2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

2021 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான ஆக்ஸஸரீகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை ரூ.16.26 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

இந்த விலையில் இதன் ஆரம்ப நிலை ஜிஎக்ஸ் வேரியண்ட் கிடைக்கும். அதேநேரம் இதன் டாப் வேரியண்ட் இசட்எக்ஸ் ட்ரிம் ரூ.24.33 லட்சத்தில் கிடைக்கிறது. இவற்றுடன் ஜி, ஜி+, ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ட்ரிம்களிலும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் கிடைக்கிறது.

2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

ஃபேஸ்லிஃப்ட் வருகையினால் இவற்றின் விலைகள் ரூ.20,000ல் இருந்து ரூ.70,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா 2016ல் விற்பனைக்கு வந்தது. அதற்கு பிறகு இந்த கார் சந்தித்துள்ள மிக பெரிய அப்டேட் இதுவாகும். இந்திய சந்தையில் இந்த எம்பிவி காருக்கு போட்டி மாடல் எதுவும் இல்லை.

2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

முதன்முதலில் இன்னோவா பெயரில் அறிமுகமான இந்த டொயோட்டா தயாரிப்பு கிட்டத்தட்ட 15 வருடங்களாக விற்பனையில் உள்ளது. இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் முன்பக்கத்தில் புதிய ஸ்லாட்களுடன் பெரிய க்ரில் அமைப்பு தடிமனான க்ரோம்-ஐ சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

அதேபோல் பெரிய டர்ன் இண்டிகேட்டர்களுடன் முன் பம்பரின் டிசைன் திருத்தியமைக்கப்பட்டும், வட்ட வடிவிலான எல்இடி ஃபாக் விளக்குகள் கருப்பு நிற கன்னம் பகுதியுடனும் வழங்கப்பட்டுள்ளன. 16 இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதினால் காரின் பக்கவாட்டு மற்றும் பின்பகுதிகளில் எந்த மாற்றம் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்றத்தை மேலும் மெருக்கேற்றும் நோக்கில் புதிய ஆக்ஸஸரீ தொகுப்புகளை டொயோட்டா வழங்கியுள்ளது.

2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

இந்த வகையில் காரை சுற்றிலும் ஏராளமான க்ரோம் துண்டுகளை வாடிக்கையாளர்கள் சேர்க்கலாம். இந்த புதிய ஆக்ஸஸரீ லிஸ்ட்டில் பம்பர் பாதுகாப்பான், ஜன்னள் விஸர்கள், சைடு மோல்ட்டிங், பின்பக்க கதவு லிட் கார்னிஷ், லைசன்ஸ் தட்டை சுற்றிலும் க்ரோம், கதவு ஹேண்டில் ஹௌசிங் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

இவை மட்டுமின்றி மேற்கூரை ராக், ஒளியூட்டப்பட்ட ஸ்கம் தட்டுகள், பின்பக்க பம்பர் நிறுத்து பாதுகாப்பான், மட்கார்ட்கள், கார் கவர், ரூஃப் ஸ்பாய்லர் கார்னிஷ், கதவுகளில் இறக்குவதற்கு மற்றும் ஏறுவதற்கு ஒளி கொடுக்கும் விளக்குகள், டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டிவிஆர், காற்று அயனியாக்கி போன்றவையும் ஆக்ஸஸரீகளாக புதிய இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு டொயோட்டா வழங்கியுள்ளது.

2021 டொயோட்டா இன்னோவாவிற்கான ஆக்ஸஸரீகள்..! இதையெல்லாம் பொருத்தினால் கார் லெவலுக்கு மாறும்

2021 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ற இரு என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota Innova Crysta Facelift Accessories List Detailed
Story first published: Thursday, December 17, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X