Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் கன்வெர்ட்டிபிள் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி மாடல் என்ற பெருமையுடன் தடம் பதிக்கும் இந்த புதிய மாடலின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி இந்தியாவில் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே வந்துள்ளது. இந்த எஸ்யூவி அதிகபட்ச வசதிகள் கொண்ட HSE Dynamic என்ற டாப் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.
புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் கன்வெர்ட்டிபிள் மாடல் 2 கதவுகள் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலுக்கும் இந்த கன்வெர்ட்டிபிள் மாடலுக்கும் டிசைனில் பொதுவான டிசைனில் மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், மூடி திறக்கும் வசதியுடன் கூடிய ஃபேப்ரிக் கூரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
உலகில் தயாரிப்பில் உள்ள கன்வெர்ட்டிபிள் கார் மாடல்களில் பெரிய அளவிலான மூடி திறக்கும் கூரை அமைப்பாக இதனை லேண்ட்ரோவர் நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்த காரின் ஃபேப்ரிக் கூரையானது திறப்பதற்கு 18 வினாடிகளையும், மூடுவதற்கு 21 வினாடிகளையும் எடுத்துக் கொள்கிறது.
புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் கார் 4,370மிமீ நீளமும், 1,900மிமீ அகலமும், 1,609மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண எவோக் எஸ்யூவியைவிட இது 10 மிமீ கூடுதல் நீளம் கொண்டது. அதேநேரத்தில், அகலம் 220மிமீ வரையிலும், உயரம் 26மிமீ வரையிலும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஸ்யூவி 500மிமீ ஆழமுடைய நீர்நிலைகளில் கூட செல்வதற்கான கட்டமைப்பை பெற்றிருக்கிறது. மூடி திறக்கும் கூரைக்கான இடவசதி பூட் ரூமில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த எஸ்யூவியில் 251லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடம்பெற்றிருக்கிறது. இது சாதாரண மாடலைவிட 73 லிட்டர் குறைவு.
டாப் வேரியண்ட் மாடலாக வந்திருக்கும் இந்த புதிய எவோக் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவியில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 16 ஸ்பீக்கர்கள் கொண்ட 825W மெரிடியன் சர்ரவுண்ட் சவுன்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.
நேவிகேஷன் வசதி, 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், முன்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.
இந்த எஸ்யூவியில் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், கார் கவிழாமல் பாதுகாக்கும் ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ட்ரெயிலர் கவிழாமல் செல்வதற்கான தொாழில்நுட்ப வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகள் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.
புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 241 பிஎஸ் பவரையும்,340 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஸ்யூவியில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 8.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 217 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியாவின் முதல் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி என்பதோடு, கூரை இல்லாமல் அதிவேகத்தில் செல்லும்போது புதிய பரவச பயண அனுபவத்தை வழங்கும்.
புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி ரூ.69.53 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண எவோக் எஸ்யூவியின் HSE Dynamic வேரியண்ட்டைவிட இந்த கன்வெர்ட்டிபிள் மாடல் ரூ.9.54 லட்சம் கூடுதல் விலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!