கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடலில் இடம்பெற இருக்கும் மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

இந்தியாவின் தன்னிகரற்ற எம்பிவி கார் மாடலாக டொயோட்டா இன்னோவா கார் விளங்குகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மற்றும் அரசு நிர்ணயித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு ஒப்பான அம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகப்பில் புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் மாற்றம் கொடுக்கப்பட்டு இருக்கும். புதிய வடிவமைப்புடன் கூடிய அலாய் சக்கரங்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

புதிய டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தற்போது பயன்படுத்தப்படும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

அதேபோன்று, 2.8 லிட்டர் டீசல் மாடலில் தற்போது விலை குறைவான ஜிஎக்ஸ் வேரியண்ட்டிலும், விலை உய்ந்த இசட்எக்ஸ் வேரியண்ட்டிலும் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய மாடலின் விஎக்ஸ் என்ற நடுத்தர வேரியண்ட்டிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன் கிடைக்கும். இதுதவிர்த்து, கூடுதல் வசதிகளுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் வயர்லெஸ் சார்ஜர் வசதியும் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது நிச்சயம் இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியையும், இதன் பிரிமீயம் அந்தஸ்தை உயர்த்தும் விதமாகவும் அமையும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாடிக்கையாளர்கள் அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கின்றனர். இந்த புதிய வசதிகள் மூலமாக இந்த அந்தஸ்து மேலும் அதிகரிக்கும். அதேபோன்று, விலையும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உயரும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மாருதி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ கார்களுக்கு போட்டியாக கருதலாம். ஆனால், விலை அடிப்படையில் புதிதாக வர இருக்கும் கியா கார்னிவல் காருக்கு நேரடி போட்டியாக அமையும்.

Via - IAB

Most Read Articles
English summary
According to reports, Toyota is planning to launch Innova Crysta Facelift model by early next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X