புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

இந்திய ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டின் ஆணழகன் என்று பெயர் பெற்றுவிட்ட ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வரும் நவம்பர் 5ந் தேதி புதிய தலைமுறை மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காருக்கு முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், இந்த கார் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

டிசைன்

ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த காரின் டிசைன் மிக கூர்மையான தோற்றத்துடன் வசீகரமாகவும், முரட்டுத்தனத்துடன் காட்சித் தருகிறது. அதாவது, ஐ20 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இந்த கார் கச்சிதமாக பூர்த்தி செய்யும். பிரம்மாண்ட முகப்பு க்ரில், ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், முரட்டுத்தனமான பம்பர் அமைப்பு, பம்பரின் கீழ் புறத்தில் டிஃப்யூசர் போன்ற மாதிரி அமைப்பு, புதிய அலாய் வீல்கள், இணைந்த கைகள் போல கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் முத்தாய்ப்பான விஷயமாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

பெரிய தொடுதிரை சாதனம்

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இதன் பெரிய தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தை கூறலாம். ஆம். இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்தில் நேரடி இன்டர்நெட் வசதி மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை ரிமோட் முறையில் பெற முடியும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளையும் சப்போர்ட் செய்யும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேரடி இன்டர்நெட் வசதி கொடுக்கப்படுவதால், நேரடியாக தகவல்களை பெறுவதற்கும், நேவிகேஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை பெற வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று, காரின் ஏசி சிஸ்டம், எஞ்சின், கதவுகளை திறக்கவும், மூடுவதற்கும் புளூலிங்க் என்ற செயலி மூலமாக ரிமோட் முறையில் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஜியோ ஃபென்சிங் முறையில் காரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாதவாறும் இதில் கட்டுப்பாடுகளை கொடுக்க முடியும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

முக்கிய வசதிகள்

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் திரை கொண்ட இன்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பின்புற பயணிகளுக்கு பிரத்யேகமான ரியர் ஏசி வென்ட்டுகள், வயர்லெஸ் சார்ஜர், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெறும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள்

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டாப் வேரியண்ட்டில் விபத்தின்போது பயணிகளை காக்கும் வகையில் 6 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை செலுத்தும் இபிடி தொழில்நுட்பம், திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் சுழற்சி நிற்பதை தடுப்பதற்கான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர்களில் காற்றழுத்தம் குறைவது குறித்து எச்சரிக்கை வழங்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், கார் நிலைகுலையாமல் செல்வதை உறுதி செய்யும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா ஆகியவை இடம்பெறும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

எஞ்சின் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் இரண்டு பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படும்.

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் (க்ளட்ச் பெடல் இல்லாத வகையில் இயங்கும் மேனுவல் கியர்பாக்ஸ்) அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் இந்த மாடல் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

வண்ணத் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் 6 ஒற்றை வண்ணத் தேர்வுகளும், இரண்டு இரட்டை வண்ணத் தேர்வுகளும் வழங்கப்படும். போலார் ஒயிட், ஃபியரி ரெட், தைபூன் சில்வர், டைட்டன் க்ரே, ஸ்டாரி நைட் மற்றும் மெட்டாலிக் காப்பர் ஆகிய ஒற்றை வண்ணங்களில் கிடைக்கும். கருப்பு வண்ணக் கூரையுடன் சிவப்பு அல்லது வெள்ளை வண்ணத் தேர்வுகளிலும் வழங்கப்பட உள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

எதிர்பார்க்கும் விலை

புதிய ஹூண்டாய் ஐ20 கார் மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்ட்டா மற்றும் அஸ்ட்டா ஆப்ஷனல் ஆகிய நான்கு வேரியண்ட்டுகள் வழங்கப்பட உள்ளன. ரூ.6 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.21,000 செலுத்தி டீலர்கள் அல்லது ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Here are some key things you should know about new gen Hyundai i20 car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X