டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் இனி பவர்ஃபுல் டீசல் எஞ்சின் இல்லை!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் தேர்வு இனி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் இனி பவர்ஃபுல் டீசல் எஞ்சின் இல்லை!

இந்தியாவின் தன்னிகரற்ற எம்பிவி கார் மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வலம் வருகிறது. எத்துனை புதிய மாடல்கள் வந்தாலும், இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு தனி மதிப்பு இருந்து வருகிறது. ஆளுமையான தோற்றம், இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், சொகுசு கார்களுக்கு இணையான பயண அனுபவம் என அனைத்திலும் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் இனி பவர்ஃபுல் டீசல் எஞ்சின் இல்லை!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. இதில், பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் இனி பவர்ஃபுல் டீசல் எஞ்சின் இல்லை!

இதன் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். விலை உயர்ந்த மாடலில் வழங்கப்படும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் 172 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருந்தது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் இனி பவர்ஃபுல் டீசல் எஞ்சின் இல்லை!

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு ஒப்பாக 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த எஞ்சின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் இனி பவர்ஃபுல் டீசல் எஞ்சின் இல்லை!

இதன் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்6 தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இன்னோவா க்ரிஸ்ட்டா எஸ்யூவியில் 2.8 லிட்டர் பிஎஸ்6 மாடல் அறிமுகம் செய்யப்படாது என்று ஆட்டோகார் இந்தியா தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் இனி பவர்ஃபுல் டீசல் எஞ்சின் இல்லை!

மிகவும் சக்திவாய்ந்த இந்த டீசல் எஞ்சின் தேர்வு நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. மிகவும் விலை உயர்ந்த இந்த டீசல் தேர்வு செயல்திறனில் சிறப்பாக இருந்து வந்தது. அதேநேரத்தில், பிஎஸ்6 தரத்திற்கு இணையான 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் இனி டொயோட்டா ஃபார்ச்சூனரில் வழங்கப்படும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் இனி பவர்ஃபுல் டீசல் எஞ்சின் இல்லை!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என இரண்டு விதமான இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது. வசதிகள், எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளை பொறுத்து ஜி, ஜிஎக்ஸ், ஜி ப்ளஸ், விஎக்ஸ், டூரிங் ஸ்போர்ட், லீடர்ஷிப் எடிசன் உள்ளிட்ட பல்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் இனி பவர்ஃபுல் டீசல் எஞ்சின் இல்லை!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பிஎஸ்6 பெட்ரோல் மாடலானது ரூ.15.36 லட்சம் முதல் ரூ.22.02 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், பிஎஸ்6 டீசல் மாடலானது ரூ.16.14 லட்சம் முதல் ரூ.24.06 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
According to a media report, Toyota had decided to remove 2.8 liter diesel engine option from Innova Crysta due to BS6 emission standards came to effect in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X