ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்... ஷோரூம் விலை ரூ.10.66 லட்சம்

ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் மாடலின் புதிய டைட்டானியம் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஃபோர்டு கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்... ஷோரூம் விலை ரூ.10.66 லட்சம்

சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் ஈக்கோஸ்போர்ட்டின் டைட்டானியம் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு அடியில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த புதிய வேரியண்ட்டின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.10.66 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்... ஷோரூம் விலை ரூ.10.66 லட்சம்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் 1.5 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 121 பிஎச்பி பவரையும், 149 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்... ஷோரூம் விலை ரூ.10.66 லட்சம்

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு மட்டுமின்றி சில சிறப்பம்சங்களையும் இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் வேரியண்ட் கொண்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்... ஷோரூம் விலை ரூ.10.66 லட்சம்

அவற்றில் பேடல் ஷிஃப்டர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ்-பொத்தான் ஸ்டார்ட்-ஸ்டாப், இரட்டை காற்றுப்பைகள், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் லான்ஞ் அசிஸ்ட் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்... ஷோரூம் விலை ரூ.10.66 லட்சம்

ஃபோர்டின் பிரபலமான இந்திய மாடல்களுள் முதன்மையானதாக விளங்கும் ஈக்கோஸ்போர்ட்டின் இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகத்தின்போது இந்த கார் குறித்து இந்நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல்-விற்பனை மற்றும் சேவை பிரிவின் நிர்வாக இயக்குனர் வினய் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்... ஷோரூம் விலை ரூ.10.66 லட்சம்

அவர் கூறுகையில், 2020 ஈக்கோஸ்போர்ட் லைன்-அப்பில் புதிய டைட்டானியம் மூலமாக ட்ரைவிங் முறையில் எந்தவொரு மாற்றமுமில்லாமல் ஆட்டோமேட்டிக் வசதியினை வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும் இது சந்தையில் இனி தானியங்கி தொழில்நுட்பங்களுக்கு வாடிக்கையாளர்கள் தீர்வு காண மாட்டார்கள் என்பதையும் உறுதி செய்யும் என தெரிவித்தார்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்... ஷோரூம் விலை ரூ.10.66 லட்சம்

காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வருவதால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலுக்கு விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford EcoSport Titanium AT launched in India; prices start at Rs 10.66 lakh
Story first published: Thursday, July 16, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X