புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மதிப்பை உயர்த்தும் அட்டகாசமான 6 முக்கிய அம்சங்கள்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் ஐ20 கார் மிகவும் பிரிமீயமான அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. போட்டியாளர்களை விஞ்சும் ஏராளமான அம்சங்கள், தொழில்நுட்பங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், மிகவும் தனித்துவமான சில முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மதிப்பை உயர்த்தும் அட்டகாசமான 6 முக்கிய அம்சங்கள்!

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் டிசைன் முற்றிலும் வேறுபட்டதாக மாற்றம் கண்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப வசதிகளில் ஒரு உண்மையான பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அந்தஸ்தை இந்த கார் பெற்றிருக்கிறது. சில முக்கிய வசதிகளை இங்கே தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மதிப்பை உயர்த்தும் அட்டகாசமான 6 முக்கிய அம்சங்கள்!

ஏர் பியூரிஃபயர்

கொரோனா வைரஸ் மற்றும் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், புதிய ஹூண்டாய் ஐ20 காரில் நவீன தொழில்நுட்பம் கொண்ட காற்று சுத்திகரிப்பு கருவி ( ஏர் பியூரிஃபயர்) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கார் கேபினில் காற்றில் கலந்துள்ள மாசுக்களை சுத்திகரித்துவிடுவதுடன், காற்றில் உள்ள மாசு அளவை காட்டும் வசதியும் உள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மதிப்பை உயர்த்தும் அட்டகாசமான 6 முக்கிய அம்சங்கள்!

ஈக்கோ கோட்டிங்

கார் கேபினுக்குள் இருக்கும் துர்நாற்றத்தை போக்கும் தொழில்நுட்பத்தை ஈக்கோ கோட்டிங் என்ற பெயரில் ஹூண்டாய் குறிப்பிடுகிறது. இது பயணத்தின்போது மிகவும் சிறந்த அனுபவத்தை வழங்கும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மதிப்பை உயர்த்தும் அட்டகாசமான 6 முக்கிய அம்சங்கள்!

வயர்லெஸ் சார்ஜர்

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் வயர்லெஸ் சார்ஜர் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பகுதியில் ஸ்மார்ட்ஃபோனை வைத்து சார்ஜ் ஏற்ற முடியும். மேலும், ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் ஏற்றும்போது பேட்டரி சூடாவதை தவிர்ப்பதற்காக கீழே குளிர்ச்சியை தரும் விசேஷ வசதியும் உள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மதிப்பை உயர்த்தும் அட்டகாசமான 6 முக்கிய அம்சங்கள்!

புளூலிங்க் கனெகட்டிவிட்டி செயலி

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் புளுலிங்க் என்ற விசேஷ கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் உள்ளது. இந்த வசதி மூலமாக காருக்கு வெளியில் இருந்து கொண்ட காரின் முக்கிய வசதிகளை ரிமோட் முறையில் கட்டுப்படுத்தும் வசதியையும், கார் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளையும் பெறும் வாய்ப்பை இந்த வசதி வழங்கும். கார் கதவுகளை வெளியில் இருந்த திறப்பது, ஏசி மற்றும் எஞ்சினை ஆன் செய்வது, அணைப்பது, கார் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறிந்து கொள்ளும் வசதி, பழுது, விபத்து உள்ளிட்ட அவசர சமயங்களில் உதவி கோருவதற்கான வசதியை இது அளிககும். இதற்காக ஸ்மார்ட்வாட்ச் ஒன்றும் வழங்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மதிப்பை உயர்த்தும் அட்டகாசமான 6 முக்கிய அம்சங்கள்!

ஏர் அப்பேட்

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிம் கார்டு மூலமாக நேரடி இணைய வசதியை பெற்றுள்ளது. இதனால், இதன் நேவிகேஷனை ரிமோட் முறையில் இதன் நேவிகேஷன் செயலியை அப்டேட் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதற்காக, சர்வீஸ் மையத்திற்கு செல்லும் அவசியம் இல்லை.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மதிப்பை உயர்த்தும் அட்டகாசமான 6 முக்கிய அம்சங்கள்!

போன் கனெக்ட்டிவிட்டி வசதி

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் ஒரே நேரத்தில் இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வசதி நிச்சயம் உடன் பயணிப்போருக்கு சிறப்பானதாக அமையும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மதிப்பை உயர்த்தும் அட்டகாசமான 6 முக்கிய அம்சங்கள்!

விலை விபரம்

புதிய ஹூண்டாய் ஐ20 கார் ரூ.6.79 லட்சம் முதல் ரூ.11.17 லட்சம் வரையிலான விலையில் வந்துள்ளது. மொத்தம் 24 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதன் ரக கார்களில் மிகவும் விலை உயர்ந்த தேர்வாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் இதற்கு மதிப்பை அளிக்கும் என கருதலாம். அதேநேரத்தில், இதன் பட்ஜெட் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு நிகராக இருப்பது பாதகமான அம்சமாக உள்ளது.

Most Read Articles
English summary
Here are the important things you need to know the new gen Hyundai i20 car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X