புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.5.09 லட்சம் முதல் ரூ.7.89 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில

By Saravana Rajan

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதிகாரப்பூர்வ விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் தலா நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். விலை குறைவான ஆம்பியன்ட் வேரியண்ட், நடுத்தர விலையிலான ட்ரென்ட் மற்றும் டைட்டானியம் வேரியண்ட் மற்றும் விலை உயர்ந்த வேரியண்ட் டைட்டானியம் ப்ளஸ் என்ற பெயரில் வந்துள்ளது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.09 லட்சம் என்ற மிக சவாலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. டாப் வேரியண்ட் ரூ.7.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!
வேரியண்ட் பெட்ரோல் டீசல்
ஆம்பியன்ட் ₹ 509,000 ₹ 609,000
ட்ரென்ட் ₹ 599,000 ₹ 699,000
டைட்டானியம் ₹ 639,000 ₹ 735,000
டைட்டானியம் ப்ளஸ் ₹ 694,000 ₹ 789,000
புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

பெட்ரோல் மாடலின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.0 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும் தரும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. நடைமுறையிலும் சிறப்பான மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபிகோ காரின் அடிப்படையில் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறிய டிசைன் மாற்றங்களுடன் க்ராஸ்ஓவர் ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மாடல் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல். ஃபிகோ காரைவிட கூடுதல் கம்பீரத்தை பெற்றிருக்கிறது.

புதிய பம்பர் அமைப்பு, கருப்பு புகை பின்னணி கொண்ட ஹெட்லைட்டுகள், ஸ்கிட் பிளேட்டுகள், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள், 15 அங்குல அலாய் சக்கரங்கள் மற்றும் அதிக தரை இடைவெளி போன்றவை இந்த காரை ஃபிகோ காரிலிருந்து வேறுபடுத்துகின்றது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் சாக்லேட் மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. சிங்க்-3 சாஃப்ட்வேர் முக்கிய அம்சம். இந்த சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்சின் புஷ் ஸ்டார்ட் பட்டன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் வைப்பர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கீ போன்றவை முக்கிய தொழில்நுட்ப வசதிகளாக இடம்பெற்றுள்ளது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், எஞ்சின் இம்மொபைலைசர், பெரிமீட்டர் தெஃப்ட் அலாரம், அப்ரோச் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

விலை உயர்ந்த மாடலில் கூடுதலாக பக்கவாட்டுக்கான ஏர்பேக்குகளும், கர்டெயின் ஏர்பேக்குளும் இடம்பெற்றுள்ளன. எமெர்ஜென்சி அசிஸ்ட், ஆக்டிவ் ரோல்ஓவர் புரொடெக்ஷன் தொழில்நுட்பங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் கேன்யோன் ரிட்ஜ், மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக் க்ரே, ஒயிட் கோல்டு, ஆக்ஸ்போர்டு ஒயிட் மற்றும் அப்சொலியூட் பிளாக் ஆகிய 6 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு கூடுதல் ஆக்சஸெரீகளையும் விருப்பத்தின் பேரில் வாங்கி பொருத்த முடியும். ரியர் ஸ்பாய்லர், சுறா துடுப்பு ஆன்டென்னா, 15 அங்குல அலாய் வீல்கள், விசேஷ பாடி ஸ்டிக்கர்கள், சீட் கவர்கள், சூரிய வெளிச்சத்தை தடுக்கும் சன் பிளைன்டு உள்ளிட்ட பல ஆக்சஸெரீகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்சினை பாதுகாக்கும் எஞ்சின் ஷீல்டு, ரியர் கேமரா, ரூஃப் ரெயில்கள், ஸ்மார்ட் ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகளும் குறைவான வேரியண்ட்டுகளை வாங்குவோர் விருப்பத்தின்பேரில் வாங்கி பொருத்த முடியும்.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் மற்றும் ஃபியட் அவென்ச்சுரா ஆகிய மாடல்களுக்கு புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ford
English summary
Ford Freestyle launched in India. Ford has launched the Freestyle CUV (Compact Utility Vehicle) in the country with a starting price of Rs 5.09 lakh ex-showroom (Delhi).
Story first published: Thursday, April 26, 2018, 15:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X