2020 ஹூண்டாய் ஐ20 காரை இன்னும் மெருக்கேற்ற கூடுதல் ஆக்ஸஸரீகள் அறிமுகம்!! முழு விபரம் இதோ

புதிய தலைமுறை ஐ20 காருக்கு மூன்று ஆக்ஸஸரீ தொகுப்புகளை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹூண்டாய் ஐ20 காரை இன்னும் மெருக்கேற்ற கூடுதல் ஆக்ஸஸரீகள் அறிமுகம்!! முழு விபரம் இதோ

ஹூண்டாய் நிறுவனம் 2020 ஐ20 ஹேட்ச்பேக் காரை இந்த நவம்பர் மாத துவக்கத்தில் ரூ.6.79 லட்சம் என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தியது. இதன் டாப் அஸ்டா (O) ட்ரிம், ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மற்ற கார்களுக்கும் மேலாக சில புதிய வசதிகளை பெற்று வந்துள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 காரை இன்னும் மெருக்கேற்ற கூடுதல் ஆக்ஸஸரீகள் அறிமுகம்!! முழு விபரம் இதோ

இந்த நிலையில் தான் தற்போது எசென்ஷியோ, ப்ரீமியம் மற்றும் ரேடியண்ட் என்ற மூன்று ஆக்ஸஸரீ தொகுப்புகளை 2020 ஐ20-க்கு தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எசென்ஷியோ தொகுப்பு தான் மிக மலிவானதாகும். இந்த தொகுப்பை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.11,450 கூடுதலாக செலுத்தினாலே போதும்.

2020 ஹூண்டாய் ஐ20 காரை இன்னும் மெருக்கேற்ற கூடுதல் ஆக்ஸஸரீகள் அறிமுகம்!! முழு விபரம் இதோ

இந்த தொகுப்பின் மூலமாக கதவு விஸர், கதவு பக்கவாட்டு மொல்டிங், பம்பரின் கார்னர் பாதுகாப்பான் உடன் பின்பக்க பூட் லிட் மற்றும் நிலையான பாடி கவர் உள்ளிட்ட கார் பாகங்களை க்ரோம் தொடுதல்களுடன் பெறலாம்.

2020 ஹூண்டாய் ஐ20 காரை இன்னும் மெருக்கேற்ற கூடுதல் ஆக்ஸஸரீகள் அறிமுகம்!! முழு விபரம் இதோ

உட்புறத்தில் கருப்பு நிறத்தில் ஸ்டேரிங் சக்கரத்திற்கு கவர், பின்பக்க சேமிப்பிடத்திற்கான பாய், கேபினிற்கு 3டி பாய்கள், முன் இருக்கை பயணிகளுக்கு கழுத்து தலையணை மற்றும் கேபின் வாசனை திரவயம் உள்ளிட்டவற்றை இந்த தொகுப்பில் பெறலாம். எசென்ஷியோ தொகுப்பில் வழங்கப்படுகின்ற பெரும்பான்மையான ஆக்ஸஸரீகள் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ப்ரீமியம் தொகுப்பிலும் கிடைக்கும்.

2020 ஹூண்டாய் ஐ20 காரை இன்னும் மெருக்கேற்ற கூடுதல் ஆக்ஸஸரீகள் அறிமுகம்!! முழு விபரம் இதோ

அதேநேரம் கூடுதலாக சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க அனைத்து ஜன்னல்களிலும் மடிப்பு, இருக்கை கவர்கள், கருப்பு & சிவப்பு நிறங்களில் ஸ்டேரிங் சக்கர கவர் போன்றவற்றை கூடுதலாக பெறலாம். ப்ரீமியம் தொகுப்பிற்கு எசென்ஷியோ தொகுப்பை காட்டிலும் ரூ.9 ஆயிரம் அதிகமாக ரூ.20,559 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 காரை இன்னும் மெருக்கேற்ற கூடுதல் ஆக்ஸஸரீகள் அறிமுகம்!! முழு விபரம் இதோ

ரேடியண்ட் தொகுப்பு அதிகப்பட்ச ஸ்டைலிங் மற்றும் சவுகரிய அம்சங்களை வழங்கும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸஸரீ தொகுப்பை வாங்குவதன் மூலம் ஹெட்லைட்கள், டெயில்லைட்கள், டெயில்லேம்ப்கள், பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் இரட்டை-நிற கதவு ஸ்கஃப் தட்டுகள் உள்ளிட்டவற்றில் க்ரோம் தொடுதலை அதிகப்படுத்தலாம்.

2020 ஹூண்டாய் ஐ20 காரை இன்னும் மெருக்கேற்ற கூடுதல் ஆக்ஸஸரீகள் அறிமுகம்!! முழு விபரம் இதோ

உட்புற கேபினிற்காக ப்ரீமியம் தரத்திலான இருக்கை கவர்கள், கார்பெட் பாய்கள் மற்றும் கார் பராமரிப்பு தொகுப்பு போன்றவை மற்ற ஆக்ஸஸரீ தொகுப்புகளுடன் கூடுதலாக ரேடியண்ட் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பை வாடிக்கையாளர் கூடுதலாக ரூ.25,552 தொகையினை செலுத்தி சொந்தமாக்கி கொள்ளலாம்.

2020 ஹூண்டாய் ஐ20 காரை இன்னும் மெருக்கேற்ற கூடுதல் ஆக்ஸஸரீகள் அறிமுகம்!! முழு விபரம் இதோ

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே புதிய தலைமுறை ஐ20 காரை அட்டகாசமான தோற்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு இந்த மூன்று தொகுப்புகளும் கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹூண்டாய் ஐ20-க்கு விற்பனையில் டாடா அல்ட்ராஸ் முக்கிய போட்டியாக விளங்குகிறது.

Most Read Articles

English summary
New Hyundai i20 Accessory packages detailed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X