'ஒரிஜினல்' பிரிமீயம் ஹேட்ச்பேக் அந்தஸ்துடன் புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் இந்தியாவில் இன்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவலுக்கு மாறி இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த தகவல்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய ஹூண்டாய் ஐ20 கார் வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலையை பொறுத்து நான்குவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மேக்னா என்ற வேரியண்ட் விலை குறைவானதாக வந்துள்ளது. ஸ்போர்ட்ஸ் நடுத்தர வகையாகவும், அஸ்ட்டா மற்றும் அஸ்ட்டா ஆப்ஷனல் ஆகியவை அதிகபட்ச வசதிகளை வழங்கும் டாப் வேரியண்ட்டாகவும் இருக்கும்.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

டிசைன்

புதிய ஹூண்டாய் ஐ20 கார் டிசைனில் முற்றிலும் வேறுபட்டு வந்துள்ளது. முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, கச்சிதமான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் மிகவும் வசீகரமாக காட்டுகிறது. இதன் முன்புற பம்பர் மிரட்டலான தோற்றத்தை காருக்கு வழங்குகிறது. முகப்பு டிசைனுக்கு வலு சேர்க்கும் விதத்தில், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கார்னரிங் விளக்குகள், புரொஜெக்டர் பனி விளக்குகளும் உள்ளன.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

இந்த காரில் 16 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரோம் பூச்சுடன் கதவு கைப்பிடிகள், கதவு ஜன்னல்களுக்கு கீழாக கொடுக்கப்பட்டு இருக்கும் க்ரோம் பூச்சு பீடிங் ஆகியவையும் பிரிமீயமாக காட்டுகின்றன.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

இந்த காரின் பின்புறத்தில் Z வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மெல்லிய பட்டை இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களையும் இணைக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி ஸ்டாப் லைட், சுறா துடுப்பு வடிவிலான ஆன்டெனா, ரியர் வைப்பர், வாஷர் ஆகியவையும் இந்த காரின் மிக முக்கிய அம்சங்களாக கூறலாம்.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

இன்டீரியர்

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் உட்புற வடிவமைப்பும் மாறி இருக்கிறது. கருப்பு வண்ண இன்டீரியர் தீம் மற்றும் சிவப்பு வண்ண அலங்கார விஷயங்களுடன் கவர்கிறது. மிக நேர்த்தியான டேஷ்போர்டு அமைப்பு, 10.25 அங்குல தொடுதிரையுடன் நடுநாயகமாக இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் வீற்றிருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். அதனைவிட மிக முக்கியமாக, நேரடி இன்டர்நெட் வசதியை இந்த சாதனம் பெற்றுள்ளது.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதி

இந்த காரில் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதி உள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தை ஹூண்டாய் புளூலிங்க் செயலியில் இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்சை இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலமாக, கார் கதவுகளை ரிமோட் முறையில் திறந்து மூடுவதற்கான வசதி, எஞ்சின் மற்றும் ஏசி சிஸ்டத்தை வெளியில் இருந்து கட்டுப்படுத்துவதற்கான வசதிகளை அளிக்கும். அத்துடன், கார் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாத வகையில் கட்டுப்படுத்தும் வசதியும் உண்டு. 50 விதமான வசதிகளை பெறும் வாய்ப்பை வழங்கும்.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

முக்கிய வசதிகள்

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் மென்மையான உணர்வை தரும் தரமான பிளாஸ்டிக் பாகங்கள் உள்ளன. போஸ் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பிரிமீயம் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், சன்ரூஃப் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

எஞ்சின் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் ஐ20 கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளிலும் 5 விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இதில், மேனுவல் மாடல் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், ஆட்டோமேட்டிக் மாடல் 88 பிஎச்பி பவரை அளிக்கும் திறனை பெற்றுள்ளது.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

அடுத்து 1.0 லிட்டர் டர்போ பெட்ரோ்ல எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் ஐஎம்டி எனப்படும் க்ளட்ச் பெடல் இல்லாத மேனுவல் முறையில் கியர்மாற்றும் வசதியை அளிக்கும் ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும், டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

இதன் டீசல் மாடலில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

மைலேஜ் விபரம்

இதன் 1.2 லிட்டர் மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.35 கிமீ மைலேஜையும், ஐவிடி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.65 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.25 கிமீ மைலேஜை வழங்கும் எனறும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.2 கிமீ மைலேஜை வழங்கும் என்று ஹூண்டாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

வண்ணத் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் ஐ20 கார் 6 விதமான ஒற்றை வண்ணத் தேர்விலும், இரண்டுவிதமான இரட்டை வண்ணத் தேர்விலும் கிடைக்கும். போலார் ஒயிட், தைபூன் சில்வர், டைட்டான் க்ரே, ஃபியரி ரெட், ஸ்டாரி நைட், மெட்டாலிக் காப்பர் ஆகியவை ஒற்றை வண்ணத் தேர்வுகளாக உள்ளன. கருப்பு வண்ணக் கூரையுடன் போலார் ஒயிட் மற்றும் ஃபியரி ரெட் ஆகிய இரண்டு இரட்டை வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகிறது.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

விலை விபரம்

புதிய ஹூண்டாய் கார் ரூ.6.79 லட்சம் முதல் ரூ.11.17 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது அறிமுகச் சலுகை விலையாகவும், வரும் ஜனவரி 1 முதல் விலை அதிகரிக்கப்படும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது ஆரம்ப விலை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு உரிய மதிப்பை இந்த கார் வழங்கும் என்று நம்பலாம்.

 டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... வந்துவிட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார்!

முன்பதிவு விபரம்

புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும். அட்டகாசமான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்திருக்கும் இந்த கார் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் என்று கருதலாம். மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களுக்கு இந்த புதிய ஹூண்டாய் ஐ20 கார் நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Hyundai has launched the all-new i20 premium hatchback in the Indian market. The new Hyundai i20 is now in its third-generation iteration and comes with a starting price of Rs.7.69 lakh, ex-showroom. Bookings for the new i20 have already begun, with deliveries set to start very soon. Read further for more details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X