சமீபத்திய அறிமுகம், புதிய தலைமுறை ஐ20 காரை விளம்பரப்படுத்த தீவிரம் காட்டும் ஹூண்டாய்!!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை ஐ20 காரை இந்தியாவில் தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

சமீபத்திய அறிமுகம், புதிய தலைமுறை ஐ20 காரை விளம்பரப்படுத்த தீவிரம் காட்டும் ஹூண்டாய்!!

ஹூண்டாய் நிறுவனம் மிக சமீபத்தில்தான் அதன் முற்றிலும் புதிய ஐ20 ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் டாடா அல்ட்ராஸ் உள்ளிட்டவற்றின் போட்டியினை எதிர்கொள்ளவுள்ள இந்த 2020 மாடலின் ஆரம்ப விலை ரூ.6.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய அறிமுகம், புதிய தலைமுறை ஐ20 காரை விளம்பரப்படுத்த தீவிரம் காட்டும் ஹூண்டாய்!!

அதேநேரம் அதிகப்பட்சமாக ரூ.11.17 லட்சம் வரையிலும் இதன் விலை உள்ளது. டீலர்ஷிப் ஷோரூம்களை வேகமாக இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் சென்றடைந்து வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் புதிய டிவிசி வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் புதிய ஐ20 கார் எவ்வளவு கண்கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் ஹைலைட்களாக சுட்டி காட்டப்பட்டுள்ளன.

ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ யூடியுப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறையை காட்டிலும் புதிய தலைமுறை ஐ20 சற்று அகலமாகவும், அதிக நீளத்தில் வீல்பேஸ் உடனும் வடிவமைக்கபட்டுள்ளது. காரின் முன்பக்கம் 3டி டிசைன் பாகங்களுடன் அகலமான க்ரில்லை கொண்டுள்ளது.

சமீபத்திய அறிமுகம், புதிய தலைமுறை ஐ20 காரை விளம்பரப்படுத்த தீவிரம் காட்டும் ஹூண்டாய்!!

ஹெட்லைட்கள் அனைத்தும் டிஆர்எல்களுடன் எல்இடி தரத்தில் உள்ளன. பம்பர் பார்ப்பதற்கு கூர்மையான தோற்றத்திலும், மூடுபனி விளக்குகள் முக்கோண வடிவிலான ஹௌசிங் உடனும் உள்ளன. பக்கவாட்டில் க்ரோம் லைன் ஒன்று முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் செல்கிறது.

சமீபத்திய அறிமுகம், புதிய தலைமுறை ஐ20 காரை விளம்பரப்படுத்த தீவிரம் காட்டும் ஹூண்டாய்!!

பின்பக்கத்தில் 'இசட்' வடிவிலான பிளவுப்பட்ட எல்இடி டெயில்லேம்ப் மற்றும் ஒளி பிரதிபலிப்பான் பார் வழங்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதிய ஹூண்டாய் ஐ20 அதிகளவில் வசதிகளை பெற்று வந்துள்ளது. குறிப்பாக காற்று சுத்திகரிப்பான், சுற்றிலும் விளக்கு, வயர்லெஸ் சார்ஜிங், 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், போஸ் 7 ஸ்பீக்கர் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் பிரிவில் முதல் காராக 2020 ஐ20-க்கு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய அறிமுகம், புதிய தலைமுறை ஐ20 காரை விளம்பரப்படுத்த தீவிரம் காட்டும் ஹூண்டாய்!!

முந்தைய வெர்சனை காட்டிலும் விசாலமான கேபினை பெற்று வந்துள்ள புதிய தலைமுறை ஐ20, 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் (120 பிஎச்பி/172 என்எம்), 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் (88 பிஎச்பி) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (100 பிஎச்பி) என்ற மூன்று என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
All-New Hyundai i20 TVC
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X