ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் டைட்டானியம் ப்ளஸ் மற்றும் டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

ஈக்கோஸ்போர்ட் காரின் டைட்டானியம் ப்ளஸ் மற்றும் டைட்டானியம் வேரியண்ட்களில் வழங்கப்படும் வசதிகளை மாற்றி அமைப்பது தொடர்பாக ஃபோர்டு நிறுவனம் பரிசீலித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

இதன்படி டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில், சிங்க்3 இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகிய வசதிகள் இடம்பெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் வசதிகளையும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் இழக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பதிலாக சன் ரூஃப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

அதேபோல் கருப்பு மற்றும் பழுப்பு வண்ண ட்யூயல் டோன் கொண்ட இன்டீரியர் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் டைட்டானியம் வேரியண்ட்டும் சில வசதிகளை இழக்க உள்ளதாக தெரிகிறது.

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

இதன்படி ரியர் பாசஞ்சர் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் சன் க்ளாஸ் ஹோல்டர் ஆகிய வசதிகளை டைட்டானியம் வேரியண்ட் ஒரு வேளை இழக்கலாம். ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

இதன்படி 121 பிஎச்பி பவர் மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர், மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் வழங்கப்படுகிறது. இதுதவிர 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் உள்ளது.

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது.

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பொறுத்தவரை, 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் என மொத்தம் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும்.

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போட்டியிட்டு வருகிறது. இதில், ஹூண்டாய் வெனியூ சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Ford EcoSport Variants List Gets Shuffled —Titanium+ Variant Loses Out On Several Features. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X