டிரைவ்ஸ்பார்க் ஸ்பெஷல்: இந்த ஆண்டில் அறிமுகமான 10 சிறந்த கார்கள்!

Posted By:

உலக அரங்கில் இந்திய கார் மார்க்கெட் மிக வலுவான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்திய மார்க்கெட்டின் வர்த்தகத்தையும், ஸ்திரத்தன்மையையும் கருதி, பிரத்யேக மாடல்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

இதன் எதிரொலியால் ஏராளமான புதிய மாடல்கள் வரிசைக் கட்டி வருவதால், சந்தைப் போட்டி கடுமையாகியுள்ளது. மேலும், கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அல்லது அறிமுகம் செய்யப்பட்ட பெரும்பாலான மாடல்கள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துவிட்டன.

இந்த ஆண்டில் விற்பனைக்கு வந்த புதிய மாடல்களின் தொகுப்பிலிருந்து சிறந்த 10 கார் மாடல்களை இந்த செய்தித்தொகுப்பில் வழங்கியுள்ளோம். பட்டியலை காண ஸ்லைடருக்கு வாருங்கள்.

பெஸ்ட் மாடல்கள்

பெஸ்ட் மாடல்கள்

இந்த ஆண்டில் விற்பனைக்கு வந்த 10 சிறந்த புதிய கார் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம். ரூ.15 லட்சம் வரை விலை கொண்ட புதிய கார் மாடல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு காரின் தகவல்களுக்கு கீழே, காரில் இருக்கும் வசதிகள், எஞ்சின், விலை மற்றும் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கான கார் தகவல் களஞ்சியத்தின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அறிமுக தேதியின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

 1..ஹோண்டா சிட்டி

1..ஹோண்டா சிட்டி

ஜனவரி மாதம் 8ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய ஹோண்டா சிட்டி முதல்முறையாக டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் மாடல் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவித்தநிலையில், அப்போதைய இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக பெருமை பெற்றது. மேலும், முன்பதிவிலும் அசத்தியதோடு நில்லாமல், தொடர்ந்து மிட்சைஸ் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது.

புதிய ஹோண்டா சிட்டி முழு விபரம்

2.ஹூண்டாய் எக்ஸென்ட்

2.ஹூண்டாய் எக்ஸென்ட்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் அறிமுகம் செய்த ஹூண்டாய் எக்ஸென்ட் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. மாதாமாதம் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

ஹூண்டாய் எக்ஸென்ட் முழு விபரம்

3. டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்

3. டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்

புதிது புதிதாக பல கார் ரகங்கள் முளைத்து வருகின்றன. அதில், ஹேட்ச்பேக் கார் மாடலின் அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த மே மாதம் 8ந் தேதி டொயோட்டாவிடமிருந்து வந்த ஓர் பெஸ்ட் கிராஸ்ஓவர் மாடல்தான் டொயோட்டா எட்டியோஸ் கிராஸ். தற்போதைய நிலையில், ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் ரகத்தில் விற்பனையில் முன்னிலை வகிப்பது இந்த மாடல்தான்.

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் முழு விபரம்

 4. ஹோண்டா மொபிலியோ

4. ஹோண்டா மொபிலியோ

மாருதி எர்டிகாவுக்கு அடுத்ததாக காம்பேக்ட் எம்பிவி ரகத்தில் வந்த ஹோண்டா மொபிலியோவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஜூலை 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மொபிலியோ கார் சிறந்த டிசைன் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன் ஆகியவை ஹோண்டா ரசிகர்களுக்கு ஏதுவானதாக மாறியிருக்கிறது.

ஹோண்டா மொபிலியோ முழு விபரம்

5. ஃபியட் புன்ட்டோ எவோ

5. ஃபியட் புன்ட்டோ எவோ

நீண்டகாலமாக மார்க்கெட்டில் இருந்து ஃபியட் ரசிகர்களை சலிக்க வைத்த புன்ட்டோ கார் பல்வேறு மாற்றங்களுடன் புதிய டிசைனில் கடந்த ஆகஸ்ட் 5ந் தேதி இந்திய மார்க்கெட்டிற்கு வந்தது. ஸ்டைலில் பல படிகள் முன்னேறி வந்த புன்ட்டோ எவோ ஃபியட் ரசிகர்களை வசீகரித்து வருகிறது. எஞ்சின் ஆப்ஷன்களில் மாறுதல்கள் இல்லை.

ஃபியட் புன்ட்டோ எவோ

6. ஹூண்டாய் எலைட் ஐ20

6. ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டிசைன் மதிமயங்க செய்கிறது. அத்துடன் வசதிகளும் சேர்த்து ஓர் 'ஃபுல் மீல்ஸ்' விருந்தை இந்தியர்களுக்கு படைத்தது ஹூண்டாய் . முன்பதிவில் இதுவரை எந்த ஹூண்டாய் காரும் செய்யாத எண்ணிக்கை இலக்கை அடைந்து அந்த நிறுவனத்துக்கு உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. 2015ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 11ந் தேதி இந்த கார் விற்பனைக்கு வந்தது.

ஹூண்டாய் எலைட் ஐ20 முழு விபரம்

 7. டாடா ஸெஸ்ட்

7. டாடா ஸெஸ்ட்

மூலையில் முடங்கி கிடந்த டாடாவுக்கு புதுத்தெம்பு கொடுத்து எழுந்து உட்கார வைத்திருக்கும் மாடல் ஸெஸ்ட். டீசல் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட முதல் மாடல் என்ற பெருமையும் இந்த காருக்கு உண்டு. கடந்த ஆகஸ்ட் 13ந் தேதி விற்பனைக்கு வந்த டாடா ஸெஸ்ட் காருக்கான முன்பதிவு காத்திருப்பு காலத்தின் அந்த காரின் வெற்றி உணர்த்தப்படுகிறது. ஓர் முழுமையான ஆட்டோமேட்டிக் காராக குறிப்பிட முடியாவிட்டாலும், கிளட்ச் தொல்லையில்லாத இந்த கார் டீசல் ஆட்டோமேட்டிக் கார் வரிசையில் மிக குறைவான விலை கொண்டது.

டாடா ஸெஸ்ட் முழு விபரம்

8. புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

8. புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்கி வரும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை முழுவதுமாக மாற்றி புதிய தலைமுறை மாடலாக கடந்த செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முன்பதிவிலும் அசத்திய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, சரியான விலையிலான ஓர் பர்ஃபெர்க்ட் எஸ்யூவி மாடலாக மாறியுள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ முழு விபரம்

9. மாருதி சியாஸ்

9. மாருதி சியாஸ்

தூங்கி வழிந்த எஸ்எக்ஸ்- 4 காருக்கு மாற்றாக அக்டோபர் 6ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி சியாஸ் செடான் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முன்பதிவிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. ஆனால், செக்மென்ட் லீடர் ஹோண்டா சிட்டியை விற்பனையில் விஞ்ச முடியவில்லை.

மாருதி சியாஸ் முழு விபரம்

10. ஃபியட் அவென்ச்சுரா

10. ஃபியட் அவென்ச்சுரா

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடல்களில், அதிக மாறுதல்கள் செய்யப்பட்ட மாடல் அவென்ச்சுராதான். புன்ட்டோ எவோ அடிப்படையிலான மாடலாக இருந்தாலும், இதனை புதிய பிளாட்ஃபார்மில் கட்டமைத்துள்ளதாக ஃபியட் தெரிவிக்கிறது. கடந்த அக்டோபர் 21ல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபியட் அவென்ச்சுரா செம ஸ்டைலான ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் மாடலாகவும் குறிப்பிடலாம்.

ஃபியட் அவென்ச்சுரா முழு விபரம்

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

பட்டியலில் இடம்பெற்ற 10 சிறந்த கார் மாடல்களை தவிர்த்து, இதர சில முக்கிய மாடல்களும் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்தன. அவை ஒவ்வொரு காரணத்தின் அடிப்படையில், இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் விற்பனையில் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதுடன், கிராஷ் முடிவுகளும் இதற்கு பாதகமாக அமைந்துவிட்டது. மார்ச்சில் வந்த மற்றொரு மாடலான ஃபியட் லீனியா ஃபேஸ்லிஃப்ட் காரும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் இல்லாததால், விற்பனையில் பழைய கதையையே தொடர்கிறது. மாருதி ஆல்ட்டோ 800 அடிப்படையில் வந்த ஆல்ட்டோ கே10 கார் பிரத்யேக வாடிக்கையாளர்களை மட்டும் குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த மாடலும் இடம்பெறவில்லை.(தொடர்ச்சி அடுத்த ஸ்லைடில்...)

இதர மாடல்கள்(தொடர்ச்சி...)

இதர மாடல்கள்(தொடர்ச்சி...)

அஸ்டன் மார்ட்டின் ஸ்டைலிலான கிரில் அமைப்புடன் வந்த ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரும் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை. டீசல் மாடலில் மட்டும் வந்த ஃபோர்டு ஃபியஸ்ட்டா போட்டியாளர்களை விட குறைவான விலையில் வந்தும் சக்சஸ் பட்டியலில் இல்லை. ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடலும் சிறந்த மாடலாக இருந்தாலும், விற்பனையில் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மிக குறைவான எண்ணிக்கையையே பதிவு செய்து வருகிறது. கடந்த மே மாதம் விற்பனைக்கு வந்த டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரும் சிறந்த மாடல்களில் ஒன்றாக கூறலாம். ரூ.15 லட்சத்திற்கும் மேலான ஆன்ரோடு விலையில் செல்வதால், பட்டியலில் இடம்பெறவில்லை. அடுத்த ஆண்டும் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Over numerous models that were launched in 2014, Drivespark has chosen 10 of the best cars launched in 2014, which could become mass sellers over the years to come.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark