புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

Written By:

மிக மிக சவாலான விலையில், புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மும்பையில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் இந்த புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விபரங்கள் வெளியிடப்பட்டன. அவற்றை விரிவாக காணலாம்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஸ்போர்ட், லான்ஜிடியூட் மற்றும் லிமிடேட் என்ற மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். 4 வீல் டிரைவ் ஆப்ஷன் டீசல் வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு மற்றும் டிசைன் தாத்பரியங்களுடன் மிக நேர்த்தியான எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர்வதற்கு டிசைன் முக்கிய காரணமாக இருக்கும்.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Expert Review Of Tata Nexon - DriveSpark
புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் எல்இடி பகல்நேர விளக்குகள், 16 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கூரை பிரத்யேக வண்ணத்தில் இரட்டை வண்ணக் கலவையுடன் கிடைக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

இன்டீரியரில் இரட்டை வண்ணக் கலவையிலான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கருப்பு மற்றும் சாம்பல் வண்ண இன்டீரியர் பாகங்களும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

இந்த காரில் 5 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் வசதி இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

டாப் வேரியண்ட்டுகளில் எச்ஐடி ஹெட்லைட்டுகள், டியூவல் ஸோன் ஏசி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார், கீ லெஸ் என்ட்ரி போன்றவை முக்கியமானதாக குறிப்பிட முடியும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும், டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் ஆஃப்ரோடு எனப்படும் கடினமான நிலப்பரப்புகளில் பயன்படுத்துவதற்கான ஜீப் ஆக்டிவ் டிரைவ் மற்றும் செலக்- டெர்ரெயின் டிராக்ஷன் மேனெஜ்மென்ட் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்பங்களுடன் இணைந்து செயல்படும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், பிரேக் பவரை சரி விகிதத்தில் பிரித்து சக்கரங்களுக்கு செலுத்தும் இபிடி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதிக நிலைத்தன்மையுடன் காரை செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட 50 பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தியாவின் மிகுந்த பாதுகாப்பு மிக்க எஸ்யூவி மாடல்களில் ஒன்றாகவும் கூறலாம்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஹைட்ரோ புளூ, எக்ஸோடிக்கா ரெட், பிரில்லியண்ட் பிளாக், வோக்கல் ஒயிட் மற்றும் மினிமல் க்ரே ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

புதிய ஜீப் காம்பஸ் ரூ.14.95 லட்சம் முதல் ரூ.20.65 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹூண்டாய் டூஸான் என்ற நேரடி போட்டியாளர் மட்டுமின்றி, 7 சீட்டர் மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி500, டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட மாடல்களுக்கும் போட்டியை தரும் வாய்ப்புள்ளது.

பெட்ரோல் மாடல் விலை விபரம்

பெட்ரோல் மாடல் விலை விபரம்

புதிய ஜீப் காம்பஸ் காரின் பெட்ரோல் மாடலின் விலை விபரங்களை வேரியண்ட் வாரியாக கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்

பெட்ரோல் மாடல் எக்ஸ்ஷோரூம் விலை
ஸ்போர்ட் ரூ.14.95 லட்சம்
லிமிடேட் ரூ.18.70 லட்சம்
லிமிடேட் ஆப்ஷன் ரூ.19.40 லட்சம்
டீசல் மாடல் விலை விபரம்

டீசல் மாடல் விலை விபரம்

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் மாடலின் விலை விபரங்களை வேரியண்ட் வாரியாக கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்

டீசல் மாடல் எக்ஸ்ஷோரூம் விலை
ஸ்போர்ட் ரூ. 15.45 லட்சம்
லான்ஜிடியூட் ரூ. 16.45 லட்சம்
லான்ஜிடியூட் ஆப்ஷன் ரூ. 17.25 லட்சம்
லிமிடேட் ரூ. 18.05 லட்சம்
லிமிடேட் ஆப்ஷன் ரூ. 18.75 லட்சம்
லிமிடேட் 4x4 ரூ. 19.95 லட்சம்
லிமிடேட் ஆப்ஷன் 4x4 ரூ.20.65 லட்சம்
புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட்டு 40 நாட்களில் 38,000 விசாரணைகளும், 5,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளும் இதுவரை கிடைத்திருப்பதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் மாடல்தான் முதலில் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. பெட்ரோல் மாடலுக்கான டெலிவிரி சற்று தாமதமாகவே துவங்கப்பட உள்ளதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழுவிபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டருக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. டீலர் எண்ணிக்கை மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்துவதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருவதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் சாதக, பாதகங்களை அலசும் எமது விரிவான டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும்... #ஜீப் #jeep #flashback 2017
English summary
Jeep has launched the Compass in the Indian market with prices starting at Rs 14.95 lakh for the base petrol variant, going up to Rs 20.65 lakh for the top-spec diesel 4x4 variant.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark