புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

புதிய ஐ20 காரின் ஆரம்ப விலை மிக அதிகம் என்ற பேச்சு எழுந்துள்ளதையடுத்து, விலை குறைவான வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவலுக்கு மாறி இருக்கிறது. இருப்பினும், இந்த போட்டியாளர்களை ஒப்பிடும்போது இந்த காரின் ஆரம்ப விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, ரூ.6.79 லட்சம் என்ற மிக கணிசமான ஆரம்ப விலையில் வந்ததுடன், சில சப்-காம்பேக்ட் கார்களைவிட அதிக விலை நிர்ணயிக்கப்பட்டது.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

இதனால், வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஏமாற்றம் இருந்து வருகிறது. மேலும், புதிய ஹூண்டாய் ஐ20 காருக்காக பல மாதங்களாக ஆவலோடு காத்திருந்த வாடிக்கையாளர்களும், விலை அறிவிப்புக்கு முன்னரே புக்கிங் செய்த வாடிக்கையாளர்களில் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

இந்த நிலையில், புக்கிங் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, புதிய ஐ20 காரில் விலை குறைவான புதிய வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, முந்தைய எலைட் ஐ20 காரில் வழங்கப்பட்டு வந்த எரா என்ற பேஸ் வேரியண்ட்டை விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

புதிய ஐ20 காரின் எரா வேரியண்ட்டிற்கு அனுமதி கோரி அரசுக்கு ஹூண்டாய் அனுமதி கோரி ஆவணத்தை சமர்ப்பித்துள்ளதாக ஸிக் வீல்ஸ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. அதேநேரத்தில், ஹூண்டாய் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

தற்போது மேக்னா என்ற வேரியண்ட்தான் விலை குறைவான வேரியண்ட்டாக இருந்து வருகிறது. இந்த வேரியண்ட்டில் ஹாலஜன் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஹாலஜன் பல்புகளுடன் டெயில் லைட்டுகள், முழு வீல் கவர்களுடன் கூடிய 15 அங்குல சக்கரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

இந்த வேரியண்ட்டில் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி, சன் கிளாஸ் ஹோல்டர், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை உள்ளன. மல்டி இன்ஃபர்மேஷன் திரை இந்த வேரியண்ட்டில் இல்லை. 2 டின் ஆடியோ சிஸ்டம், புளூடூத் இணைப்பு வசதியும் உள்ளது. ஏசி சிஸ்டம் மற்றும் ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

புதிய ஐ20 மேக்னா வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், உட்புறத்தில் பகலிரவு பயன்பாட்டிற்கு ஏற்ற ரியர் வியூ மிரர், சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம்,, ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் ஆகியவை உள்ளன.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

இந்த நிலையில், எரா வேரியண்ட்டில் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ மிரர்கள், ரியர் ஏசி வென்ட்டுகள், ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெறாது என்று தெரிகிறது.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

மேக்னா வேரியண்ட்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், எரா வேரியண்ட்டில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டுமே வழங்கப்படும். இந்த எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 115 என்எஎம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வருவதற்கான வாய்ப்புள்ளது.

புதிய ஐ20 காரில் விலை குறைவான வேரியண்ட்டை களமிறக்க ஹூண்டாய் திட்டம்!

புதிய ஹூண்டாய் ஐ20 கார் ரூ.6.79 லட்சம் முதல் ரூ.11.17 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. வரும் ஜனவரி 1 முதல் விலை உயர்வு செய்யப்படும் என்றும் ஹூண்டாய் அறிவித்துள்ளது. இதனால், புதிய ஐ20 கார் மீதான ஆவலும், பிரியமும் சுரத்தை குறைந்து போயுள்ளது. புதிய எரா வேரியண்ட் வந்த பின்னர், ஐ20 மார்க்கெட் மேலும் வலுவடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி உள்ளது.

Most Read Articles

English summary
Hyundai recently launched the third-generation i20 premium hatchback in the Indian market. The all-new Hyundai i20 has been well-received in the country and is available in a host of variants with petrol and diesel engine options.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X