கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுரின் கார் வாங்கும் கனவை நனவாக்கிய நிஸான் இந்தியா..!!

Written By:

மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் விளையாடி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய வீரங்கானை ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் இந்தியா நிறுவனம் புதிய டடஸன் ரெடி-கோ ஸ்போர்ட் காரை பரிசாக அளித்துள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது, அந்த போட்டியில் சுமார் 171 ரன்களை குவித்து, இந்தியாவை இறுதி போட்டிக்கு கொண்டு சென்றவர் ஹர்மன்ஃபீரித் கவுர்.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

இறுதிபோட்டிக்குள் நுழைந்த இந்தியா, இங்கிலாந்து அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் உலக கோப்பையை பறிக்கொடுத்தது.

இருப்பினும், தான் விளையாடியவரை இங்கிலாந்து வீராங்கனைகளை பதற்றத்திலே இருக்கச்செய்தார் ஹர்மன்ஃபீரித் கவுர்.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் இன்று நம்பிக்கை மகளாக ஒளிர்கிறார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

இவரது திறமையை கௌரவிக்கும் படி பிரபல நிஸான் இந்தியா நிறுவனம் டெட்ஸன் ரெடிகோ காரை பரிசாக வழங்கியுள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகளவிலான போட்டிகளில் கடந்த 2015ல் நிஸான் இந்தியா பிரோமஷன் பணிகளில் பங்கெடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

2023 வரை இருக்கும் இந்த ஒப்பந்தத்தின் படி, ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை, சேம்பியன்ஸ் டிராஃபி, ஐசிசி உலக ட்வண்டி ட்வண்டி மற்றும்

19 வயது கீழ் உள்ளவர்களுக்கான மகளிர் கிரிக்கெட் என ஐசிசி நடத்து அனைத்து விதமான போட்டிகளுக்கும் அதிகாரப்பூர்வமான ஸ்பான்சர் நிஸான் இந்தியா தான்.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

ஆக்கத்திறன் பெற்ற மற்றும் உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மையப்படுத்திய பல்வேறு செயல்பாடுகளை செய்ய நிஸான் இந்தியா ,ஐசிசி-யின் கூட்டு ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

வீராங்கனை ஹரிமன்ப்ரீத் கவுருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ஹேட்ச்பேக் மாடல் டட்சன் ரெடி-கோ ஸ்போர்ட் கார், 800சிசி திறன் பெற்ற பெட்ரோல் எஞ்சினில் இயங்கும். 53.2 பிஎச்பி பவர் மற்றும் 72 என்.எம் டார்க் திறனை வழங்கும். 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இதில் உள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

காரை வழங்கிய பின் நிஸான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அருண் மல்ஹோத்ரா

"ஹர்மன்ப்ரீத் கவுர் போன்ற ஆற்றல் பெற்றவருக்கு இந்த பரிசு வழங்குவதில் நிஸான் இந்தியா பெருமை அடைகிறது. மகளிர் சர்வதேச ஒரு நாள் இன்னிங்கிஸின் சிறந்த வீராங்கையாகவும் உள்ளார்" என்றார் அவர்.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

விளையாட்டு துறையில் சாதிக்கும் பல்வேறு வீரர் வீராங்கனைகளை பல துறை சார்ந்தவர்களை விட ஆட்டோமொபைல் உலகம் உடனே அடையாளம் காண்கிறது.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நிஸான் அளித்த சர்பரைஸ்..!!

முன்னதாக ஒலிம்பிக்கில் வெற்றிப்பெற்ற பி.வி. சிந்துவிற்கு இதே மாடல் டட்சன் ரெடி-கோ மாடல் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Read in Tamil: Nissan Gifts Datsun redi-Go Sport To Cricketer Harmanpreet Kaur. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark