ஜனவரி விற்பனையில் அசத்திய டாப் - 10 கார் மாடல்கள்!

Posted By:

வாகனங்களுக்கான உற்பத்தி வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டதால், ஜனவரியில் கார் விற்பனையில் சுணக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக கடந்த மாதம் கார் விற்பனை ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து கார் நிறுவனங்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

பெரும்பாலான கார் நிறுவனங்கள் சிறிதளவு விற்பனை உயர்வை சந்தித்திருப்பதால், புத்தாண்டு சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கடந்த மாதம் கார் விற்பனையில் டாப் - 10 இடங்களை பிடித்த கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. ஹோண்டா அமேஸ்

10. ஹோண்டா அமேஸ்

பட்டியலில் 10வது இடத்தில் ஹோண்டா அமேஸ் கார் இருக்கிறது. ஹூண்டாய் எக்ஸென்ட் மற்றும் டாடா ஸெஸ்ட் கார்களால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது அமேஸ். ஆனால், கடந்த மாதம் திடீரென உயிர்த்தெழுத்து 2வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 6,709 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை ஆன்ரோடு விலை

9.ஹூண்டாய் இயான்

9.ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான் கார் பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 6,820 இயான் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

சென்னை ஆன்ரோடு விலை

8. ஹோண்டா சிட்டி

8. ஹோண்டா சிட்டி

கடந்த மாதம் டாப் -10 பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது ஹோண்டா சிட்டி. கடந்த மாதம் 7,667 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியுள்ளன. மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் தொடர்ந்து சிட்டி கார்தான் நம்பர் -1 ஆக இருந்து வருகிறது.

சென்னை ஆன்ரோடு விலை

7.மஹிந்திரா பொலிரோ

7.மஹிந்திரா பொலிரோ

கடந்த மாதம் 5வது இடத்தை மஹிந்திரா பொலிரோ பிடித்தது. கடந்த மாதம் 8,515 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகளை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

சென்னை ஆன்ரோடு விலை

6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதம் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 6வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 8,724 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. மேலும், ஹூண்டாய் நிறுவனத்துக்கு சராசரியான பங்களிப்பை அளித்து வருகிறது.

சென்னை ஆன்ரோடு விலை

5. ஹூண்டாய் எலைட் ஐ20

5. ஹூண்டாய் எலைட் ஐ20

2020ம் ஆண்டு டிசைனில் வரவேண்டிய மாடலை முன்கூட்டியே வந்துவிட்டது போன்ற உணர்வை எலைட் ஐ20 டிசைன் நமக்கு தருகிறது. அதற்கு கைமேல் பலனாக இந்த காரின் விற்பனையும் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 9,541 எலைட் 20 கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

சென்னை ஆன்ரோடு விலை

4. மாருதி வேகன் ஆர்

4. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதம் மாருதி வேகன் ஆர் தனது ஆஸ்தான 4வது இடத்திலேயே இருந்தது. கடந்த மாதம் 12,861 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

சென்னை ஆன்ரோடு விலை

3. மாருதி டிசையர்

3. மாருதி டிசையர்

மாருதி டிசையர் கார் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 19,533 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. மாருதியின் விற்பனையில் டிசையர் மிக முக்கிய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது.

சென்னை ஆன்ரோடு விலை

2. மாருதி ஸ்விஃப்ட்

2. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனையும் சிறப்பான இடத்தில் உள்ளது. கடந்த ஜனவரியில் 19,669 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையகியுள்ளன.

சென்னை ஆன்ரோடு விலை

 1. மாருதி ஆல்ட்டோ

1. மாருதி ஆல்ட்டோ

கடந்த ஆண்டு உலக அளவில் ஒரு நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்ற மாருதி ஆல்ட்டோ தொடர்ந்து விற்பனையில் இந்தியாவின் நம்பர்- 1 கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 22,889 ஆல்ட்டோ கார்களை மாருதி கார் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

சென்னை ஆன்ரோடு விலை

கார்களின் ஆன்ரோடு விலை விபரம்

கார்களின் ஆன்ரோடு விலை விபரம்

புதிய கார்கள் பக்கத்திற்கு இங்கே க்ளிக் செய்க.

ஆன்ரோடு விலை பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்க.

 
English summary
Let’s take a look at top 10 cars that sold the most in Januaray 2015.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark