புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரம்!

புதிய ஹூண்டாய் ஐ20 கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்த காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஹூண்டாய் ஐ20 கார் வரும் நவம்பர் 5ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த 28ந் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில், இந்த காரை முன்கூட்டியே முன்பதிவு செய்து தீபாவளிக்கு முன்னதாகவே டெலிவிரி பெறுவதற்கான முனைப்பில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

 புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரம்!

இந்த நிலையில், இந்த காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக, வேரியண்ட் வாரியாக எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரங்களை இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம்.

 புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரம்!

புதிய ஹூண்டாய் ஐ20 கார் மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்ட்டா மற்றும் அஸ்ட்டா ஆப்ஷனல் என நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நான்கு வேரியண்ட்டுகளிலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வை வழங்கும் விதத்தில் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

 புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரம்!

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இதன் மேக்னா வேரியண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், ஸ்போர்ட்ஸ் வேரியண்ட், அஸ்ட்டா வேரியண்ட்டுகளில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும். விலை உயர்ந்த அஸ்ட்டா ஆப்ஷனல் வேரியண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

 புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரம்!

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலானது ஐஎம்டி அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலானது ஸ்போர்ட்ஸ், அஸ்ட்டா மற்றும் அஸ்ட்டா ஆப்ஷனல் வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதன் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் ஐஎம்டி எனப்படும் க்ளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் முறையில் கியர்களை மாற்றும் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். அஸ்ட்டா வேரியண்ட்டில் ஐஎம்டி மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். அஸ்ட்டா ஆப்ஷனல் வேரியண்ட்டில் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட உள்ளது.

 புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரம்!

டீசல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கொண்டு வரப்பட உள்ளது. மேக்னா, ஸ்போர்ட்ஸ் அஸ்ட்டா ஆப்ஷனல் வேரியண்ட்டுகளில் இந்த டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். அஸ்ட்டா வேரியண்ட்டில் டீசல் எஞ்சின் தேர்வு இல்லை.

 புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரம்!

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்படும். இந்த காரில் சன்ரூஃப் மற்றும் இன்டர்நெட் வசதி மூலமாக கட்டுப்பாட்டு மற்றும் தகவல்களை பெற உதவும் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமும் கவனிக்கத்தக்கதாக இருக்கும்.

 புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வேரியண்ட் வாரியாக எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் விபரம்!

புதிய ஹூண்டாய் ஐ20 கார் ரூ.6 லட்சத்தையொட்டி ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை வழக்கம்போல் கவர்ந்து இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Here are all details about variant wise engine and gearbox will be offered on new gen Hyundai i20 car in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X