சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஹூண்டாய் வெனியூ காரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி ரக காரான ஹூண்டாய் வெனியூ இந்திய மார்க்கெட்டில் வரும் மே 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கி விட்டது. ஹூண்டாய் டீலர்ஷிப்களில் ரூ.21 ஆயிரம் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர ஹூண்டாய் இந்தியா வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

தற்போது இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்கள்தான் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன.

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

மேற்கண்ட போட்டியாளர்களுக்கு ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி கடும் சவாலாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால், ஹூண்டாய் வெனியூ காரின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

MOST READ: பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு... பாதுகாவலர் சொன்ன வினோத காரணம்

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஆலையில்தான் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் உற்பத்தி முழு வீசத்தில் நடைபெற்று வருகிறது. ஹூண்டாய் வெனியூ காரின் உற்பத்தி நேற்று முன் தினம் (மே 6) தொடங்கப்பட்டது.

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

இது ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிக முக்கியமான நாள் ஆகும். ஏனெனில் இது இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் 23வது பவுண்டேஷன் தினம் என்பது கூடுதல் சிறப்பு. சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (மே 6) ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால்பதித்தது.

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (Hyundai Motor India Ltd.) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.எஸ்.கிம் கூறுகையில், ''இது எங்களுக்கு பெருமை மிகு தருணம் ஆகும்.

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

இன்டஸ்ட்ரீயில் புதிய வரையறைகளை நிர்ணயிக்கும் தரமான கார்களை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியுடன், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாளில் ஹூண்டாய் இந்தியாவில் நுழைந்தது'' என்றார்.

MOST READ: நீங்க சிங்கிளா? அப்போ இணையத்தில் வைரலாகும் இந்த இளம்ஜோடியின் வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்...

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

இந்த சூழலில், சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் பிளாண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் வெனியூ காரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பணியாளர்களின் ஆரவாரத்திற்கு இடையே வெளிவந்த முதல் வெனியூ காரின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஸ்டார் டஸ்ட், ஃபயரி ரெட், போலார் ஒயிட், டைபூன் சில்வர், டீப் ஃபாரஸ்ட், லாவா ஆரஞ்ச், டெனிம் ப்ளூ என மொத்தம் 7 மோனோ டோன் கலர் ஆப்ஷன்களில் ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது.

சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ

இதுதவிர ப்ளூ உடனான ஒயிட் ரூஃப், ஒயிட் உடனான ப்ளாக் ரூஃப் மற்றும் ஆரஞ்ச் உடனான ப்ளாக் ரூஃப் என 3 ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களும் வழங்கப்படவுள்ளன. ஹூண்டாய் வெனியூ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles

English summary
First Hyundai Venue Compact SUV Roll out Of Tamil Nadu Plant- Watch Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X