ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு வந்தது 2020 ஐ20!! இனி எல்லாம் அமோகம் தான்...

வருகிற நவம்பர் 5ஆம் தேதி அறிமுகத்திற்கு முன்னதாக புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரின் பெயர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய தலைமுறை காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு வந்தது 2020 ஐ20!! இனி எல்லாம் அமோகம் தான்...

2020 ஐ20 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே தற்போது இந்த ஹேட்ச்பேக் காரின் பெயர் பிராண்டின் இந்திய இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு வந்தது 2020 ஐ20!! இனி எல்லாம் அமோகம் தான்...

முன்னதாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வந்த புதிய ஐ20-ன் முன்பதிவுகள் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ கார்டு பயன்பாட்டாளர்களுக்கு 10 சதவீத பணம் தள்ளுபடியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு வந்தது 2020 ஐ20!! இனி எல்லாம் அமோகம் தான்...

கருப்பு நிறத்திலான க்ரில், அகலமான ஏர் டேம், மஸ்குலர் பொனெட் மற்றும் புதிய பின்பக்க பம்பருடன் புதிய ஹூண்டாய் ஐ20 முற்றிலும் கம்பீரமான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் உள்ளன.

ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு வந்தது 2020 ஐ20!! இனி எல்லாம் அமோகம் தான்...

பக்கவாட்டில் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடிகள் காரின் நிறத்திலும், B-பில்லர்கள் மற்றும் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்திலும் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் 5-இருக்கை கேபின் முழுக்க முழுக்க கருப்பு ஃபாப்ரிக்-ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு வந்தது 2020 ஐ20!! இனி எல்லாம் அமோகம் தான்...

காரின் உள்ளே பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் பேனல், இரட்டை காற்றுப்பைகள், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இபிடியுடன் ஏபிஎஸ் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக இருக்கும்.

ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு வந்தது 2020 ஐ20!! இனி எல்லாம் அமோகம் தான்...

இயக்கத்திற்கு பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டீசல், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகள் புதிய ஐ20-க்கு வழங்கப்படவுள்ளன. ட்ரான்ஸ்மிஷனுக்கு ஐஎம்டி, ஐவிடி, 7-ஸ்பீடு டிசிடி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளாக கொடுக்கப்படவுள்ளன.

ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு வந்தது 2020 ஐ20!! இனி எல்லாம் அமோகம் தான்...

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் அதிகாரப்பூர்வ எக்ஸ்ஷோரூம் விலை அதன் நவம்பர் 5ஆம் தேதி அறிமுகத்தின்போது வெளியிடப்படவுள்ளது. நமக்கு தெரிந்தவரை இந்த ஹேட்ச்பேக் காரின் ஆரம்ப விலை ரூ.6.8 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
New Hyundai i20 listed on company's official website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X