ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

எதிர்பார்த்தபடியே, புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு புக்கிங் குவிந்து வருகிறது. விற்பனைக்கு வரும்போதே கணிசமான புக்கிங் எண்ணிக்கையுடன் களமிறங்கி உள்ளது.

ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் ஐ20 கார் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், டிசைன், வசதிகளில் மேம்படுத்தப்பட்ட மாடல் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. போட்டியாளர்களை விஞ்சும் வசதிகளுடன் வந்த இந்த கார் ஒரிஜினல் பிரிமீயம் ஹேட்ச்பேக் காருக்கு உரிய அத்துனை அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

இந்த நிலையில், இந்த காருக்கு கடந்த மாத இறுதியில் முன்பதிவு துவங்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது வெளியிடப்பட்ட தகவலில் இந்த காருக்கு 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

அதாவது, 8 நாட்களில் 10,000 பேர் இந்த காரை புக்கிங் செய்துள்ளனர். விலை அறிவிப்புக்கு முன்னரே இந்த காருக்கு கணிசமான புக்கிங் கிடைத்துள்ளது. இந்த நிலையில், விலை அறிவிக்கப்பட்டுள்ளதால், புக்கிங் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

புதிய ஹூண்டாய் ஐ20 கார் டிசைனில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சுவையை வழங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான முகப்பு க்ரில், கவரும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், புரோஜெக்டர் பனி விளக்குகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. 16 அங்குல டியூவல் டோன் சக்கரங்களும் மிக முக்கிய அம்சமாக உள்ளன.

ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் உள்ளது. சிவப்பு வண்ண அலங்கார விஷயங்களும் பிரிமீயமாக காட்டுகின்றன. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிக முக்கிய அம்சமாக இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

இந்த காரில் 50 விதமான வசதிகளை வழங்கும் கனெக்ட்டிவிட்டி செயலியும் உள்ளது. ஸ்மார்ட் வாட்ச் மூலமாக காரில் உள்ள ஏசி சிஸ்டம், எஞ்சின் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் வாய்ப்பை வழங்கும். வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வென்ட்டுகள், சன்ரூஃப் ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய தேர்வுகள் உள்ளன. மேனுவல், ஐஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

போலார் ஒயிட், தைபூன் சில்வர், டைட்டன் க்ரே, ஃபியரி ரெட், ஸ்டாரி நைட், மெட்டாலிக் காப்பர் ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும், கருப்பு வண்ண கூரையுடன் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் ஐ20 காருக்கு குவியும் புக்கிங்... இந்த ஆண்டின் அடுத்த சூப்பர் ஹிட் மாடல்!

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.6.79 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களைவிட இது மிக அதிகமாக இருக்கிறது. அதேபோன்று, டாப் வேரியண்ட் விலை ரூ.11.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. டிசைன், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், இதர வசதிகள், பல்வேறு எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் இதன் மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக உள்ளன.

Most Read Articles

English summary
The new Hyundai i20 premium hatchback car has received over 10,000 bookings in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X