விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்.. இன்னோவாவில் புதிய அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

வரும் தீபாவளிக்கு அறிமுகமாகவுள்ள டொயோட்டாவின் புதிய இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்... இன்னோவாவில் அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகள் விண்ணை பிளவுக்கு அளவுக்கு உள்ளதால் வாடிக்கையாளர்கள் பேட்டரி கார்கள், சிஎன்ஜி கார்கள் போன்ற வெவ்வேறான எரிபொருள்களை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்... இன்னோவாவில் அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

இதனால் தயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுடன் அப்டேட்டாகி சிஎன்ஜி வேரியண்ட் கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. ஏனெனில் தற்சமயம் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் உள்ளன.

விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்... இன்னோவாவில் அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

இந்த வகையில் டொயோட்டா நிறுவனம் அதன் பிரபல இந்திய கார்களுள் ஒன்றான இன்னோவா க்ரிஸ்ட்டாவில் புதியதாக சிஎன்ஜி வேரியண்ட்டை கொண்டுவருகிறது. இந்த எம்பிவி காரின் தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் முறையே ரூ.15.66 லட்சம் மற்றும் ரூ.16.44 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்... இன்னோவாவில் அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

இதன் புதிய சிஎன்ஜி வேரியண்ட் செயல்திறனிற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து குறைவான தொழிற்நுட்ப வசதிகளுடன் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பெட்ரோல் வேரியண்டை காட்டிலும் குறைவான விலையில் விற்பனை செய்யப்ப்படலாம்.

விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்... இன்னோவாவில் அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

இந்த நிலையில் இன்னோவாவின் பை-ப்யூல் சிஎன்ஜி மாதிரி கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் ஹரியானா, குருக்ராமில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்... இன்னோவாவில் அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

இந்த சோதனை காரில் எல்இடி ப்ரொஜக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் விளக்குகள், க்ரோம் கதவு கைப்பிடி, க்ரோம் விண்டோ லைன், க்ரோம் உடன் ரேடியேட்டர் க்ரில் மற்றும் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியாதால், இது நிச்சயம் இன்னாவா க்ரிஸ்ட்டாவின் விலை குறைவான ஜிஎக்ஸ் ட்ரிம்-ஆகவே இருக்கும்.

விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்... இன்னோவாவில் அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

ஏனெனில் மேலேகூறிய அம்சங்கள் அனைத்தும் இந்த எம்பிவியின் டாப் ட்ரிம்களிலேயே வழங்கப்படுகின்றன. என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில் புதிய சிஎன்ஜி ட்ரிம் ஆனது இன்னோவாவின் வழக்கமான 2.7 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினின் அடிப்படையில் தான் இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்... இன்னோவாவில் அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

தற்சமயம் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 166 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இன்னோவாவின் விலை குறைவான வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ள புதிய சிஎன்ஜி என்ஜினிற்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படலாம்.

விலைகுறைவான ட்ரிம்களுக்கு மட்டும் சிஎன்ஜி என்ஜின்... இன்னோவாவில் அப்டேட்டை கொண்டுவரும் டொயோட்டா

விற்பனையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு போட்டியாகவுள்ள மஹிந்திரா மராஸ்ஸோ இன்னும் பிஎஸ்6 தரத்திற்கே அப்டேட் செய்யப்படவில்லை. க்ரிஸ்ட்டாவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டின் அறிமுகம் வரும் தீபாவளி பண்டிக்கையின்போது இருக்கலாம்.

Most Read Articles
English summary
Toyota Innova Crysta CNG Spotted Testing, Launch Most Likely This Diwali
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X