இன்னோவாவின் ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனையில் இருந்து விலகிகொண்டது டொயோட்டா- இனி எங்கும் கிடைக்காது

டொயோட்டா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து இன்னோவா டூரிங் ஸ்போர்ட் காரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இன்னோவாவின் ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனையில் இருந்து விலகிகொண்டது டொயோட்டா- இனி எங்கும் கிடைக்காது

இணைய பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டிருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. வழக்கமான இன்னோவா காரில் இருந்து வேறுபடும் வகையில் ஸ்போர்டியர் பண்பை பெற்றுவந்த இன்னோவா டூரிங் ஸ்போர்ட் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.19.53 லட்சத்தில் இருந்து ரூ.24.67 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டது.

இன்னோவாவின் ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனையில் இருந்து விலகிகொண்டது டொயோட்டா- இனி எங்கும் கிடைக்காது

150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.4 லிட்டர் டீசல் மற்றும் 166 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வழங்கக்கூடிய 2.7 லிட்டர் பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் வழங்கப்பட்டு வந்தது.

இன்னோவாவின் ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனையில் இருந்து விலகிகொண்டது டொயோட்டா- இனி எங்கும் கிடைக்காது
Toyota Innova Touring Sport Toyota Innova Difference
Petrol MT (VX) ₹19.53 Lakh ₹19 Lakh ₹53,000
Petrol AT (ZX) ₹22.46 Lakh ₹21.78 Lakh ₹68,000
Diesel MT (VX) ₹22.27 Lakh ₹20.89 Lakh ₹1.38 Lakh
Diesel AT (ZX) ₹24.67 Lakh ₹23.63 Lakh ₹1.04 Lakh

இதில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட்ட டீசல் வேரியண்ட்டின் விலை ஸ்டாண்டர்ட் இன்னோவா காரின் விலையை காட்டிலும் சுமார் ரூ.1.38 லட்சம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. விலை அதிகரிப்புகளுக்கு ஏற்ப இந்த ஸ்பெஷல் எடிசனின் அனைத்து ட்ரிம்களிலும் கவனிக்கத்தக்க வகையிலான காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இன்னோவாவின் ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனையில் இருந்து விலகிகொண்டது டொயோட்டா- இனி எங்கும் கிடைக்காது

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், கருப்பு நிறதில் அலாய் சக்கரங்கள், ஸ்மோக்டு ஹெட்லேம்ப்கள் மற்றும் மூடுபனி விளக்குகள், டெயில்லேம்ப்களை இணைக்கும் கருப்பு நிற பிளாஸ்டிக் ட்ரிம் உள்ளிட்டவை அடங்கும். டூரிங் ஸ்போர்ட் முத்திரை பின்பக்க கதவில் வழங்கப்பட்டிருந்தது.

இன்னோவாவின் ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனையில் இருந்து விலகிகொண்டது டொயோட்டா- இனி எங்கும் கிடைக்காது

வைல்டுஃபையர் சிவப்பு மற்றும் பேர்ல் வெள்ளை என்ற இரு நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த லிமிடேட் எடிசன் காரில் உட்புறமும் வெளிப்புறத்திற்கு ஏற்ப கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிவப்பு நிற தையல்களும் அங்கங்கு தென்பட்டன.

இன்னோவாவின் ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனையில் இருந்து விலகிகொண்டது டொயோட்டா- இனி எங்கும் கிடைக்காது

டேஸ்போர்டிற்கு மேற்புறத்தில் ஃபாக்ஸ் வுட் சிவப்பு நிறத்திலும், ஸ்டேரிங் சக்கரம் கருப்பு நிறத்தில் காட்சியளித்தன. மற்றப்படி, நாவிகேஷன், க்ரூஸ் கண்ட்ரோல், க்ளைமேட் கண்ட்ரோல், தானியங்கி ஹெட்லேம்ப்கள், 7 காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றில் எந்த அப்கிரேடும் இல்லை.

இன்னோவாவின் ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனையில் இருந்து விலகிகொண்டது டொயோட்டா- இனி எங்கும் கிடைக்காது

வருகிற 2021ஆம் ஆண்டில் இன்னோவாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டாடா ஹெக்ஸா பிஎஸ்6 கார்களுக்கு போட்டியாக வெளிவரும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட போவதில்லை என்றாலும், இதன் ஆரம்ப விலை ரூ.16 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.

Most Read Articles
English summary
Toyota Innova Crysta Touring Sport removed from website
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X