உள்ளது. நல்ல க்ரிப் கிடைக்கிறது. ஸ்டியரிங் வீலின் இடது பக்கத்தில், இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. மறு பக்கத்தில், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ப்ளூ ஆம்பியன்ட் லைட்டிங்கையும் இந்த கார் பெற்றுள்ளது. இது கேபினை பிரீமியமாக காட்டுகிறது. அதே சமயம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை இந்த கார் பெற்றுள்ளது. நடுவில் பல்வேறு தகவல்களை வழங்கும் எம்ஐடி திரை இடம்பெற்றுள்ளது.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இந்த காரில் இருக்கைகள் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இதில், சிகப்பு நிற தையல் வேலைப்பாடுகளை பார்க்க முடிகிறது. முன் பக்க இருக்கைகள் மேனுவல் ஆகும். ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன் பக்க இருக்கைகளில் கீழ் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

அதே சமயம் இரண்டாவது வரிசை இருக்கைகளும் சௌகரியமாக உள்ளன. கேபின் விரைவாக குளிர்ச்சி அடைவதற்காக, ரியர் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. பின் பகுதியில் 88 மிமீ வரை லெக்ரூம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே உயரமான பயணிகளுக்கும் நல்ல இட வசதி இருக்கும். ஆனால் சன்ரூஃப் சற்று சிறியதாக உள்ளது. பின் பக்க பயணிகளுக்கு நல்ல வியூ கிடைப்பது கொஞ்சம் சிரமம்தான். எனினும் இந்த காரில் சன்ரூஃப் வழங்கப்பட்டிருப்பதே சிறப்பான ஒரு விஷயம்தான்.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில், 311 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், பூட் ஸ்பேஸின் அளவு 26 லிட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது வரிசை இருக்கைகள் 60:40 ஸ்பிளிட் வசதியை பெறவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம்தான். எனவே லக்கேஜை வைப்பதற்கு கூடுதல் இடவசதி தேவைப்பட்டால், இந்த வரிசை இருக்கைகள் முழுவதையும் கீழே மடித்து வைக்க வேண்டும்.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இன்ஜின் & ஹேண்ட்லிங்

புத்தம் புதிய ஹூண்டாய் ஐ20 காரில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுமே வழங்கப்பட்டுள்ளன. இதில், முதல் பெட்ரோல் இன்ஜின் 1 லிட்டர் டர்போ யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் டிசிடி அல்லது 6 ஸ்பீடு ஐஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.

இரண்டாவது இன்ஜின், 1.2 லிட்டர் என்ஏ கப்பா யூனிட் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வுடன் 83 பிஎச்பி பவரையும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் 88 பிஎச்பி பவரையும் இந்த இன்ஜின் உருவாக்கும்.

மூன்றாவது இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரை உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இதில், நாங்கள் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டைதான் ஓட்டினோம். எனவே அதைப்பற்றி பேசுவோம். முதலில் இந்த அளவுடைய ஒரு காருக்கு, 120 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வழங்க கூடிய இன்ஜின் வழங்கப்பட்டிருப்பது சிறப்பான விஷயம். அத்துடன் இதன் எடையும் 1,100 கிலோவிற்கும் குறைவுதான். எனவே விரைவாக செயல்படுகிறது. இந்த காரின் கேபின் துளி கூட சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. என்விஹெச் லெவல்களில் ஹூண்டாய் மிக சிறப்பாக பணியாற்றியுள்ளது. ஆனால் அதிக ஆர்பிஎம்களில் இன்ஜின் சத்தம் மட்டும் கொஞ்சம் கேட்கிறது.

நாங்கள் ஓட்டியது 7 ஸ்பீடு டிசிடி வேரியண்ட் ஆகும். கியர் பாக்ஸ் வேகமாக செயல்படுவது போன்ற உணர்வை தருகிறது. அத்துடன் கியர்களை வேகமாக மாற்ற முடிகிறது. இந்த காரை ஓட்டும்போது, இன்ஜின் சுறுசுறுப்பாக இருப்பதை நீங்கள் கண்டிப்பாக உணர முடியும். குறைவான மற்றும் நடுத்தர ஆர்பிஎம்களில் இன்ஜின் சிறப்பாக செயல்படுகிறது. 6,500 ஆர்பிஎம் என்ற அளவில் கார் ரெட் லைனை தொடுகிறது.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

அதே நேரத்தில் ஸ்டியரிங் வீலிடம் இருந்து கிடைக்கும் ரெஸ்பான்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது. எளிதாக டைரக்ஸன் மாறலாம். அத்துடன் ஸ்டியரிங் வீல் சற்று இறுக்கமாக இருப்பதும் நல்ல விஷயம். அதிகபட்ச வேகத்திலும் காரை நம்பிக்கையுடன் ஓட்ட முடியும். ஆனால் முந்தைய தலைமுறை மாடல்களில், ஸ்டியரிங் வீல் சற்று இலகுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்னர்களிலும் இந்த காரின் ஹேண்ட்லிங் உங்களை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தும். அதே சமயம் இந்த காரின் சஸ்பென்ஸன் அமைப்பு சற்று கடினமாக உள்ளது. இதன் காரணமாக பாடிரோல் குறைந்து, ஹேண்ட்லிங் அதிகரித்துள்ளது. எனினும் ஸ்பீடு பிரேக்கர்கள் மற்றும் குழிகளை கொஞ்சம் உணர முடிகிறது. ஆனால் இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எல்லாம் இருக்காது.

அதேபோல் மற்றொரு விஷயத்தை நாங்கள் உங்களுக்கு உறுதியாக சொல்ல முடியும். நீண்ட தூர பயணங்களின்போது இருக்கைகள் தொடர்பாக உங்களுக்கு எந்த புகாரும் எழாது. அந்த அளவிற்கு இருக்கைகள் சௌகரியமாக உள்ளன.

அதே சமயம் எங்களிடம் கார் ஒரே ஒரு நாள் மட்டுமே இருந்ததால், எங்களால் மைலேஜை துல்லியமாக கூற முடியவில்லை. ஆனால் நகர பகுதிகளில், ஒரு லிட்டருக்கு 9.5 முதல் 11.7 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கலாம். இது மோசமானது கிடையாது. ஆனால் நெடுஞ்சாலைகளில் இதை விட சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர் வரை எளிதாக பயணிக்கலாம் என்பது எங்களின் கணிப்பாக உள்ளது.

டிசைன் செம! ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா மற்றும் டாடா அல்ட்ராஸ் போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு, புதிய ஹூண்டாய் ஐ20 விற்பனையில் கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய தலைமுறை மாடல்களை விட, புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. சாலையில் நீங்கள் ஓட்டி செல்லும்போது, இதன் அழகான டிசைன் மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முந்தைய தலைமுறை மாடலை விட, அனைத்து அம்சங்களிலும் புதிய மாடல் மேம்பட்டுள்ளது.

எனினும் முழு எல்இடி லைட்டிங் செட்-அப் உடன் டேஷ்போர்டில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டிருக்கலாம். அதேபோல் சன்ரூஃப்பும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். இவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால், அனைத்து அம்சங்களிலும் புதிய ஹூண்டாய் ஐ20 எங்களை கவர்ந்தது. பவர் டெலிவரி, ஹேண்ட்லிங் மற்றும் சௌகரியம் ஆகியவை சிறப்பாக உள்ளன. ஸ்போர்ட்டியான ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் காரை நீங்கள் வாங்குவதாக இருந்தால், புதிய ஹூண்டாய் ஐ20 காரை நீங்கள் பரிசீலிக்கலாம்.

Most Read Articles

English summary
New-gen Hyundai i20 Premium Hatchback First Drive Review - Engine Performance, Handling. Read in Tamil
Story first published: Thursday, November 12, 2020, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X