விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்ஃலிப்ட் மாடலை டொயோட்டா நிறுவனம் இந்தோனேஷியா சந்தையில் கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த எம்பிவியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன், இந்திய சந்தையில் நடப்பு மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஒரு சில டீலர்ஷிப்களில் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

ஆனால் இந்த செய்தியை டொயோட்டா நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. விற்பனைக்கு அறிமுகமாகும் நாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

1. வெளிப்புற தோற்றம்

இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்தான் இந்தியாவிற்கும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைனை பொறுத்தவரை, முன் பகுதியில் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஃபேஸ்ஃலிப்டுக்கு முந்தைய மாடலில் உள்ள க்ரோம் பூசப்பட்ட இரண்டை போல் அல்லாமல், புதிய ரேடியேட்டர் க்ரில் ஐந்து கிடைமட்டமான ஸ்லாட்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

அதேபோல் பனி விளக்குகள் அறையும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர புதிய டைமண்ட்-கட் அலாய் வீல்களும் வழங்கப்படலாம். ஆனால் அவை டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பின் பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என தெரிகிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

2. உட்புறம்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்டீரியர் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் மேம்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் ஒட்டுமொத்த கேபின் லேஅவுட் அப்படியே இருப்பதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

3. பவர்ட்ரெயின்

2.7 லிட்டர் நான்கு-சிலிண்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் தக்க வைக்கப்படும் என கூறப்படுகிறது. அதே சமயம் பெட்ரோல் இன்ஜினுடன் புதிய சிஎன்ஜி வேரியண்ட் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் 166 பிஎஸ் பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. டீசல் இன்ஜின் 150 பிஎஸ் பவர் மற்றும் 360 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்ய கூடியது.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

4. வசதிகள்

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் வசதிகளுடன் 9 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

5. எதிர்பார்க்கப்படும் விலை

தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலை 15.66 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 23.63 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதால், அதற்கு ஈடாக டொயோட்டா நிறுவனம் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

தற்போதைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை 50,000 ரூபாய் அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை உயர்த்தப்பட்டாலும், அதற்கு ஏற்ப பல்வேறு அப்டேட்களை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் பெற்றிருக்கும்.

Most Read Articles

English summary
Toyota Innova Crysta Facelift: All You Need To Know. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X