1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரில் 1 கிலோ மீட்டர் பயணம் செய்ய வெறும் 71 பைசா மட்டுமே செலவாகிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன் விலை 25.30 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. விலை சற்று அதிகம் என்றபோதிலும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 10 நாட்களுக்குள், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு 120 முன்பதிவுகள் கிடைத்தன. ஒரு பிரீமியம் எலெக்ட்ரிக் காருக்கு இது சிறப்பான முன்பதிவு எண்ணிக்கைதான். அத்துடன் இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனைக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதையும் இது எடுத்து காட்டியது.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

இந்த சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதன் காரணமாக, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை 23.71 லட்ச ரூபாயாக குறைந்தது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவின் 11 நகரங்களில் உள்ள 15 டீலர்ஷிப்களில் கிடைத்து வருகிறது. தற்போது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

எனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பயன்படுத்துவதற்கு எப்படி இருக்கிறது? என அதன் உரிமையாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் அகில் என்பவர் தனது புதிய எலெக்ட்ரிக் கார் நடைமுறை பயன்பாட்டில் எப்படி இருக்கிறது? என்பதை தற்போது கூறியுள்ளார்.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

ஹூண்டாய் கோனாவை பற்றி விவாதிக்க பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் அதன் ரேஞ்ச்தான் மிகவும் முக்கியமானது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் கோனா எலெக்ட்ரிக் கார் 452 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும் என ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அகில் அதனை சோதனை செய்து பார்த்துள்ளார்.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் உண்மையான மைலேஜை கண்டறிய அகில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இதனை தெரிந்து கொள்ளதான் பலரும் விரும்புகின்றனர். ஒரு முறை முழுமையாக 100 சதவீதம் சார்ஜ் செய்தால், ஹூண்டாய் கோனா 452 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் என அராய் அமைப்பும் சான்றளித்துள்ளது.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

ஆனால் நடைமுறையில் ஹூண்டாய் கோனா எவ்வளவு மைலேஜ் அளிக்கிறது என்பதை கண்டறிவதற்காக, முழுமையான சார்ஜில் இருந்து கிட்டத்தட்ட சார்ஜ் தீரும் வரை அகில் காரை ஓட்டி பார்த்துள்ளார். இந்த சோதனையின்போது அகில் நகர சாலைகள் மட்டுமல்லாது ஈகோ மோடில் வைத்து திறந்தவெளி சாலைகளிலும் காரை ஓட்டியுள்ளார்.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

இந்த பயணத்தில் 90 சதவீதம் அவர் நகர சாலைகளில்தான் காரை ஓட்டியுள்ளார். எஞ்சிய 10 சதவீதம் மட்டுமே திறந்தவெளி சாலைகளில் அவர் காரை ஓட்டினார். இந்த பயணத்தில் 50 சதவீத நேரம் ஏசி ஆன் செய்யப்பட்டிருந்தது. பேட்டரியின் சார்ஜ் 4 சதவீதத்திற்கு குறைந்தவுடன், அகில் காரை நிறுத்தி விட்டு இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் இருந்து ரீடிங்குகளை எடுத்தார்.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

அப்போது டிரிட் மீட்டர் 345.8 கிலோ மீட்டரை காட்டியது. ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்த அளவிற்கு இல்லையென்றாலும், இது உண்மையில் நல்ல ரேஞ்ச்தான். ஏனெனில் இன்னும் 18 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய தேவையான சார்ஜ் காரில் இருந்தது. அதற்கு முன்னதாகவே அகில் காரை நிறுத்தி விட்டார். அத்துடன் பெரும்பாலான நேரம் கார் நகர சாலைகளில்தான் ஓட்டப்பட்டது.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

எனவே நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அற்ற சாலைகளில் ஓட்டும்போது ஹூண்டாய் கோனா நிச்சயமாக 425-450 கிலோ மீட்டர்கள் மைலேஜை தரும் என அகில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதவிர ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை இயக்குவதற்கு எவ்வளவு செலவாகும் எனவும் அகில் தெரிவித்துள்ளார்.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

இதன்படி ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் முழுமையாக சார்ஜ் ஏற 40 யூனிட் மின்சாரம் செலவாகியுள்ளது. தற்போது உள்ள மின்சார கட்டணங்களின் அடிப்படையில் பார்த்தால், இதற்கு 250 ரூபாய் செலவாகும். ஆனால் இது மாறுபடலாம். ஏனெனில் இந்தியாவை பொறுத்தவரை மாநிலத்திற்கு மாநிலம் மின்சார கட்டணங்கள் வேறுபடும்.

1 கிமீ பயணிக்க வெறும் 71 பைசா மட்டுமே செலவு! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

இருந்தபோதும் அகிலுக்கு ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் நடைமுறை பயன்பாட்டில் சுமார் 350 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கியுள்ளது. இதை வைத்து கணக்கிடுகையில், இந்த காரை ஒரு கிலோ மீட்டர் இயக்க 1 ரூபாய்க்கும் குறைவாகவே (71 பைசா) செலவாகிறது. இது உண்மையில் சிறப்பான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Kona Electric SUV Range, Running Cost. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X