டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

ஹூண்டாய் நிறுவனம் ஐ20 காரை, இந்திய சந்தையில் கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்தியர்களுக்கு விருப்பமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் ஐ20 மாறி விட்டது. இடைப்பட்ட ஆண்டுகளில் பலமுறை, ஐ20 காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களையும், புதிய தலைமுறை மாடல்களையும் ஹூண்டாய் நிறுவனம் களமிறக்கியுள்ளது.

இந்த வரிசையில் தற்போது ஐ20 காரின் மூன்றாவது தலைமுறை மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் ஐ20 காரை ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. புத்தம் புதிய மூன்றாவது தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரை பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது இந்த கார் குறித்து நாங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

வெளிப்புறம் & டிசைன்

ஹை மற்றும் லோ பீம்களுக்கு எல்இடி புரொஜெக்டர் செட் அப் உடன், நேர்த்தியான தோற்றம் கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டரை இந்த கார் பெற்றுள்ளது. க்ளஸ்ட்டருக்கு உள்ளே கார்னரிங் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஹாலோஜன் பல்புகளை பெற்றுள்ளது.

அப்படியே கீழாக ப்ரொஜெக்டர் பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதிலும் ஹாலோஜன் பல்புகள்தான் கொடுக்கப்பட்டுள்ளது. முழு லைட்டிங் செட் அப்பும், எல்இடியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதே சமயம் முன் பக்க பம்பர் தற்போது முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றத்தில் அது காட்சியளிக்கிறது. அத்துடன் ஸ்போர்ட்டினெஸ்ஸை மேம்படுத்தும் வகையில், முன் பகுதியில் லிப் ஸ்பிலிட்டரையும் இந்த கார் பெற்றுள்ளது. ஆனால் முன் பகுதியில் லோகோவை தவிர வேறு எங்கும் க்ரோம் பூச்சுகள் வழங்கப்படவில்லை.

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

இனி காரின் பக்கவாட்டு பகுதிக்கு செல்லலாம். இங்கே ட்யூயல்-டோன் 5-ஸ்போக் 16 இன்ச் அலாய் வீல்கள் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். வீல்களின் அளவு, இந்த ஹேட்ச்பேக் காருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. அத்துடன் இதன் டிசைனும் கவர்ச்சிகரமாக உள்ளது. இந்த காரில், கருப்பு நிற ஓஆர்விஎம்கள் வழங்கப்பட்டுள்ளன. இதிலேயே எல்இடி இன்டிகேட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

டோர் ஹேண்டில்களிலும், விண்டோக்களை சுற்றியும் க்ரோம் பூச்சுகளும் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹூண்டாய் ஐ20 கார், இரட்டை வண்ண தேர்விலும் கிடைக்கும். இங்கே கூரை கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அத்துடன் தற்போது இந்த ஹேட்ச்பேக், சன்ரூஃப்பையும் பெற்றுள்ளது. இது பிரீமியமான உணர்வை தருகிறது.

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

பின் பகுதியை பொறுத்தவரை, Z வடிவ எல்இடி விளக்குகள் உடன் நேர்த்தியான தோற்றம் கொண்ட டெயில்லைட் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு யூனிட்களும், சிகப்பு நிற பிரதிபலிப்பு பட்டையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. பூட் லிட் முழுமைக்கும் இந்த பிரதிபலிப்பு பட்டை நீண்டுள்ளது. அத்துடன் சுறா துடுப்பு ஆன்டெனாவும், இந்த காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

இன்டீரியர் & வசதிகள்

புத்தம் புதிய ஹூண்டாய் ஐ20 காரின் இன்டீரியர் முழுக்க முழுக்க கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் ஸ்போர்ட்டியான உணர்வை தருவதற்காக, சிகப்பு நிற ஹைலைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இது சப்போர்ட் செய்யும்.

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

இந்த காரின் ஸ்டியரிங் வீல் லெதரால் சுற்றப்பட்டுள்ளது. பிடித்து ஓட்டுவதற்கு நல்ல க்ரிப் கிடைக்கிறது. ஸ்டியரிங் வீலின் இடது புறத்தில், இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான பட்டன்கள் உள்ளன. ப்ளூ ஆம்பியன்ட் லைட்டிங்கையும் இந்த கார் பெற்றுள்ளது. இது கேபினுக்கு பிரீமியமான உணர்வை தருகிறது.

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

அத்துடன் இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் நடுவே இடம்பெற்றுள்ள எம்ஐடி திரை பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இருக்கைகளை பொறுத்தவரை கருப்பு நிறத்தில், சிகப்பு நிற வேலைப்பாடுகள் உடன் டிசைன் செய்யப்பட்டுள்ளன. முன் இருக்கைகளில் கீழ் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. இரண்டாவது வரிசை இருக்கைகளும் சௌகரியமாகவே உள்ளன. கேபின் விரைவாக குளிர்ச்சியடைய உதவும் வகையில், ரியர் ஏசி வெண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இங்கே லெக்ரூம் நன்றாக உள்ளது. உயரமான நபர்களும் சிரமமின்றி பயணிக்கலாம்.

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

ஆனால் சன்ரூஃப் சிறிதாக உள்ளது. பின் இருக்கை பயணிகளுக்கு நல்ல வியூ கிடைப்பது சற்று சிரமம்தான். இந்த காரின் பூட் ஸ்பேஸ் 311 லிட்டர்கள். அத்துடன் 60:40 ஸ்பிளிட் வசதியும் இருப்பதால், லக்கேஜை வைப்பதற்கு கூடுதல் இட வசதி தேவைப்பட்டாலும், பூட் ஸ்பேஸை அதிகரித்து கொள்ள முடியும்.

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

இன்ஜின் தேர்வுகள்

இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் தேர்வை, புதிய ஹூண்டாய் ஐ20 பெற்றுள்ளது. முதல் பெட்ரோல் இன்ஜின், 1 லிட்டர் டர்போ யூனிட் ஆகும். இந்த இன்ஜின் 120 பிஎச்பி பவரை உருவாக்க கூடியது. டிசிடி அல்லது 6 ஸ்பீடு ஐஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் உடன் இந்த இன்ஜின் கிடைக்கும். இரண்டாவது பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் என்ஏ கப்பா யூனிட் ஆகும். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வுகளில் இந்த இன்ஜின் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடல் 88 பிஎச்பி பவரையும், மேனுவல் மாடல் 83 பிஎச்பி பவரையும் உருவாக்கும்.

இதுதவிர 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்விலும், புதிய ஹூண்டாய் ஐ20 கார் கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரை உருவாக்கும். ஆனால் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வில் மட்டுமே இந்த இன்ஜின் கிடைக்கும். நாங்கள் விரைவில் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்வோம். அப்போது இந்த இன்ஜின்களின் செயல்திறன் மற்றும் மைலேஜ் பற்றி உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

முந்தைய தலைமுறை மாடல்களை காட்டிலும், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. சாலையில் செல்லும்போது இதன் டிசைன் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதால், புதிய ஹூண்டாய் ஐ20 விற்பனையில் சாதிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
New-gen Hyundai i20 Premium Hatchback First Look Review: All Important Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X