புதிய ஹூண்டாய் ஐ20... ஏன் வாங்க வேண்டும்? ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்கள்

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். முதலில் ப்ளஸ் என்னென்ன? என்பதை பார்த்து விடலாம்.

புதிய ஹூண்டாய் ஐ20... ஏன் வாங்க வேண்டும்? ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்கள்

ஹூண்டாய் ஐ20 காரை வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

டிசைன் & தரம்: வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்து விதங்களிலும் புதிய ஹூண்டாய் ஐ20 கவர்ச்சிகரமான டிசைன் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் க்ளஸ்ட்டர் மற்றும் டச் ஸ்க்ரீனை உள்ளடக்கிய இந்த காரின் டேஷ்போர்டு 'நீட்' ஆக உள்ளது. அத்துடன் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல்களின் தரமும் நன்றாக இருக்கிறது. அவை நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்கும்.

புதிய ஹூண்டாய் ஐ20... ஏன் வாங்க வேண்டும்? ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்கள்

வசதிகள்: புதிய ஹூண்டாய் ஐ20 காரில் வசதிகளுக்கு பஞ்சமே இல்லை. எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி டெயில் லைட்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் சார்ஜர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன், போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் என புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

புதிய ஹூண்டாய் ஐ20... ஏன் வாங்க வேண்டும்? ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்கள்

இட வசதி & சௌகரியமான பயணம்: புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வீல் பேஸ் 2850 மிமீ. அகலம் 1775 மிமீ. இந்த காரின் உள்ளே தாராளமான இட வசதி உள்ளது. தொலை தூர பயணங்கள் என்றால், 4 பேர் மிகவும் சௌகரியமான பயணம் செய்யலாம். சௌகரியம் தொடர்பாக அவர்களுக்கு எந்த புகாரும் வராது. அத்துடன் லக்கேஜ்களை கொண்டு செல்ல போதுமான அளவிற்கு பூட் ஸ்பேஸையும் இந்த கார் பெற்றுள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20... ஏன் வாங்க வேண்டும்? ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்கள்

இன்ஜின் & கியர் பாக்ஸ் தேர்வுகள்: புதிய ஹூண்டாய் ஐ20 காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ என இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர ஒரு டீசல் இன்ஜின் தேர்வும் உள்ளது. இது 1.5 லிட்டர் யூனிட் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, ஐவிடி மற்றும் டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் தேர்வுகள் உள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20... ஏன் வாங்க வேண்டும்? ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்கள்

ஹூண்டாய் ஐ20 காரை வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்:

டீசல் ஆட்டோமெட்டிக் தேர்வு இல்லை: புதிய ஐ20 காரின் டீசல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வை மட்டுமே ஹூண்டாய் வழங்குகிறது. ஆட்டோமெட்டிக் தேர்வு கிடையாது. புதிய ஹூண்டாய் ஐ20 காரின் டாப் (ட்யூயல் டோன்) டீசல் வேரியண்ட்டின் விலை 10.74 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) ஆகும். இந்த விலைக்கு ஹூண்டாய் நிறுவனம் ஆட்டோமெட்டிக் தேர்வை வழங்கியிருக்கலாம்.

புதிய ஹூண்டாய் ஐ20... ஏன் வாங்க வேண்டும்? ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்கள்

இடம்பெறாத வசதிகள்: வென்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் போன்ற ஒரு சில வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் புதிய ஐ20 காரில் வழங்கவில்லை. டாப் மாடல்களின் விலையை நியாயப்படுத்தும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் இந்த வசதிகளை எல்லாம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

புதிய ஹூண்டாய் ஐ20... ஏன் வாங்க வேண்டும்? ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்கள்

அதிக விலை: புதிய ஹூண்டாய் ஐ20 காரின் ஆரம்ப விலை 6.80 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 11.18 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். பெட்ரோல் அல்லது டீசல் என எதுவாயினும், டாப் மாடல்களின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20... ஏன் வாங்க வேண்டும்? ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்கள்

இந்த விலையை நியாயப்படுத்தும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் புதிய ஹூண்டாய் ஐ20 காரின் விலை பட்டியலை பார்க்கும் ஒருவருக்கு, இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கின் ஆன் ரோடு விலை எவ்வளவு வரும்? என்ற பயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Most Read Articles
English summary
New Hyundai i20 - Positive And Negative Points. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X