ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஈக்கோஸ்போர்ட் மாடல் மிக விரைவில் மஹிந்திரா நிறுவனத்தின் டர்போ பெட்ரொல் என்ஜினை பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்திய சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் தான் ஈக்கோஸ்போர்ட் ஆகும். ஆனால் அப்போதிலிருந்து தற்போது வரை இந்த மாடலுக்கு பெரிய அளவில் எந்த அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனம் கொண்டு வந்ததாக தெரியவில்லை.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

இருப்பினும் இந்திய ஓட்டுனர்கள் இயக்குவதற்கு மிகவும் விரும்பும் கார்களுள் ஒன்றாக உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டிற்கு சந்தையில் போட்டியாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற கார்கள் உள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்காக மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ள செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதன் காரணமாக இரு நிறுவனங்களும் தங்களது இயந்திர பாகங்களை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்துள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

அதன்படி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் சில தயாரிப்புகளில் பொருத்தப்பட்டு வரும் டர்போ பெட்ரோல் என்ஜினை மிக விரைவில் பெறவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளி வந்துள்ளன. ஈக்கோஸ்போர்ட் மாடலில் ஏற்கனவே 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு ஈக்கோபூஸ்ட் என்ஜின் பொருத்தப்பட்டு வந்தது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

ஆனால் இந்த என்ஜின் தேர்வு கடந்த ஆண்டில் இருந்து இந்த காருக்கு வழங்கப்படுவதில்லை. இதன் இடத்தை நிரப்பும் வகையில் தான் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் கொண்டுவரப்படுகிறது. இது மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடலில் வழங்கப்பட்டு வரும் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினாக இருக்க தான் அதிக வாய்ப்புண்டு.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

1.2 லிட்டர் கொள்ளளவில் உள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் எக்ஸ்யூவி300 மாடலில் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதே அளவிலான ஆற்றலை தான் ஈக்கோஸ்போர்ட் மாடலில் இந்த என்ஜின் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

அதேபோல் புதியதாக 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடனான ஈக்கோஸ்போர்ட் மாடலின் அறிமுகத்தை அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கலாம். ஈக்கோஸ்போர்ட் காரானது தற்சமயம் 1.5 லிட்டர் டீசல் பிஎஸ்6 என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

இந்த டீசல் என்ஜினிற்கு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் வழங்கப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் உடன் புதியதாக இணையவுள்ள 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸை மட்டுமே பெறவுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

ஃபோர்டு நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் மாடலின் புதிய தலைமுறை காரின் தயாரிப்பில் ஏற்கனவே ஈடுப்பட்டு வரும் நிலையில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய தலைமுறை காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. முதலில் பிரேசில் நாட்டு சந்தையில் களம் காணவுள்ள புதிய ஈக்கோஸ்போர்ட் காரானது இந்திய சந்தைக்கு எப்போது வரும் என்ற கேள்விக்கான பதில் தற்போதைக்கு இல்லை.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்.. மஹிந்திராவின் கூட்டணியால் கிடைக்கிறது

இந்திய சந்தைக்காக இந்நிறுவனத்துடன் இணைந்துள்ள மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மாடல் அடுத்ததாக அறிமுகமாகவுள்ளது. ஃபோர்டு மோட்டார்ஸும் இந்த எஸ்யூவி500 மாடலை அடிப்படையாக கொண்டு புதிய எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford EcoSport will soon get a 1.2 litre turbo petrol engine from Mahindra XUV300
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X