அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

அட்டகாசமான வண்ண கலவையில் மாருதி சுசுகியின் பட்ஜெட் விலைக் கொண்ட காரொன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

இந்திய பட்ஜெட் வாகன விரும்பிகளின் மிகவும் விருப்பமான கார்களில் ஒன்றாக மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் கார் உள்ளது. இது ஓர் என்ட்ரி லெவல் ஹேட்ச் பேக் காராகும். இதனை மாருதி நிறுவனம், நெக்ஸா ஷோரூம் வாயிலாக நாடு முழுவதும் விற்பனைச் செய்து வருகின்றது.

அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

இதன் தனித்துவமான தோற்றம் மற்றும் அதிக வசதிகள் பட்ஜெட் வாகன விரும்பிகளை மட்டுமின்றி லக்சூரி கார் பிரியர்களையும் அது கவர்ந்து வருகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காரையே கார் மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று மிக மிக தனித்துவமான ஸ்டைலில் மாற்றியமைத்துள்ளது. இதுகுறித்த வீடியோவே தற்போது யுட்யூப் தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

உண்மையைக் கூற வேண்டுமானால் இக்னிஸ் கார் நாம் நம்ப முடியாத அளவிற்கு மான்ஸ்டர் தோற்றத்திற்கு மாறியிருக்கின்றது. அதாவது, ஆஃப் ரோடர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களைப் போன்ற தோற்றத்தை அது பெற்றிருக்கின்றது. இந்த மாற்றம் குறித்த தகவலை வீடியோவாக மோஹித் மாலிக் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமே இந்த கார் பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

இக்னிஸ் காருக்கு ரேலி போட்டிகளில் பங்கேற்கக்கூடிய கார்களின் தோற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்காக இக்னிஸின் வெளிப்புறத் தோற்றத்திற்கு பன்முகக் கலர் வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது கருப்பு, மஞ்சள், பச்சை என பல நிறங்கள் அதற்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

இதுமட்டுமின்றி முன்பக்க கிரில், முகப்பு மின் விளக்கு, பேனட் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டுள்ளன. மேலும், வீல் மற்றும் உடற்கூட்டில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரை சற்று குறைந்த உயரம் கொண்ட வாகனமாக மாற்றியிருக்கின்றது. இதற்கு காரின் ரிம்கள் மாற்றப்பட்டதும் ஓர் காரணமாகும்.

அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

இதைத்தொடர்ந்து, எக்சாஸ்ட் அம்சமும் மாற்றப்பட்டிருக்கின்றது. பழைய எக்சாஸ்ட் நீக்கப்பட்டு நீண்ட பைப் மாதிரியான எக்சாஸ்ட் பொருத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு, காரின் வெளிப்புறத்தில் செய்யப்பட்டிருப்பதைப் போலவே உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

பழைய இருக்கைகள் மற்றும் காருக்குள் நிறுவப்பட்டிருந்த அனைத்து பேனல்களும் நீக்கப்பட்டு, புதியவை பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் புதிதாக ஹைட்ராலிக் ஹேண்ட் பிரேக் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று, புதிதாக எஞ்ஜின் கில் ஸ்விட்ச் மற்றும் கியர் லிவர்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

ஆனால், ஸ்டியரிங் வீல் மட்டும் பழைய ஒன்றையே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதேசமயம், கூடுதல் திறனுக்காக பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் இசியூ சிஸ்டம் உள்ளிட்டவை ரீமேப் செய்யப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, ஹெட்டர்ஸும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட யூனிட்டுகளைக் கொண்டு மாற்றப்பட்டிருக்கின்றன.

அட்டகாசமான வண்ண கலவையில் உருவாகிய மாருதியின் பட்ஜெட் கார்! பாக்கும்போதே கார ஓட்டனும் போலிருக்கே?

இவை மட்டுமின்றி சிறப்பான காற்றோட்டத்திற்காக பிஎம்சி ஏர் இன்டேக்கர் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் சேஸிஸ் மற்றும் பாடி பிரேசஸ் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பல கூறுகள் மாற்றப்பட்டிருப்பதனாலயே மாருதி இக்னிஸ் ரேலி ஸ்போர்ட் காராக மாறியிருக்கின்றது.

மாருதி சுசுகி நிறுவனம் இந்த காரை அண்மையில்தான் பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்தி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுமட்டுமின்றி இக்னிஸ் மாடலின் ஸ்பெஷல் எடிசனும் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அக்காருக்கு ரூ. 5.19 லட்சம் என்ற விலையை மாருதி சுஸுகி நிர்ணயித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

English summary
Maruti Ignis Converted Into Rally Style Car. Read In Tamil.
Story first published: Sunday, August 23, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X