Just In
- 4 hrs ago
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- 5 hrs ago
வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்
- 6 hrs ago
கோடையில் வருகிறது ஸ்கோடாவின் குஷாக் எஸ்யூவி!! டீசர் மூலம் மீண்டும் உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்
- 7 hrs ago
வாகன ஓட்டிகளுக்கு 6 கோடி ரூபாய் அபராதத்தை போட்டு தாக்கிய அதிகாரிகள்... இனியும் இந்த தப்ப செய்வீங்க?
Don't Miss!
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Movies
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பழமையான வாகனங்களை பதிவு செய்வதில் வந்தது புதிய கட்டுப்பாடுகள்!! முழு விபரம் இங்கே
இந்தியாவில் பழமையான கிளாசிக் வாகனங்களை பதிவு செய்தலில் ஒரு பெரிய மறுசீரமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சாலை போக்குவரத்து அமைச்சகம் எந்தவொரு பயணிகள் கார் அல்லது இரு சக்கர வாகனத்திற்கான பதிவு சான்றிதழ் தொடர்பான புதிய விதிமுறைகளுக்கான வரைவை வெளியிட்டுள்ளது.

புதிய சட்டத்தின் கீழ், புதிய சான்றிதழை பெறுவதற்கு உரிமையாளருக்கு ஒரு காருக்கு ரூ.20,000 செலவாகும், மேலும் இது 10 வருட காலத்திற்கு செல்லுபடியாகும். பின்னர், இந்த பதிவை புதுப்பிக்க உரிமையாளருக்கு கூடுதலாக ரூ.5,000 செலவாகும்.

புதிய விதிகளின்படி, கிளாசிக் மற்றும் விண்டேஜ் வாகனங்கள் இனி இந்தியாவில் புதிய வாகனங்கள் பெறும் 10 இலக்க ஆல்பா எண் வடிவத்தில் புதிய பதிவு வடிவமைப்பைக் கொண்டிருக்கும். புதிய வடிவம் 'எக்ஸ்எக்ஸ் விஏ ஒய்ஒய் ****' வடிவத்தில் இருக்கும். இதில் எக்ஸ்எக்ஸ் என்பது மாநிலத்தையும், விஏ என்பது விண்டேஜ் வாகனத்தையும் குறிக்கும் வகையில் அமையும்.

ஒய்ஒய், இரண்டு எழுத்துக்கள் கொண்ட தொடராகவும், **** என்பது 0001 முதல் 9999 வரையிலான நான்கு இலக்க எண் ஆகவும் அந்தந்த மாநில வாகன பதிவுதுறை அதிகாரிகளால் ஒதுக்கப்படும். எனவே, எடுத்துக்காட்டாக, 3112 என்ற எண்ணைக் கொண்ட ஒரு பழமையான காரை மகாராஷ்டிராவில் பதிவு செய்ய வேண்டுமென்றால், அது ‘MH VA AA 3112' என்ற எண்களை கொண்ட பதிவு தட்டை (நம்பர் ப்ளேட்) பெறும்.

தற்போதைய மாடர்ன் கார்களில், குறிப்பிட்ட பகுதி ஆர்டிஓக்களைக் குறிக்கும் வகையில் அவற்றின் பதிவுத் தகடுகளில் தனி எண் இருக்கும். ஆனால் அவ்வாறு புதியதாக பதிவு செய்யப்படும் பழமையான கார்களில் வழங்கப்படாது. மாறாக அது மாநில அடிப்படையிலான தட்டுகளாக இருக்கும்.

வழக்கமான எரிபொருள் என்ஜின் கார்களில் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள பச்சை நிற உரிமத் தகடுகளை பெறும் மின்சார கார்களைப் போலல்லாமல், விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களின் பதிவுகள் மத்திய மோட்டார் வாகனம் அல்லது சி.எம்.வி.ஆர் விதிமுறைகளைப் பின்பற்றி வழக்கமான கருப்பு எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட நிலையான வெள்ளை பின்னணியாகவே இருக்கும்.

வாகனங்கள் இந்த பதிவு தட்டுகளை முன் மற்றும் பின்புறம் காண்பிக்க வேண்டும். மேலும் இந்த புதிய தட்டுகள், உயர் பாதுகாப்பு பதிவு தட்டு (எச்.எஸ்.ஆர்.பி) வடிவமைப்பின் படி இருக்கும். இந்த பழமையான கார்களின் புதிய பதிவின் விவரங்கள் தேசிய பரிவஹான் போர்ட்டலுக்கும் வழங்கப்படும்.

இந்த காகிதப்பணி ஒரு வாகனத்தின் அடையாளமாகும். மேலும் பெரும்பாலும் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் உரிமையாளர்களிடையே பழைய பதிவு எண் ஆனது மதிப்புமிக்க உடைமையாக விளங்குவதால் உரிமையாளர்கள் தங்களது முந்தைய பதிவு எண்களின் அசல் ஆவணங்களைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய வரைவு விதிகள், புதிய பதிவு சான்றிதழைப் பெறுவதற்கான தகுதி வயது ஒரே மாதிரி இருக்காது என்றும் கூறுகிறது. ஆனால் வாகனம் அதன் சேஸ், பாடி ஷெல் மற்றும் என்ஜின் அமைப்பில் மாற்றங்களை கொண்டில்லாமல் அதன் அசல் வடிவத்தில் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மேற்பார்வையிடும் மாநில விண்டேஜ் மோட்டார் வாகன மாநில / யூனியன் பிரதேசக் குழு (வி.எம்.வி.எஸ்.சி), வாகனம் குறிப்பிட்ட விதிகளின் கீழ் அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை எனில், பதிவு கோரிக்கையை நிராகரிக்க முடியும்.

இந்த புதிய பதிவு விதிகள் இந்த 2020 ஆண்டு முடிவதற்குள்ளாக நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய வாகன பதிவு விதிகளில் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களை விற்பனை செய்வதற்கான புதிய சட்டமும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. வாங்குபவர் மற்றும் விற்பனையாளர் விற்றது அல்லது வாங்கியதிலிருந்து 90 நாட்களுக்குள் அந்தந்த மாநில போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் இந்த வாகனங்களின் விற்பனை அல்லது கொள்முதல் அனுமதிக்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.

விண்டேஜ் அல்லது கிளாசிக் வாகனங்கள் இனிமேல் தடைசெய்யப்பட்ட பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும், ஆனால் காட்சி, தொழில்நுட்ப ஆராய்ச்சி அல்லது விண்டேஜ் கார் பேரணி, எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்பு, கண்காட்சிகள் மற்றும் விண்டேஜ் பேரணிகளில் பங்கேற்க மட்டுமே இந்திய சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.