ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது டொயோட்டா அல்ஃபார்டு சொகுசு மினி வேன்!

Written By:

புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக, அந்த காருக்கு எந்தளவு வரவேற்பும், வர்த்தக வாய்ப்புகளும் இருக்கும் என்பதை கார் நிறுவனங்கள் ஆய்வு செய்வது வழக்கம். அவ்வாறு ஆய்வு செய்வதற்கான சிறந்த தளமாக ஆட்டோமொபைல் கண்காட்சிகள் விளங்குகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

அதேபோன்ற யுக்தியை வைத்துத்தான் கான்செப்ட் எனப்படும் மாதிரி மாடல்களை உருவாக்கி, அதனை ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் காட்சிக்கு வைத்து, அது பார்வையாளர்களிடம் பெறும் வரவேற்பை வைத்து அதனை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கு கார் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

அந்த வகையில், தனது அல்ஃபார்டு சொகுசு ரக மினி வேனை இந்தியாவில் களமிறக்குவதற்கு முன்பாக வர்த்தக வாய்ப்புகளை ஆய்வு செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

அதன்படி, கிரேட்டர் நொய்டாவில் நாளை துவங்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா அல்ஃபார்டு சொகுசு ரக மினி வேன் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. இந்திய பார்வையாளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா முடிவு செய்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

பெரும் பணக்காரர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த சொகுசு ரக மினி வேனை விரும்பி பயன்படுத்துவதுடன், விவிஐபி உபயோகத்திற்கான வாடகை கார் மார்க்கெட்டிலும் இந்த காருக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

தற்போது டொயாட்டா அல்ஃபார்டு எம்பிவி காரை விரும்புவோர் இறக்குமதி செய்து வாங்குகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி கூட இந்த காரையே பயன்படுத்துகிறார். அவரது வீல் சேர் உள்ளே சென்று இருப்பதற்கான விசேஷ வசதியுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

5 மீட்டர் நீளமுடைய இந்த மினி வேன் 7 சீட்டர் சொகுசு எம்பிவி ரக காராக வரையறுக்கப்படுகிறது. அதாவது, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட மிகவும் பிரிமியமான மினி வேன் ரகத்தில் இது நிலைநிறுத்தப்படும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

சர்வதேச அளவில் இந்த கார் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளிலும், ஒரு ஹைப்ரிட் மாடலிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் பயன்படுத்தப்படும் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், அதிகபட்சமாக 179 பிஎச்பி பவரையும், 235 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

இதே 2.5 லிட்டர் எஞ்சினுடன், கூடுதலாக இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து செயல்படும் ஆற்றல் வாய்ந்த ஹைப்ரிட் ரக எஞ்சின் தேர்விலும் இந்த மினி வேன் கிடைக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

மற்றொரு எஞ்சின் தேர்வானது 3.5 லிட்டர் வி6 எஞ்சின் மாடலில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 297 பிஎச்பி பவரையும், 361 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

இந்த காரின் இன்டீரியரும் மிக மிக பிரிமியமானது. சாய்மான வசதியுடன் உயர்தர சொகுசு இருக்கைகள், மரத் தகடுகளுடன் கூடிய உள்பக்க அலங்காரம் கவர்கிறது. இந்த மினி வேனில் இருக்கும் நடுவரிசை இருக்கைகளை விரும்பம்போல் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

பல ஆண்டுகளாக இந்தியாவில் இந்த சொகுசு ரக மினி வேன் இறக்குமதி செய்து வாங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இறக்குமதி செய்தே விற்பனை செய்யப்படும் என்பதால் விலையும் மிக அதிகமாகவே இருக்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

சொகுசு கார்களைவிட இந்த மினி வேன் அளிக்கும் சுகத்தை வெளிநாடுகளில் அனுபவித்த பல இந்திய பணக்காரர்கள், இதனை இறக்குமதி செய்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் டொயோட்டா அல்ஃபார்டு!

நிரந்தர அல்லது தற்காலிக இறக்குமதி அனுமதியுடன் தற்போது இந்தியாவில் கிடைக்கும் இந்த மினி வேன் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டால், டீலர்கள் வாயிலாக எளிதாக வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறுவர்.

English summary
Toyota Alphard luxury van to be showcased at the Auto Expo 2018. The Alphard is Toyota's flagship MPV and can carry 7 passengers in luxury.
Story first published: Tuesday, February 6, 2018, 18:45 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark