ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

Written By:

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று, விலையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

கடந்த நவம்பர் மாதம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து தற்போது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ரியர் பார்க்கிங் சென்சார்கள், குறிப்பிட்ட வேகத்தில் கதவுகள் தானாக பூட்டிக் கொள்ளும் ஆட்டோ டோர் லாக், பயணிகள் சீட் பெல்ட் அணிவது குறித்து எச்சரிக்கும் அலாரம் உள்ளிட்டவை இப்போது அனைத்து வேரியண்ட்டுகளிலும் பொதுவான அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

டிரென்ட் வேரியண்ட்டில் இருந்து இப்போது ரியர் வியூ கேமரா நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. விலை குறைவான ஆம்பியன்ட் வேரியண்ட்டை தவிர்த்து பிற அனைத்து வேரியண்ட்டுகளிலும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 9 அங்குல திரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வந்துள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக அமையும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

இந்த சாதனத்துடன் சிங்க்-3 சாஃப்ட்வேர் வசதியுடன் கிடைக்கிறது. வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் அவசர காலத்தில் அருகிலுள்ள அவசர உதவி மையங்களை தானியங்கி முறையில் தொடர்பு கொள்ளும் வசதியை சிங்க்-3 சாஃப்ட்வேர் வழங்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

டைட்டானியம் வேரியண்ட்டில் இருந்த ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் மைகீ போன்ற சிறப்பு வசதிகள் நீக்கப்பட்டுள்ளன. டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் மட்டுமே இந்த வசதிகள் இனி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புதிய விலை விபரத்தையும், விலை வித்தியாசத்தையும் கீழே உள்ள அடட்வணையில் பார்க்கலாம்.

வேரியண்ட் புதிய விலை பழைய விலை வித்தியாசம்
ஆம்பியன்ட் (பெ) மேனுவல் ரூ.7,82,200 ரூ.7,77,300 ரூ.4,900
டிரென்ட் (பெ)மேனுவல் ரூ.8,56,200 ரூ.8,46,300 ரூ.9,900
டிரென்ட் ப்ளஸ் (பெ) ஆட்டோமேட்டிக் ரூ.9,75,800 ரூ.9,65,900 ரூ.9,900
டைட்டானியம் (பெ) மேனுவல் ரூ.9,55,400 ரூ.9,50,500 ரூ.4,900
டைட்டானியம் ப்ளஸ் (பெ) மேனுவல் ரூ.10,52,300 ரூ.10,47,400 ரூ.4,900
டைட்டானியம் ப்ளஸ் (பெ) ஆட்டோமேட்டிக் ரூ.11,35,600 ரூ.11,30,700 ரூ.4,900
ஆம்பியன்ட் (டீ) மேனுவல் ரூ.8,41,700 ரூ.8,37,300 ரூ.4,400
டிரென்ட் (டீ) மேனுவல் ரூ.9,15,700 ரூ.9,06,300 ரூ.9,400
டிரென்ட் ப்ளஸ் (டீ) மேனுவல் ரூ.9,55,700 ரூ.9,46,300 ரூ.9,400
டைட்டானியம் (டீ) மேனுவல் ரூ.11,04,300 ரூ.10,09,900 ரூ.4,400
டைட்டானிம் ப்ளஸ் (டீ) மேனுவல் ரூ.11,04,300 ரூ.10,99,900 ரூ.4,400

*குறிப்பு: அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 122 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. டீசல் எஞ்சின் 98.6 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கூடுதல் வசதிகள்... விலையும் அதிகரிப்பு!!

இது வாடிக்கையாளர்களுக்கு சற்று கூடுதல் சுமையை தரும் விஷயமாக இருந்தாலும், கூடுதல் சிறப்பம்சங்கள் நிச்சயம் மதிப்பு மிக்கதாக இருக்கும். வழக்கம்போல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford launched the facelifted EcoSport in India in November 2017. Now, after five months of its launch, Ford has updated the features of the compact SUV. Yes, TeamBHP reports that Ford has updated the equipment list of the EcoSport and has increased the prices of the SUV.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark