அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

புதுப்பித்தலைப் பெற்றிருக்கும் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட டொயோட்டா இன்னோவா கார் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

டெயோட்டா நிறுவனம், அதன் குடும்ப பயணங்களுக்கு ஏற்ற டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை புதுப்பித்து வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவு பெற்றிருக்கின்றன. எனவே விரைவில் புதுப்பித்தலைப் பெற்ற இன்னோவா க்ரிஸ்டா இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

ஆனால், அது எப்போது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில், இக்கார் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் இணையத்தின் வாயிலாக வெளியாகியிருக்கின்றது. இதனை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது. இது வெளியிட்டிருக்கும் தகவலின்படி இக்கார் இந்த மாதம் இறுதிக்குள்ளாகவே விற்பனைக்கு வந்துவிடும் என தெரியவந்துள்ளது.

அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

இதன் வருகையை முன்னிட்டு இப்போதே டீலர்கள் ரூ. 1 லட்சம் என்ற முன் தொகையில் ப்ரீ புக்கிங்கைச் செய்து வருவதாகவும் அது தகவல் வெளியிட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா குடும்ப பயணங்களுக்கு ஏற்ற காராகும். இந்த காரின் புதுப்பித்தலைப் பெற்ற மாடலையே ஏசியன் என்சிஏபி அண்மையில் மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

இதில், நல்ல தர மதிப்பெண்ணை இது பெற்றிருப்பதால் எதிர்காலத்தில் எம்பிவி சந்தையில் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இக்கார் மீதான எதிர்பார்ப்பு நீடித்து வந்தநிலையில் இதன் பாதுகாப்பு தரம் பற்றிய மேலும் ஆவலை அதிகரிக்கச் செய்து வருகின்றது.

அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

இந்த நிலையிலேயே இக்காரின் விற்பனை அறிமுகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ தகவல் அல்ல என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கார் அண்மையில் நடைபெற்ற ஏசியன் என்சிஏபி கிராஷ் பரிசோதனையில் 5ற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று சாதனைப் படைத்தது. இக்கார் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்பதே இதற்கான பொருள் ஆகும்.

அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

டொயோட்டா இன்னோவா பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 45.90 பாயிண்டுகளையும், சிறுவர்களின் பாதுகாப்பில் 21.51 பாயிண்டுகளையும் பெற்றிருக்கின்றது. இதேபோன்று, பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப வசதிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட மதிப்பீட்டில் இக்கார் 15.28 பாயிண்டுகளைப் பெற்றிருக்கின்றது.

அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

ஒட்டுமொத்தமாக 82.69 பாயிண்டுகள் ஆகும். இந்த அதிகபட்ச பாயிண்டுகளின் அடிப்படையிலேயே ஏசியன் என்சிஏபி 2020 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு 5 நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்ற பட்டத்தை வழங்கியிருக்கின்றது. மேலும், பல்வேறு மாற்றங்களை டொயோட்டா இந்த காரில் செய்திருக்கின்றது. ஆனால், இந்த புதிய மாற்றம் இன்னோவாவிற்கே உரித்தான தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

இந்த காரில் பாதுகாப்பு வசதிகளாக இரு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்பி மற்றும் இபிடி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், முன்பக்க பயணிகளுக்காக சீட் பெல்ட் ரிமைண்டர் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, க்ரிஸ்டா ஸ்டைலை மெருகேற்றும் வகையில் புதிய ஹெட்லேம்ப், பனி விளக்குகள், ஸ்போர்ட் தரத்திலான பம்பர் மற்றும் ஷார்ப்பான தோற்றமுடைய கிரில் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அதிக பாதுகாப்பு வசதியுடைய டொயோட்டா இன்னோவா... எப்போது விற்பனைக்கு வரும்? இதோ உங்களுக்கான பதில்!

இத்துடன், பிரீமியம் வசதிகளாக ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 9இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி சுழலக்கூடிய கேமிரா மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் பாயிண்ட் ஆகியவையும் இக்காரில் இடம்பெற்றிருப்பதாக முன்னதாக வெளியாகிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
2021 Toyota Innova Crysta Will Be Launched In India On November Month. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X