நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்? முழு விபரம்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய அறிமுக விபரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்? முழு விபரம்

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்புகளில், இன்னோவா க்ரிஸ்ட்டா முதன்மையானதாக உள்ளது. அத்துடன் பிரீமியம் எம்பிவி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் தயாரிப்பாகவும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இருந்து வருகிறது.

நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்? முழு விபரம்

இன்னோவா என்ற பெயருக்கு இருந்த பிரபலத்தை பயன்படுத்தி கொண்டு, அதை விட மேம்பட்ட வகையில் இரண்டாவது தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது. விற்பனைக்கு வந்தவுடனேயே இந்த கார் சந்தையில் உடனடியாக பிரபலமாகி விட்டது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்? முழு விபரம்

இந்த 4 ஆண்டுகளில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பெரிதாக எந்தவொரு அப்டேட்டையும் பெறவில்லை. எனவே தற்போதைய தலைமுறை மாடலின் ஆயுளை நீட்டிக்க வேண்டுமென்றால், தென்கிழக்கு ஆசிய சந்தைகளை போல், இந்தியாவும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பெற வேண்டிய நேரம் இது.

நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்? முழு விபரம்

இதன்படி டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் பெங்களூருக்கு அருகே பிடதியில் உள்ள டொயோட்டா ஆலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகம் தள்ளிப்போகலாம் எனவும் கூறப்பட்டது.

நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்? முழு விபரம்

ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல், இந்திய சந்தையில் வரும் நவம்பர் 20ம் தேதி (நாளை மறுநாள்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடலின் முன் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்? முழு விபரம்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், க்ரோம் பூச்சுகளின் அளவு அதிகரிக்கப்பட்ட பெரிய முன் பக்க க்ரில், எல்இடி டிஆர்எல்கள் உடன் நேர்த்தியான ஹெட்லேம்ப்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் புதிய 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களை டொயோட்டா வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்? முழு விபரம்

ஆனால் பின் பகுதியில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் புதிய ட்வின்-போடு இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் 9 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்களுடன் மல்டி ஃபங்ஷனல் ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகளை இந்த புதிய மாடல் பெற்றிருக்கலாம்.

நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்? முழு விபரம்

இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கூல்டு க்ளவ்பாக்ஸ் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படலாம். மேலும் 7 ஏர்பேக்குகள், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ரிவர்ஸ் கேமரா, ஆம்பியண்ட் லைட் உள்ளிட்ட வசதிகளுடனும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் 150 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 2.4 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜினும், 166 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 2.7 லிட்டர் நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினும் இந்திய சந்தையில் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அப்டேட்கள் காரணமாக விலை சற்று உயர்த்தப்படலாம்.

Most Read Articles

English summary
Toyota Innova Crysta Facelift Launch Date Leaked. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X