Just In
- 4 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- Movies
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- News
சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரின் தோற்றம் இவ்வாறுதான் இருக்கும்!! இணையத்தில் கசிந்த தகவல்
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் கார் வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனால் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் சில யூனிட்கள் டீலர்ஷிப் ஷோரூம்களின் வளாகங்களை சென்றடைய துவங்கியுள்ளன.

இதற்கிடையில் தான் தற்போது இன்னோவா ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புற மற்றும் உட்புற அப்டேட்கள் கார்வாலே செய்திதளம் மூலமாக கிடைத்துள்ளன. இதுதொடர்பான படங்களின் மூலமாக முன்பக்கத்தில் இந்த டொயோட்டா கார் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்-ஆக பியானோ கருப்பு நிறத்தில் ட்ரெப்சாய்டல் தோற்றத்தில் க்ரில் அமைப்பை பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

க்ரில்லின் மூன்று பக்கங்களிலும் க்ரோம் பார்டர் உள்ளது. க்ரில்லிற்கு இரு முனைகளிலும் புதிய ஹெட்லைட் செட்அப் இந்த படங்களில் காட்சியளிக்கிறது. அதேபோல் முன்பக்க பம்பரும் அடிப்பகுதியில் ஃபாக் விளக்குகள் மற்றும் இரு முனைகளிலும் இண்டிகேட்டர் விளக்குகளுடன் மறுவேலை செய்யப்பட்டுள்ளது.

மற்றப்படி காரின் பக்கவாட்டு மற்றும் பின்புற பகுதிகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. பக்கவாட்டில் கவனிக்கத்தக்க அப்கிரேட் என்று பார்த்தால் புதிய டிசைனில் 16 இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களை சொல்லலாம்.

உட்பக்க கேபின் ஆனது அப்டேட்டாக புதிய 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை ஏற்றுள்ளது. இது தற்போது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இருக்கைகள் புதிய கோல்டன் நிற லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் டாப் வேரியண்ட்கள் காற்று சுத்திகரிப்பானையும் பெற்றுவரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் ஜி, ஜி+, ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என்ற ஐந்து வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

இயக்க ஆற்றல் வழங்குவதற்கு பிஎஸ்6 தரத்திலான 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களை தேர்வுகளாக 2021 இன்னோவா க்ரிஸ்ட்டாவில் டொயோட்டா நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படும்.

க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய இன்னோவாவை காட்டிலும் ரூ.30,000- ரூ.60,000 வரையில் அதிகப்படியான விலையினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுதான், 2021 டொயோட்டா இன்னோவாவின் அறிமுகம் வரும் நாட்களில் இருக்கும்.